பல்கலைக்கழகத்தில் இந்துமத வெறுப்புப் பேச்சு- பேராசிரியர் மீது LRO புகார்.! @Legallro
By : Saffron Mom
கல்லூரி மாணவர்களை தங்கள் வேர்களில் இருந்து பிரித்து, தங்கள் சொந்த மதத்தின் மீதே வெறுப்பை உண்டாக்கி பிறகு தங்கள் தேச விரோத நடவடிக்கைகளுக்கு அவர்களை பயன்படுத்துவது பெரும் அச்சுறுத்தலாக மாறி வருகிறது. சில பல்கலைக்கழகங்கள் இதற்கு சுதந்தரம் அளிப்பதோடு ஏற்பாடும் செய்து தருகின்றன.
FCRA விதிமீறல்கள் மற்றும் வெளிநாட்டு நிதி சட்டவிரோதமாகப் பயன்படுத்தப்படுவதைக் கண்காணிக்கும் சட்ட உரிமைகள் ஆய்வகம் (LRO), மும்பை பல்கலைக்கழகத்தின் Institute of Distance and Open Learning (IDOL) வரலாற்று பேராசிரியர் அனில் பங்கேர் என்பவர் மீது கல்வி அமைச்சகத்திடம் புகார் அளித்துள்ளதாக அறிவித்துள்ளனர்.
அந்த பேராசிரியர், ஹிந்து மதத்தை அவதூறாக பேசும் ஷ்ரவன் தியோரின் வகுப்புகளை கல்லூரியில் ஒருங்கிணைத்ததற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். மேலும் பிரிவு 153A மற்றும் 295A வின் கீழ் ஹிந்து உணர்வுகளை புண்படுத்தியதற்காக வழக்கு வேண்டும் என மும்பை போலீசாரிடம் கேட்டுக் கொண்டுள்ளனர்.
இளம் வயது மாணவர்களை இத்தகைய நச்சு பேச்சிடமிருந்து காக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என பலரும் எதிர்பார்கின்றனர்.