Kathir News
Begin typing your search above and press return to search.

ஆப்கானிஸ்தான்: வாழ்வின் விளிம்பில் இந்து, சீக்கியர்கள்- இந்தியா கைகொடுக்குமா?

சமீபத்தில் நடந்த நிகழ்வுகள், மற்ற கலாச்சாரங்கள் மற்றும் இந்தியாவை நோக்கி தலிபான்கள் ஆக்ரோஷமாக இருப்பதை காட்டுகின்றன.

ஆப்கானிஸ்தான்: வாழ்வின் விளிம்பில் இந்து, சீக்கியர்கள்- இந்தியா கைகொடுக்குமா?

Saffron MomBy : Saffron Mom

  |  10 Aug 2021 12:30 PM GMT

ஆப்கானிஸ்தானில் கடந்த சில மாதங்களாக நிலைமை மிகவும் மோசமாக உள்ளது. ஆப்கானிஸ்தானின் 85 சதவிகிதத்தை ஏற்கனவே கைப்பற்றியதாகக் கூறும் தலிபான்கள், அப்பாவி மக்களைக் கொன்று குவித்து வருகிறார்கள். தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் ஷரியா சட்டத்தை அமல்படுத்தி, குழந்தைகளை மனிதக் கேடயமாகப் பயன்படுத்தி, பெண்களைக் கடத்தி, பாலியல் அடிமைத்தனத்திற்கு கட்டாயப்படுத்துகிறது.

ஆப்கானிஸ்தானில் மத சிறுபான்மையினர் எப்போதும் தலிபான்களின் துப்பாக்கி முனையில் இருந்தனர். ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷில் கூட, தொடர்ந்து சிறுபான்மையினருக்கு எதிராக பாகுபாடு காட்டப்படுகிறது, அவர்களின் வழிபாட்டு இடம் அழிக்கப்பட்டோ அல்லது அழிக்கப்பட்டு விடும் என்ற அச்சுறுத்தலிலேயோ உள்ளது.

மார்ச் 2001 இல் தாலிபான் தலைவர் முல்லா முகமது உமர், பாமியனில் உள்ள ஆறாம் நூற்றாண்டு பழமையான புத்தர் சிலைகளை வெடிக்க வைக்க உத்தரவிட்டார். இதன் மூலம் தலிபான், சிலை வழிபாட்டிற்கு எதிரானது, ஷரியாவை மறுக்கும் எவரையோ அல்லது இஸ்லாம் தவிர வேறு எந்த மதம், நடைமுறையை பின்பற்றுபவரையோ விடாது என தெளிவுபடுத்தியது. .

கடந்த வாரம், தலிபான்கள் சீக்கிய மதக் கொடியை - நிஷான் சாஹிப் - குருத்வாரா தல சாஹிப்பின் கூரையிலிருந்து அகற்றினர். பின்னர், இந்தியா இந்தச் செயலைக் கண்டித்தபோது, ​​ஆகஸ்ட் 6 அன்று அது மீட்டெடுக்கப்பட்டது.

கடந்த மாதத்தில் நடந்த இந்த நிகழ்வுகள், மற்ற கலாச்சாரங்கள் மற்றும் இந்தியாவை நோக்கி தலிபான்கள் ஆக்ரோஷமாக இருப்பதை சுட்டிக்காட்டுகின்றன.

ஆகஸ்ட் மாதத்திற்கான ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு கவுன்சிலின் (UNSC) தலைவராக பொறுப்பேற்ற பிறகு, ஆப்கானிஸ்தானில் நடந்த பயங்கரவாத தாக்குதல்களை இந்தியா கண்டித்துள்ளது மற்றும் தலிபான்களின் ராணுவ தாக்குதல் குறித்து ஆழ்ந்த கவலை தெரிவித்துள்ளது.


ஆப்கானிஸ்தானின் மக்கள்தொகை கணக்கைப் பார்க்கும் போது, 90 சதவிகிதத்திற்கும் அதிகமான ஆப்கான் சீக்கியர்கள் மற்றும் இந்துக்கள் கொல்லப்பட்டனர் அல்லது நாட்டை விட்டு வெளியேறிவிட்டனர். தலிபான்களின் எழுச்சி காரணமாக மீதமுள்ள மக்கள் அச்சத்தில் வாழ்கின்றனர்.

அறிக்கைகளின்படி, ஆப்கானிஸ்தான் சீக்கியர்கள் மற்றும் இந்துக்களில் சுமார் 220,000 பேர் 1980 களில் ஆப்கானிஸ்தானில் வாழ்ந்தனர். இது 1990களில் முஜாஹிதீன் ஆட்சியின் போது 15,000 ஆகக் குறைந்தது, 2016 வாக்கில் இந்து மற்றும் சீக்கிய மக்கள் தொகை 1,350 ஆகக் குறைந்தது.

தேர்தல் ஆணையத்தின் (IEC) படி, ஆப்கானிஸ்தானில் 2018 அக்டோபர் தேர்தலில் 583 இந்துக்கள் மற்றும் சீக்கியர்கள் மட்டுமே வாக்களிக்க பதிவு செய்யப்பட்டனர்.

2019 ஆம் ஆண்டிற்கான அமெரிக்க வெளியுறவுத் துறையின் சர்வதேச மத சுதந்திர அறிக்கை, "சீக்கிய மற்றும் இந்து தலைவர்கள் தகவலின் படி, 120 சீக்கிய மற்றும் இந்து குடும்பங்கள் (550 பேர்) பெரும்பாலும் காபூலிலும், நங்கர்ஹார் மற்றும் கஸ்னி மாகாணங்களில் ஒரு சில சமூகங்களும் உள்ளன." எனத் தெரிவிக்கிறது.

ஆப்கானிஸ்தானின் பெரும்பகுதியை தலிபான் தன் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதால், ஆப்கான் சீக்கியர்களும் இந்துக்களும் ஆப்கானிஸ்தானில் இருந்து தங்களை வெளியேற்ற உதவுமாறு சர்வதேச சமூகத்திற்கு ஜூலை மாதத்தில், வேண்டுகோள் விடுத்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. காபூலில் 150 சீக்கியர்களும் இந்துக்களும் உயிருக்கு பயந்து வாழ்கின்றனர்.

ஜூலையில், ஆப்கானிஸ்தானின் ஜலாலாபாத்தில், குருத்வாரா குரு நானக் தர்பார் அருகே அமைந்துள்ள ஒரு கடையில் சக்திவாய்ந்த குண்டுவெடிப்பு ஏற்பட்டதில் சீக்கிய சமூகத்தைச் சேர்ந்த இரண்டு பேர் காயமடைந்தனர்.

கனடாவிலிருந்து உதவியை அவர்கள் எதிர்பார்க்கிறார்கள். துரதிர்ஷ்டவசமாக, கனேடிய அரசாங்கம் அவர்களின் கோரிக்கையை (ஆப்கானிய சீக்கியர்கள் மற்றும் இந்துக்கள்) நிராகரித்தது. தலிபான்களால் தாக்கப்படும் அபாயத்தில் இருக்கும் 200 ஆப்கானிய சீக்கியர்கள் மற்றும் இந்துக்களை 'மீள்குடியேற்றத் திட்டத்தில்' சேர்க்குமாறு உலக சீக்கிய அமைப்பு கனேடிய அரசாங்கத்திடம் முறையிட்டது, ஆனால் அதன் வேண்டுகோள் புறக்கணிக்கப்பட்டது.

ஆப்கானிஸ்தானில் வாழும் இந்துக்கள் மற்றும் சீக்கியர்களுக்கு உயிர்வாழ்வது கடினமாகிவிட்ட சூழ்நிலையில், இந்தியா இந்த சவாலான காலங்களில் அவர்கள் நாட்டை விட்டு வெளியேற உதவுவதற்கு மட்டுமல்லாமல், அவர்களின் பாதுகாப்பிற்கும் ஒரே நம்பிக்கை என்று தெரிகிறது.


Cover Image Courtesy: The NewYork Times

Next Story
கதிர் தொகுப்பு
Trending News