'இந்து, இந்துத்துவம், இந்துராஷ்ட்ரம்' - உண்மை விளக்கங்களும் கட்டுக்கதைகளும் !
By : Saffron Mom
'இந்துத்துவா, இந்து மதம், இந்து ராஷ்டிரா, இந்து தர்மம்' உள்ளிட்ட பல வார்த்தைகளுக்கான தெளிவான அர்த்தங்களையும், அது குறித்த தவறான கருத்துக்களையும் உடைக்கும் வகையில் "The Nationalist View' யூ ட்யூப் பக்கத்தில் பத்திரிகையாளர் திரு அருண் ஆனந்த் வெளியிட்ட வீடியோவின் தமிழ் சாராம்சத்தை இந்த கட்டுரையில் நாங்கள் விளக்குகிறோம்.
"இந்துத்துவாவை எதிர்ப்பவர்கள், இந்து மதம் வேறு இந்துத்துவா வேறு என்றெல்லாம் கூறுகிறார்கள். அதாவது இந்து மதம் என்பது ஒரு மென்மையான (Soft ) விஷயம் என்றும் இந்துத்துவா என்பது ஒரு பிளவுபடுத்தும் சித்தாந்தம் என்றும் கூறுகிறார்கள். எனவே இந்து, இந்து மதம், இந்துத்துவா இந்து ராஷ்டிரா என பயன்படுத்தப்படும் சொற்களின் கருத்து என்ன என்பதை இந்த வீடியோவில் நாம் விளக்கலாம்.
இந்து மதம் என்பது அடிப்படையில் ஒரு பக்தி வாழ்க்கையின் வெளிப்பாடாகும். இது சனாதனத்தை அடிப்படையாகக் கொண்டது. சனாதன தர்மம் அதை ஒரு உறுதியான வாழ்க்கை முறையாக மாற்றியது. எனவே இந்து என்ற வார்த்தையின் ஆங்கில மொழிபெயர்ப்பு இந்துத்துவம் ஆக இருக்க வேண்டும்.
'இந்துத்துவா' என்பது ஒரு அரசியல் சித்தாந்தம் அல்ல. இது ஒரு கலாச்சார சூழலில் வேரூன்றி இருக்கிறது. இது ஒரு அரசியல் சித்தாந்தம் என்றோ அல்லது ஒரு பிரித்தாளும் சித்தாந்தம் என்றோ கூறுவது சரியாக இருக்கும் என்று நான் நினைக்கவில்லை. இந்து என்றால் என்ன? உண்மையில் இந்துத்துவாவிற்கும் இந்து மதத்திற்கும் இடையில் முரண்பாடு இல்லை. சொல்லப்போனால் இதைக்குறித்து ஒரு போலியான கட்டமைப்புகள் (narratives) உருவாக்கப்பட்டுள்ளன.
குறிப்பாக இந்து ராஷ்டிரா என்ற பெயரில் நீங்கள் இந்த நாட்டை ஒரு மத நாடாக (theocratic) மாற்ற போகிறீர்களா என்று இந்துத்துவாவின் ஆதரவாளர்களை அடிக்கடி குற்றம்சாட்டுகிறார்கள். எனவே ஹிந்து ராஷ்டிரா என்றால் என்ன என்பது குறித்து இன்று பார்ப்போம். இதில் ஒரு குழப்பத்திற்கு காரணம் உள்ளது. இதற்கு காரணம் என்றால் 'ராஷ்ட்ரா' என்றால் தேசிய அரசு (nation state) என்ற ஒரு கருத்து நிலவுகிறது. இது ஒரு ஆங்கில வார்த்தை. இதற்கு முக்கிய காரணம், ஐரோப்பாவில் 14 மற்றும் 15 ஆம் நூற்றாண்டுகளில் இருந்த இறையாட்சி நாட்டுக்கு எதிராக உருவான ஒரு எதிர்வினையே நேஷன் ஸ்டேட்.
ஆனால் இந்தியாவில் இது ஒரு காரணமாக இருப்பதில்லை. இங்கே ராஷ்ட்ரா என்ற வார்த்தையை நீங்கள் நாடு என்று மொழிபெயர்க்கலாம். ஆனால் அது நாட்டிலிருந்து மிகவும் வித்தியாசமானது. இங்கே ராஷ்டிரா என்ற வார்த்தை வேத கால கட்டங்களில் இருந்து இருந்துள்ளது. பாரத நாட்டில் வசிக்கும் அனைத்து மக்களும் ஒரு தனித்துவமான கலாச்சாரம் அல்லது வாழ்க்கை முறையின் மூலம் ஒன்றிணைக்கபட்டுள்ளனர். இதற்கான சரியான சொல் சன்ஸ்க்ரிதி.
உண்மையில் தேசம் என்பதற்கும் நாடு என்பதற்கும் வேறுபாடு உள்ளது. நாடு என்பது ஒரு அரசியல் சங்கம். ஆனால் தேசம் என்பது மக்கள் சங்கம். எனவே இந்து ராஷ்டிரம் என்பதை பற்றி பேசும் பொழுது அது ஒரே கலாச்சார மதிப்புகளை பகிர்ந்துகொள்ளும் மக்களை பற்றி பேசுகிறோம், நாட்டை பற்றி அல்ல. எனவே நம்முடைய மக்களை பற்றியதுதான் இந்து ராஷ்டிரம். இது புவியியல் சார்பானது அல்ல. இது ஒரு தனித்துவமான மக்களின் வாழ்க்கை வழியாக நிற்கிறது.
இந்த மண்ணில் வாழ்ந்தவர்களை குறிக்கிறது. ஒரு சமூகத்தின் இந்த நிலத்தில் மக்கள் அவர்கள் வாழ்ந்த விதம், ஒவ்வொரு மனிதனுக்கும் உள்ள தெய்வீகத்தை அங்கீகரிப்பதுதான் நம் சமூகத்தின் இந்துத்துவம் அடங்கியிருக்கிறது. ஹிந்து ராஷ்டிரத்தின் அடிப்படை என்னவென்றால் மதம் என்பது ஒரு தனிப்பட்ட விஷயம். அதில் எந்த தலையீடும் இருக்காது. மேலும் ஒவ்வொருவரும் தங்கள் மதத்தை வெளிப்படுத்த அங்கு சுதந்திரம் உள்ளது. அப்படி என்றால் அதை ஹிந்து ராஷ்டிரம் என ஏன் அழைக்க வேண்டும் எனக் கேட்கலாம்?
இதில் தான் ஒட்டுமொத்த குழப்பமும் அடங்கியிருக்கிறது. ஏனெனில் தர்மமும் மதமும் ஒன்றல்ல. மதம் என்பது ஒரு குறிப்பிட்ட வகையிலான வழிபாட்டை குறிக்கிறது. ஆனால் தர்மம் என்பது வாழ்வின் முறை. நம் நாட்டில் பல மதங்கள் உள்ளன. இஸ்லாம், கிறிஸ்தவம், யூதர்கள் என பலரும் உள்ளனர். ஆனால் ஒரே ஒரு தர்மா தான் உள்ளது. அது நம்முடைய நாகரீக மதிப்புகளின் அடிப்படையாக வைத்துள்ள ஒரு குறிப்பிட்ட வாழ்க்கை முறையாகும். எனவே இந்து தர்மம் என்பது ஒரு மதத்துடன் ஈடுசெய்ய முடியாது. அது வித்தியாசமானது. ஹிந்து தர்மம் நம்முடைய நாகரீக மதிப்புகளை பற்றி பேசுகிறது. இந்து தர்மாவின் அடிப்படையானது நிலையான நாகரீக மதிப்புகளை பேசுகிறது.
அது ஒரு குறிப்பிட்ட வழிபாடு முறை அல்ல. வழிபாட்டு முறை என்பது ஒரு மதத்தின் அடிப்படையானது. எனவே நாம் ஹிந்து ராஷ்டிரத்தைப் பற்றி பேசும்போது, நாம் ஒரு நிலையான நாகரீக மதிப்புகளை பகிர்ந்து கொள்ளும் நாடு அல்லது மக்களின் குழுக்களைப் பற்றி பேசுகிறோம். எனவே இதில் எந்த மதச் சார்புடைய நோக்கமும் அல்ல. அப்படி என்றால் தர்மம் என்பது என்ன? தர்மா என்பது ஒரு வாழ்க்கை முறை. 'மூன்றாவது வழி' என்ற புத்தகத்தில் தர்மா என்பது என்றும் மாறாத நிலையான உலக சட்டங்களையும், எப்பொழுதும் மாறிக் கொண்டே இருக்கிற சமூக பொருளாதார ஒழுங்கையும் உள்ளடக்கியது என்று கூறப்பட்டுள்ளது.
அனைத்து வேறுபாடுகளுக்கும் மத்தியில் ஒருமைப்பாடு உணரப்பட்டது. இதைத்தான் சனாதன தர்மம் அல்லது இந்து தர்மம் என்று அழைக்கிறோம். தற்பொழுது மதச்சார்பின்மை என்ற கருத்துக்கு வருவோம். மதச்சார்பின்மை என்பது உண்மையில் இந்த நாட்டில் மிகவும் தவறாக பயன்படுத்தப்படும் சொற்களின் ஒன்றாகும். இது 1976இல் நமது அரசியலமைப்புச் சட்டத்தில் சேர்க்கப்பட்டது. உண்மையான அரசியல் அமைப்புச் சட்டத்தில் இந்த வார்த்தை இல்லை.
மதச்சார்பின்மை என்ற வார்த்தை இந்தியாவில் பொருத்தமற்றது என்று தான் இது உணரப்படுகிறது. உண்மையில் மதச்சார்பின்மை என்ற கருத்தாக்கம் இந்தியாவில் ஹிந்துவை எதிர்ப்பவர்கள், ஹிந்துக்களை மதச் சார்பற்றவர்கள் என்று கூறுபவர்களால் பின்பற்றப்படுகிறது. உண்மையில் அவர்கள் மேற்கத்திய கட்டமைப்பை பயன்படுத்துகிறார்கள்.
மதச்சார்பின்மை என்ற கருத்து ஐரோப்பாவில் உருவானது. அங்கே உருவான இறையாட்சி நாடுகளுக்கு எதிராக தேவாலயங்களின் கட்டுப்பாட்டில் இல்லாமல் உருவான நாடு மதச்சார்பற்ற நாடு என்று அழைக்கப்பட்டது. ஆனால் இந்தியாவில் எப்பொழுதும் அது போன்ற இறையாட்சி நாடுகள் இருந்ததில்லை. இங்கு பல நூற்றாண்டுகளாக அனைத்து மதங்களும் சமமாக நடத்தப்பட்டிருக்கிறது. இவர்கள் அனைவரும் வெளியில் இருந்து இந்தியாவில் குடியேறி சமமாக நடத்தப்பட்டு எந்த பாகுபாடும் இல்லாமல் சுதந்திரத்தை கடைபிடித்தனர். எனவே இங்கு மதச்சார்பின்மை கருத்தை கொண்டுவர வேண்டிய அவசியம் இல்லை. உண்மையில் மதச்சார்பின்மை என்ற கருத்து சிறுபான்மையினரை திருப்திப்படுத்தும் சூழலில் அதிகம் பயன்படுத்தப்படுகிறது.
அதுபோல தேஷ் என்பது உலகமயமாதலுக்கு எதிரானது என்பது அர்த்தமல்ல. அப்படியானால் நம் நம் நாட்களுக்குள்ளேயே ஒடுங்கி வெளிநாடுகளுக்கு எந்த தொடர்பும் இல்லாமல் இருப்போம் என்றும் அர்த்தமல்ல. அது ஒரு பொருளாதார கருத்தாக்கம் அல்ல. இது ஒரு தேசபக்தியின் வெளிப்புற நடைமுறை வெளிப்பாடு.
ஹிந்துமதம் என்பது மிகவும் சகிப்புத் தன்மை வாய்ந்தது. ஹிந்துக்கள் சகிப்புத்தன்மை அற்றவர்கள் என்றும் அடிக்கடி கூறப்படுகிறது. சொல்லப்போனால் இந்த இடத்தில் சகிப்புத்தன்மை என்ற வார்த்தையை பயன்படுத்துவதே தவறு. இது ஒரு எதிர்மறை வார்த்தை. சுவாமி விவேகானந்தர் 1893 சிகாகோ மாநாட்டில் சென்று 'நாங்கள் சகிப்புத்தன்மை க்கும் அதிகமானவர்கள். நாங்கள் அனைத்து வழிபாட்டு முறைகளையும் உண்மை என்று ஏற்றுக் கொள்கிறோம்' என்று தெரிவித்திருந்தார். எனவே நாம் சரியாக குறிப்பிட வேண்டிய வார்த்தை சகிப்புத்தன்மை அல்ல, ஏற்றுக்கொள்ளுதல்.
கடைசியாக நான் பார்க்க வேண்டியது 'மூன்றாவது வழி' என்ற புத்தகம் குறித்து. அதாவது சோசியலிசம் முதலாளித்துவம் என்பதையும் தாண்டி நமது பிரச்சினைகளுக்கு தீர்வாக ஒரு மூன்றாவது வழி உள்ளது. நமக்கு பொருளாதார ரீதியாகவும் ஆன்மீக ரீதியாகவும் சமமான வாழ்வை கொடுக்கும் ஒரு வாழ்க்கை மூன்றாவது வழி அதாவது நமது 'தர்மம்' என்று இந்த புத்தகம் விவரிக்கிறது.