எப்படி எல்லாம் வீடு கட்டி அசத்துறாங்கப்பா! என்று வித்தியாசமாக வீடு கட்டி வியக்க வைத்த ஒரு மனிதர்
கர்நாடக மாநிலச் சேர்ந்த புகைப்பட கலைஞர் ரவி வித்தியாசமான வீட்டின் அமைப்பின் மூலம் அனைவரின் கவனத்தையும் திருப்பி உள்ளார்.
By : Karthiga
கர்நாடக மாநிலம் பெலகாவி சாஸ்திரி நகரைச் சேர்ந்த புகைப்பட கலைஞர் ரவி ஹெங்கள் கூறியதாவது, நான் கடந்த 1987- ஆம் ஆண்டு புகைப்பட தொழிலை தொடங்கினேன். பி.யூ.சி வரை படித்துள்ளேன். முதலில் சிறிய ஸ்டுடியோ கடையை திறந்து திருவிழா திருமண முன்னேற்ற நிகழ்ச்சிகளில் புகைப்படம் எடுத்தேன். பின்னர் புகைப்படங்கள் எடுப்பதில் தீவிரமாக ஆர்வம் காட்டினேன். அந்த தொழிலை நேசிக்கவும் காதலிக்கவும் தொடங்கினேன். அதுபோல் புகைப்படங்கள் எடுப்பதில் ஆர்வம் காட்டிய ரூபா ராணியை திருமணம் செய்து கொண்டேன்.
எங்களுக்கு மூன்று குழந்தைகள் பிறந்தது. குழந்தைகளுக்கு பெயர் வைக்கும் போது நானும் என் மனைவியும் கேமரா நிறுவனங்கள் பெயரை சூட்ட முடிவு செய்தோம். முதல் மகனுக்கு கெனான் என்றும் இரண்டாவது மகனுக்கு நிகான் என்றும் மூன்றாவது மகனுக்கு எப்சன் என்றும் பெயர் சூட்டினோம். உறவினர்கள் என்னை புத்தி இல்லையா? முட்டாளா என வசை பாடினார்கள் .எனது தொழில் மீது இருந்த காதலால் அது பற்றி நான் கவலைப்படவில்லை .ஓரளவு வளர்ந்த பிறகு எனது மகன்களுக்கும் அந்த பெயர் பிடிக்கவில்லை .ஏனெனில் சக மாணவர்கள் அவர்களை கிண்டல் செய்தனர்.
நாளடைவில் எனது மகன்களும் புகைப்படத்தொழில் மீதான எனது பக்தி காதலை புரிந்து கொண்டு கேமரா நிறுவனங்களில் பெயர்களை வைத்திருப்பதை பெருமையாக பேசி வருகிறார்கள். ரூபாய் 21 லட்சத்தில் தரைத்தளம் முதல் தளம் இரண்டாவது தளத்துடன் கேமரா வடிவில் வீடு கட்டினேன். இதனை நானே வடிவமைத்தேன். ஒரு பெரும் கேமரா ரோல் தொங்குவது, மத்தியில் லென்ஸ் என்று ஒரு கேமரா எப்படி இருக்குமோ அப்படி எனது வீட்டை கட்டினேன் இதனை நானே வடிவமைத்தேன் எனது வீட்டுக்கு 'கிளிக்' என்று பெயர் சூட்டியுள்ளேன்.
தற்போது தொழில்நுட்ப வளர்ச்சி தொழில் பாதிக்கப்பட்டு இருக்கலாம். ஆனால் புகைப்பட கலைஞர்களும் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப தங்களை மாற்றிக் கொண்டுள்ளனர். நானும் தொழில்நுட்பத்திற்கு ஏற்றவாறு புகைப்படத்தொழில் புதுமையை புகுத்தி வருகிறேன். என்னதான் 'செல்பி' எடுத்துக்கொண்டு செல்போனில் புகைப்படங்களை சேமித்து வைத்தாலும், புகைப்படக் கலைஞர் எடுத்த புகைப்படங்களை வீட்டு சுவரில் மாற்றி அழகு பார்க்கும்போதும், திருமண ஆல்பத்தை எடுத்து பார்க்கும்போதும் பழைய நினைவுகளை அசைபோட வைக்கும் தருணத்திற்கு மகிழ்ச்சிக்கும் ஈடு இணை எதுவும் இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.
SOURCE :DAILY THANTHI