Kathir News
Begin typing your search above and press return to search.

QUAD நாடுகளின் கூட்டமைப்பு மாநாடு எந்தளவு முக்கியத்துவம் வாய்ந்தது? ஓர் பார்வை.! #QUAD #Japan #Australia #India #USA

QUAD நாடுகளின் கூட்டமைப்பு மாநாடு எந்தளவு முக்கியத்துவம் வாய்ந்தது? ஓர் பார்வை.!  #QUAD #Japan #Australia #India #USA
X

Saffron MomBy : Saffron Mom

  |  16 March 2021 1:30 AM GMT

தற்காலத்தில் பல நாடுகளுக்கிடையிலான உறவுகளும், ராஜதந்திரமும் 24 மணி நேர ஊடகங்களின் கண்காணிப்பில் நிகழ்கிறது.

தலைப்புச்செய்திகள் போடவேண்டும் என்ற ஒரே நோக்கத்துடனேயே அலையும் ஊடகங்கள் கிட்டத்தட்ட அனைத்து வெளியுறவுக் கொள்கை சந்திப்புகளையும் நிகழ்வுகளையும் 'வரலாற்று' (historic) முக்கியத்துவம் வாய்ந்தது என்றே பெயர் சூட்டுகின்றன.

ஆனால் சமீப காலத்தில் உலக தலைவர்களின் எந்த ஒரு மாநாடு நிஜமாகவே வரலாற்று சிறப்பு வாய்ந்தது என்று கருதப்படலாம் என்றால் அது கடந்த வாரம் நடந்த குவாட் (QUAD) நாடுகளின் மாநாடு தான்.

QUAD நாடுகளின் அமைப்பு என்பது அமெரிக்கா, ஆஸ்திரேலியா, இந்தியா, ஜப்பான் ஆகிய நாடுகளின் கூட்டமைப்பாகும்.

கடந்த வருடம் வரை கூட அவ்வளவாக முன்னேற்றம் காட்டாத இந்த அமைப்பு, கடந்த சில மாதங்களில் பெற்றுள்ள வளர்ச்சியும் முன்னேற்றமும் மிகவும் ஆச்சரியத்திற்குரியது.

அதனுடைய முதல் இணைய (virtual) மாநாடு கிட்டத்தட்ட எல்லாருடைய எதிர்பார்ப்புகளையும் பூர்த்தி செய்தது.

மாநாட்டின் முடிவில் வெளியிடப்பட்ட கூட்டறிக்கை 'தி ஸ்பிரிட் ஆஃப் குவாட்' (The Spirit of QUAD) என பெயரிடப்பட்டது.

அதில், 'சர்வதேச சட்டத்தின் விதிகளை பின்பற்றும் ஒரு திறந்த ,வெளிப்படையான, விதிகள் அடிப்படையிலான ஒழுங்கை ஊக்குவிப்பதும் பாதுகாப்பு மற்றும் செழிப்பை மேம்படுத்துவதற்கும், இந்தோ-பசுபிக் மற்றும் அதற்கு அப்பாலுள்ள அச்சுறுத்தல்களை எதிர்கொள்வதிற்கும் உறுதியளித்தது'.

அதனுடன் சேர்ந்து, 'சட்டத்தின் ஆட்சி, வழிகாட்டுதல், மோதல்களுக்கு அமைதியான தீர்வு, ஜனநாயக கொள்கைகள் மற்றும் பிராந்திய ஒருமைப்பாடு ஆகியவற்றை ஆதரித்தல் ஆகியவையாகும்.

QUAD நாடுகள் இணைந்து வெளியிட்ட முதல் கூட்டறிக்கை இதுதான் என்பது மட்டுமல்லாமல் இதில் பின்பற்றுவோம் என்று கூறியுள்ள உறுதி மொழிகளும் யாரை இது குறி வைக்கிறது (சீனா) என்பதை வெளிப்படுத்தியுள்ளது.

இந்த மாநாடு வேறு எதையும் சாதிக்கவில்லை என்றாலும், இப்படி ஒரு நேரடியான கூட்டு அறிக்கையை வெளியிட்டு இருப்பது மிகுந்த தாக்கத்தை உண்டாக்கும்.

ஆனால் கடந்த வாரம் மாநாட்டின் நோக்கமானது மிகவும் பரந்து விரிந்தது. தற்பொழுது அவசரமாக சந்திக்க வேண்டியிருக்கும் சீனாவின் சவால்களை தாண்டியும் அதனுடைய நோக்கம் சென்றது.

கொரானா வைரசினால் ஏற்பட்ட பொருளாதார மற்றும் சுகாதார தாக்கங்களின் மீது அதனுடைய கவனம் இருந்தது. மேலும் பருவநிலை மாற்றம், இணைய வெளியில் பகிர்ந்து கொள்ளக்கூடிய சவால்கள், முக்கியமான தொழில்நுட்பங்கள், தீவிரவாதத்திற்கு எதிரான செயல்கள், மிகவும் தரம் உடைய உள்கட்டமைப்பு முதலீடு மற்றும் மனிதாபிமான உதவி, பேரழிவிற்கான நிவாரணம் ஆகியவற்றையும் விவாதித்தது.

கடல்சார் வழி பாதுகாப்பு தான் இந்த மாநாட்டின் மையக் கருத்தாக இருந்தது. கடல் வழி தளத்தில் சர்வதேச விதிகளை முன்னுரிமைப்படுத்த வேண்டும். குறிப்பாக 'ஐக்கிய நாடுகள் கடல் வழி சட்ட மாநாட்டில்' குறிப்பிட்டுள்ள விதிகளை பின்பற்ற வேண்டும்.

மேலும் தெற்கு மற்றும் கிழக்கு சீன பகுதிகளில், விதிகளின் அடிப்படையில் வரும் சவால்களை சந்திப்பது குறித்தும் விவாதித்தனர்.

இந்தோ-பசுபிக் பிராந்தியத்தின் வளர்ந்து வரும் தொழில் நுட்பங்களை பகிர்ந்து கொள்வதும், கூட்டாக செயல்படுவதும் அடிக்கோடிட்டப்பட்டது.

QUAD குழுவை நடைமுறைக்கு கொண்டுவர வேண்டும் என்ற விருப்பத்தில் பிராக்டிக்கல் ஆன படிகள் எடுக்கப்பட்டுள்ளன. QUADஐ நம்பிக்கையான ஒரு தளமாக மாற்றும் முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது.

QUAD தடுப்பூசி கூட்டாண்மை, QUAD தடுப்பூசி நிபுணர்கள் குழு, QUAD காலநிலை மாற்ற பணிக்குழு, QUAD சிக்கலான மற்றும் வளர்ந்து வரும் தொழில்நுட்ப பணிகள் குழு ஆகியவை இதில் அடங்கும்.

இந்திய உற்பத்தித் திறனை பயன்படுத்திக் கொள்ளும் ஒரு சர்வதேச பயிற்சியின் பகுதியாக, 2022 ஆம் ஆண்டின் இறுதிக்குள் தென்கிழக்கு ஆசிய நாடுகள் (ASEAN ) மற்றும் பரந்த இந்தோ பசுபிக் நாடுகளுக்கு ஒரு பில்லியன் டோஸ் வரை கொரானா தடுப்பூசி வழங்குவதாக நான்கு நாடுகளும் உறுதி அளித்துள்ளன.

இந்த நான்கு நாடுகளில் ஒவ்வொருவரின் பலத்தையும் பொதுவான நன்மைக்கு பயன்படுத்துவதற்கான ஒரு முயற்சியாகும். இது இந்தியாவின் உற்பத்தித் துறையையும், அமெரிக்கா மற்றும் ஜப்பானியர்களின் நிதியையும், ஆஸ்திரேலியாவின் செயல்பாடுகளையும் (logistics) பயன்படுத்திக்கொள்ளும்.

நான்கு நாடுகள் சேர்ந்த இந்த அமைப்பு ஒரு வழியாக நடைமுறைக்கு ஒத்து வந்து உருவாக்கம் அடைந்த பின் மற்ற பிராந்திய நாடுகளுடன் அதாவது ஆசிய மற்றும் ஐரோப்பிய நாடுகளுடன் இணைந்து பணியாற்ற தயாராக உள்ளன.

இதனுடைய நோக்கம் பிராந்திய அமைதி பாதுகாப்பு மற்றும் செழிப்பு. வளர்ந்து வரும் சவால்களுக்கு ஈடுகொடுத்து முடிவுகளை தர ஆயத்தமாக உள்ளன.

2007 லேயே இந்த நான்கு நாடுகள் அமைப்பு உருவாக்கப்பட்டாலும் இதனுடைய பல உறுப்பினர்கள் சீனாவை கோபப்படுத்த விரும்பாமல் வெளியேறினர்.

சீனாவின் முரட்டுத்தனம் மறுபடியும் இந்த குழுவை ஒன்று சேர்த்து ஒரு புதிய இலக்கை நியமித்தது. சீன அதிபர் ஜீ ஜின்பிங் எந்த அளவு உலக தளத்தில் தவறான செயல்களை நடத்தியுள்ளார் என்பது இதன் மூலம் தெளிவாகிறது.

இப்படி குழுவாக இல்லாத நான்கு நாடுகள் மறுபடியும் கூட்டுச் சேர்வதை குறித்து சீனா வேறு எந்த கருத்தையும் தெரிவிக்க முடியவில்லை. அதிகபட்சம், "QUAD நாடுகள் வெளிப்படையான தன்மையின் கொள்கை முடிவுகளை பின்பற்றியும், ஒரு மூடிய மற்றும் பிரத்தியேக குழுக்களை உருவாக்காமல் பிராந்திய அமைதி தன்மை மற்றும் செழிப்புக்கு உகந்த வகையில் செயல்படுமாறு' கேட்டுக் கொண்டுள்ளனர்.

பிரதமர் நரேந்திர மோடி கடந்த வார மாநாடு ஒரு முக்கியமான கட்டத்தை தாண்டி விட்டது என்று தெரிவித்திருக்கிறார். (QUAD has come of age).

மேலும் இந்த பிராந்தியத்தில் ஸ்திரத்தன்மைக்கு ஒரு முக்கியமான தூணாக QUAD இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.

அவரும் மற்ற தலைவர்களும் என்ன எதைக் கூறவில்லை என்றால், சீனாவின் முரட்டுத்தனமான கொள்கைகள்தான் இத்தகைய மாற்றங்களை சாத்தியமாக்கியது என்பதைத் தான்.

Reference: ORF


Next Story
கதிர் தொகுப்பு
Trending News