ஷவர்மா விஷமானது எப்படி? - வீண் விளம்பர மோகத்தில் அடகு வைக்கப்படும் ஆரோக்கியம்
கேரளாவில் ஷவர்மா சாப்பிட்டு 17 வயது பள்ளி மாணவி உயிரிழந்த காரணத்தினால் தற்பொழுது தமிழகம் முழுவதும் ஷவர்மா தயாரிக்கப்படும் உணவகங்களில் அதிரடி வேட்டை நடந்து வருகிறது.
By : Mohan Raj
கேரளாவில் ஷவர்மா சாப்பிட்டு 17 வயது பள்ளி மாணவி உயிரிழந்த காரணத்தினால் தற்பொழுது தமிழகம் முழுவதும் ஷவர்மா தயாரிக்கப்படும் உணவகங்களில் அதிரடி வேட்டை நடந்து வருகிறது.
சமீப காலங்களில் உணவு பழக்கவழக்கத்தில் மாற்றம் ஏற்பட்டதில் அதிகப்பங்கு வகிக்கிறது 'ஷவர்மா', இளசுகள் மற்றும் பள்ளி மாணவ மாணவிகளின் விருப்பமான உணவாக இருந்து வருகிறது, கடந்த வாரம் கேரளத்தில் பேக்கரி ஒன்றில் கெட்டுப்போன இறைச்சியில் செய்த ஷவர்மாவை சாப்பிட்ட 17 வயது பள்ளி மாணவி உயிரிழந்த விவகாரம் தமிழகம் மற்றும் கேரளத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது இதனால் விழித்துக் கொண்ட உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் ஷவர்மா தயாரிக்கும் கடைகளில் ஆய்வு நடத்தி வருகின்றனர்.
அவ்வாறு ஆய்வு நடத்தியதில் மதுரையில் 50க்கும் மேற்பட்ட கடைகளில் கெட்டுப்போன இறைச்சி இறைச்சியில் ஷவர்மா தயார் செய்ததும், நாகப்பட்டினத்தில் 50 கிலோ கெட்டுப்போன சிக்கன் பறிமுதல் செய்யப்பட்டது, திருவாரூரில் 60க்கும் மேற்பட்ட கிலோ சிக்கன் பறிமுதல் செய்யப்பட்டது, ஈரோட்டில் 5 கடைகளில் கெட்டுப்போன இறைச்சியை வைத்து ஷவர்மா தயாரிக்க பயன்படுத்தியதும் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளுக்கு பெரும் அதிர்ச்சியை அளித்துள்ளது.
மேலும் தற்பொழுது விழித்துக்கொண்ட அரசு உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் ஷவர்மா உணவகங்களுக்கு ஆலோசனை அளித்து வருகின்றனர். அதன் மூலம் சரியாக வேகாத ஷவர்மாவை சாப்பிட்டால் உயிரிழப்பு ஏற்படவும் வாய்ப்பு உள்ளதாக உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி எச்சரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், 'ஷர்மாவை வேகவைப்பதற்கு 25லிருந்து 45 நிமிடம் வரை ஆகும் ஒருமுறை ஷவர்மாவை கத்தரித்து எடுத்தால் அடுத்த சர்மாவுக்கு தேவையான இறைச்சியை பயன்படுத்த மீண்டும் 25 நிமிடத்தில் இருந்து 45 நிமிடம் வரை தேவைப்படும் ஆனால் கடைகளில் கூட்டம் அதிகமாக இருக்கும் பொழுது சரியாக ஷவர்மா வேகா வைக்காத இறைச்சியில் தயார் செய்து கொடுக்கப்படுகிறது. பச்சையாக இருக்கும் இறைச்சியில் சில வைரஸ்கள் இருக்கும் இப்படி சரியாக வேகாத இறைச்சி சாப்பிட்டால் நமக்கு முதலில் வாந்தி வயிற்றுப்போக்கு போன்றவை ஏற்படும் சில நேரத்தில் திடீரென உயிரிழப்பு ஏற்படவும் வாய்ப்புள்ளது' எனக் கூறினார்.
இதனால் சரியாக வேகாத இறைச்சி உணவுகளை நாம் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும் இப்படி சரியாக உணவை தயாரிக்காமல் கொடுத்தால் கடை உரிமையாளர் மீது ஏழு வருடம் சிறை தண்டனை கொடுக்கும் வகையில் உணவு பாதுகாப்பு சட்டத்தில் இடம் உள்ளது எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
சில உணவக உரிமையாளர்களின் இலாப லாப நோக்கம் மற்றும் எது உடலுக்கு நல்லது என ஆராய்ந்து பார்க்காமல் விளம்பர மோகத்தில் அதனை வாங்கி சாப்பிடவேண்டும் என்ற எண்ணம் மக்களுக்கு இருப்பதனாலேயே இது போன்ற துரித உணவுகளுக்கு மக்கள் அடிமையாகி சில சமயங்களில் அது விபரீத செயல்களில் முடிந்துவிடுகிறது. எனவே நம் நாட்டின் சீதோஷ்ண நிலைக்கு இங்கே நமக்குப் பொருத்தமான நம் முன்னோர்கள் கூறிய உணவு சாப்பிடுவது நமக்கு என்றைக்குமே நன்மை பயக்கும்.
- கதிர் டீம்