அதிரடி திட்டத்துடன் சென்னை வரும் பிரதமர் மோடி - பற்றி எரியப்போகும் எதிர் முகாம்கள்!
By : Mohan Raj
தமிழக அரசியல் களம் சூடுபிடித்துள்ள நிலையில் பிரதமர் மோடி வரும் 27ஆம் தேதி சென்னை வருகிறார்.
தற்பொழுது தமிழக அரசியல் களம் 2024 நாடாளுமன்ற தேர்தலை நோக்கி நகர்ந்து வருகிறது, நாடாளுமன்ற தேர்தல் மற்றும் அதனை நோக்கிய கூட்டணியை மையமாக வைத்து அரசியல் கட்சிகள் அனைவரும் ஒருங்கிணைந்து திட்டமிட்டு வருகின்றனர். தேசிய அளவில் வலுவாக இருக்கும் கட்சிகளுடன் கூட்டணி அமைப்பதற்கு சில கட்சிகள் ஆர்வம் காட்டி முயற்சி செய்து வருகின்றன. மேலும் பாஜகவுடன் கூட்டணி அமைத்து எப்படியாவது ஒரு எம்பி தொகுதி யாவது வாங்கி விட வேண்டும் என சில கட்சிகள் போராடி வருகின்றன, மேலும் ஒரு சிலர் அதிமுக பாஜக கூட்டணி உடையாதா அதிமுகவை தனியாய் இழுத்துக் கொண்டு வந்து விடமாட்டோமா என அரசியல் ரீதியாக வேலை பார்த்து வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தற்பொழுது கர்நாடகா மேலிட பார்வையாளராக இருந்து வரும் சமயத்தில் பிரதமர் மோடி சென்னைக்கு வருகை புரிகிறார். முன்பு இருந்ததை விட தமிழக பாஜக வேகமாக வளர்ந்து வருகிறது, இந்த நிலையில் வரும் 2024 தேர்தலில் குறைந்தபட்சம் 25 தொகுதியிலே வெல்ல வேண்டும் என்ற குறிக்கோளுடன் அதற்கான கட்டமைப்புகளை அண்ணாமலை வகுத்து வருகிறார். வெளியில் பல சர்ச்சைகளையும், அவதூறுகளையும் எதிர்கட்சிகள் பரப்பி வந்தாலும் அண்ணாமலையின் செயல்பாடுகள் பக்காவாக இருக்கிறது என கட்சியில் உள்ளவர்கள் கூறுகின்றனர்.
இதே நிலை நீடித்தால் வரும் 2024 தேர்தலில் நிச்சயம் பாஜக அமைக்கும் கூட்டணி தமிழகத்தில் 25 எம்பிக்களை கண்டிப்பாக பெற்றுவிடும். அது தேசிய அளவில் பிரதமர் மோடி மூன்றாவது முறையாக பிரதமராகுவதற்கு மிகவும் உறுதுணையாக இருக்கும் எனக் கூறி வருகின்றனர்.
இந்த நிலையில் வரும் 27ஆம் தேதி சென்னை வருகிறார் பிரதமர் மோடி, சென்னை விமான நிலையத்தில் ரூ. 2,400 கோடி மதிப்பில், 2.36 லட்சம் சதுர மீட்டரில் ஒருங்கிணைந்த விமான முனையம் கட்டப்பட்டு வருகின்றன. இதில் முதல் கட்டடத்தின் பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில் தற்போது அது பயணிகளின் பயன்பாட்டிற்காகத் திறக்கப்பட உள்ளது. இந்த முனையம் செயல்பாட்டுக்கு வந்ததும், பயணிகளின் எண்ணிக்கை 2.20 கோடியில் இருந்து, 3.50 கோடியாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மார்ச் 27-ஆம் தேதி காலை தமிழ்நாட்டின் ராமேஸ்வரம் வரும் பிரதமர் மோடி, அங்கு காசி தமிழ் சங்கமத்திற்கு தமிழ்நாட்டில் இருந்து சிறப்பு விருந்தினர்களாக வந்திருந்த 2,500 பேரையும் கௌரவிக்க உள்ளார். ராமேஸ்வரத்தில் நடக்கும் நிகழ்ச்சிகளை முடித்து விட்டு சென்னை வருகிறார். சென்னை விமான நிலையத்தில் நடைபெறும் திறப்பு விழா நிகழ்ச்சியில் கலந்து கொண்டு புதிய விமான முனைய கட்டடத்தை திறந்து வைக்கிறார்.
பிரதமர் மோடி தமிழகம் வரும்பொழுது தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை உடன் இருப்பார், மேலும் தமிழக பாஜகவின் முக்கிய புள்ளிகள் மோடியை சந்திப்பார் எனவும் கூறப்படுகிறது. மேலும் கூட்டணி கட்சி என்ற முறையில் எடப்பாடி பழனிச்சாமி ஓபிஎஸ் ஆகிய இருவரையும் பிரதமர் மோடி சந்திக்க வருகிறார்.
இது மட்டுமல்லாது அன்றைய தினம் பிற கட்சிகளில் இருந்தும் வந்து பாஜகவில் இணைய பலர் காத்திருப்பதாகவும் பாஜக தரப்பில் தகவல்கள் கசிகின்றன, மேலும் ஒரு சில கூட்டணி கட்சியின் தலைவர்கள் பிரதமர் மோடியை சந்திப்பதற்காக அனுமதி கேட்டுள்ளதாகவும் அவர்களை பிரதமர் மோடி கண்டிப்பாக சந்திப்பார் எனவும் தெரிகிறது. மேலும் அன்றைய தின கூட்டத்தில் தமிழக முதல்வர் ஸ்டாலின் கலந்து கொள்ள இருக்கிறார். எனவே திமுக கூட்டணி கட்சி மற்றும் அதன் தலைவர்களின் பிரதமர் மோடி சந்திக்க இருப்பதாக தெரிகிறது இப்படி அந்த சந்திப்பின்போது 2024 தேர்தல் குறித்த சில அச்சாரங்கள் விழும் எனவும் தெரிகிறது. தற்பொழுது உள்ள கூட்டணியை வலு சேர்க்கும் படி மேலும் சில கட்சிகள் எதிர்தரப்பில் இருந்து வந்து பிரதமர் வரும் அன்று பாஜக கூட்டணியில் இணைய ஆர்வம் தெரிவித்து வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
எதிர்க்கட்சி கூட்டணியில் இருந்து கொண்டு பிரதமர் வேட்பாளர் யார் என்றே தெரியாத நிலையில் இருப்பதைவிட இவர்தான் பிரதமர் என இப்பொழுதே தெரிந்து விட்ட நிலையில் ஏன் நம் பாஜக கூட்டணிக்கு செல்லக்கூடாது என சில அரசியல் கட்சிகள் முடிவு எடுத்து மிகுந்த தீவிரமாக பிரதமர் வருகைக்கு அவரை சந்திக்க நேரம் கேட்டு வருகின்றனர் எனவும் கூறப்பட்டுள்ளது. வரும் 27ஆம் தேதி சென்னை வரவிருக்கும் பிரதமர் அவர் வந்து சென்ற பிறகு தமிழக அரசியலில் பல மாற்றங்கள் நடக்கலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.