'லஞ்சம் வெட்டினால் வேலை, இல்லைன்னா இடத்தை காலி பண்ணு' - லஞ்சத்தில் கொழித்த மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகம்
தினமும் இரண்டு லட்சம் லஞ்ச ஊழல் வாங்கிய வழக்கில் மோட்டார் வாகன ஆய்வாளர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
By : Mohan Raj
தினமும் இரண்டு லட்சம் லஞ்ச ஊழல் வாங்கிய வழக்கில் மோட்டார் வாகன ஆய்வாளர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
ஈரோடு மாவட்டம் பவானி ஊராட்சி கோட்டை பகுதியில் இயங்கி வந்த மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகத்தில் புதன்கிழமை மாலை டி.எஸ்.பி ராஜேஷ் தலைமையிலான லஞ்ச ஒழிப்பு போலீஸ் அதிரடி சோதனை நடத்தினர். அந்த சோதனையின் சமயம் யாரும் அங்கிருந்து வெளியேற முடியாத அளவுக்கு முன், பின் கதவுகள் அடைக்கப்பட்டன.
அப்போது அலுவலகத்தில் இருந்த மோட்டார் வாகன ஆய்வாளர்க்கும் இதர அலுவலர்களுக்கும் பண பட்டுவாடா செய்வதற்காக புரோக்கர்கள் காத்திருந்தனர் என சொல்லப்பட்டது. லஞ்ச ஒழிப்பு போலீசார் வந்திருப்பதை அறிந்த இடைத்தரகர்கள் அதிகாரிக்கு கொடுப்பதற்காக வைத்திருந்த லஞ்ச பணத்தை ஜன்னல் வழியாக தூக்கி வீசினர். இதை கண்ட போலீசார் வெளியே வீசிய பணத்தையும், ஜன்னல் கம்பிகள் இடையே சுற்றிக்கொண்டு இருந்த ரூபாய் நோட்டுகளையும் சேகரித்துக் கொண்டனர்.
பின்னர் மோட்டார் வாகன ஆய்வாளர் சுதந்தி, வாகன போக்குவரத்து அலுவலர்கள் பத்துக்கு மேற்பட்டோரிடம் சோதனை இட்டபோது கணக்கில் வராத 2 லட்சம் பணத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். இதனை தொடர்ந்து மோட்டார் வாகன ஆய்வாளர் சுகந்தி உட்பட ஐந்து பேர் மீது வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர்.
இவர்கள் புதிய வாகனங்களுக்கு எண் அளித்தல், வாகன ஓட்டுனர் உரிமம் அளித்தல், வாகனம் புதுப்பித்தல், எப்.சி வாகனங்களுக்கு சான்று அளித்தல், கூண்டு கட்டிய வாகனங்களுக்கு அனுமதி அளித்தல் போன்றவற்றிற்கு கட்டணம் நிர்ணயத்து வசூல் செய்துவந்தது தெரிய வந்தது.
இப்பகுதி சுற்றியுள்ள 50 கிலோமீட்டர் பரப்பளவில் உள்ள வாகனம் தொடர்பான பணிகளுக்கு இந்த அலுவலகத்தை தான் தேடி வருகின்றனர், லஞ்சம் தராதவர்களுக்கு இழுத்தடித்துதான் பணம் தரப்படுகிறது இதனால் அவர்கள் அன்றாட பணிகளும் பாதிக்கப்படுகிறது என்பதால் அங்கு தரகர்களிடம் பணம் கொடுத்து பணியை முடிக்க பார்க்கிறார்கள். மாதம் சராசரியாக 15 லட்சத்துக்கு மேல் பணம் வசூலித்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது. எனவே சுகந்தி உட்பட ஐந்து பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்ற வருகிறது.