Kathir News
Begin typing your search above and press return to search.

இளசுகள் அண்ணாமலை பக்கம் - மெல்ல நிரம்பும் தமிழக அரசியல் வெற்றிடம்

இளசுகளைக் கவர்ந்த அண்ணாமலை!

இளசுகள் அண்ணாமலை பக்கம் - மெல்ல நிரம்பும் தமிழக அரசியல் வெற்றிடம்
X

Mohan RajBy : Mohan Raj

  |  13 Jan 2023 4:46 AM GMT

இளசுகளைக் கவர்ந்த அண்ணாமலை!


தமிழக அரசியலில் அவ்வபோது சுழற்சி முறையில் மாற்றம் வரும் குறிப்பாக ஒவ்வொரு 30 ஆண்டுகளுக்கும் ஒரு முறை தமிழக அரசியலில் ஒருவர் மையப் புள்ளியாக மாறுவார், அடுத்த 30 ஆண்டுகளுக்கு அவரே தமிழக அரசியலில் தீர்மானிப்பார். அவரை சுற்றியே தமிழக அரசியல் கருத்துக்களாகட்டும், கலவரமாகட்டும் அத்தனையும் சுழலும்.

1960 களில் ஈ.வே.ராமசாமியிடமிருந்து பிரிந்து வந்து அண்ணாதுரை என்பவர் மையப் புள்ளியாக இருந்து திராவிடர் முன்னேற்றக் கழகத்தை துவங்கினர். அன்றைய சூழலில் தமிழக அரசியலில் மையப்புள்ளி அண்ணாதுரை!

பின்னர் முதன் முதலில் தமிழகத்தில் தேசிய கட்சியை வீழ்த்தி மாநிலக் கட்சி ஆட்சியை பிடித்தது என்ற வரலாற்றை படைத்தார் அண்ணாதுரை. அதன் பிறகு உடல்நிலை குறைவு காரணமாக அண்ணாதுரை மறைந்த உடன் அப்பொழுது தி.மு.க'வில் முதலமைச்சரை பொறுப்பை ஏற்றார் கருணாநிதி, அப்பொழுது திமுகவில் கொள்கை பரப்புச் செயலாளராக இருந்த எம்.ஜி.ஆர் மற்றும் கருணாநிதி ஆகிய இருவருக்கிடையே ஏற்பட்ட உரசலில் பிரிந்த எம்.ஜி.ஆர் பக்கமே மக்கள் துணையாக நின்றனர். அன்றைக்கு தமிழக அரசியலின் மையப்புள்ளி எம்.ஜி.ராமச்சந்திரன்.

விளைவு எம்ஜிஆர் இறக்கம் தருவாய் வரையில் முதல்வர் பதவியில் இருந்தார். தமிழ்நாடு மக்கள் அவரை இன்று வரை கடவுளாகவே பார்த்து வருகின்றனர், இன்னமும் சமூக வலைதள அரசியல், கூட்டணி, நேஷனல் லெவல் ட்ரெண்டிங் என எதுவும் தெரியாத பலர் எம்.ஜி.ஆர் சின்னமான இரட்டை இலைக்கு வாக்களிப்பதே அதற்க்கு சான்று.

அதன்பின்னால் எம்.ஜி.ஆர் அவர்களுக்கு பிறகு யார் அந்த தமிழக அரசியலில் வெற்றிடத்தை நிரப்புவார் என எதிர்பார்த்துக் கொண்டிருந்த சமயத்தில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அரசியல் வெற்றிடத்தை நிரப்பியது மட்டுமல்லாமல் தமிழகத்தின் ஆளுமை என்ற பெயரையும் பெற்றார். தி.மு.க'வினரே திணறும் அளவிற்கும் சில திமுகவினர் போற்றும் அளவிற்கும் ஜெயலலிதா அந்த இடத்தை பிடித்துக் கொண்டார். அன்றைய அரசியலின் மையப்புள்ளி ஜெயலலிதா.

85 களுக்கு பிறகு கிட்டத்தட்ட அவர் இறக்கும் வரையில் தமிழக அரசியலில் ஜெயலலிதா சொல்வது ஒரு குறிப்பிட்ட அதிர்வலைகளை ஏற்படுத்தியது, ஜெயலலிதா இறந்தவரையில் முதலமைச்சராக இருந்த காரணத்தினால் தான் இறக்கும் தருவாயில் கூட முதல்வர் கருணாநிதி அவர்களால் முதலமைச்சர் ஆகவே முடியவே முடியாமல் போனது.

ஐந்து முறை முதலமைச்சராக இருந்தாலும் ஜெயலலிதா என்ற ஆளுமையின் முன்பு கருணாநிதி என் ஆளுமை ஒன்றும் இல்லாமல் போனது வரலாறு கூறும் உண்மைகள். அதன் விளைவு ஜெயலலிதா இறந்தும் கூட நான்கு ஆண்டுகள் அ.தி.மு.க'வை ஆட்சி கட்டிலில் அமர்த்தி வைத்தது என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.

ஜெயலலிதா, கருணாநிதி ஆகியோர் இருவரும் மறைந்த பின்னர் தமிழக அரசியலில் மிகப்பெரும் வெற்றிடம் ஏற்பட்டுள்ளது. இந்த வெற்றிடத்தை எந்த மாதிரி வெற்றிடம் எனக் கூறுவதென்றால் தமிழகத்தில் குறிப்பிட்ட ஆளுமை கிடையாது, திறன்வாய்ந்த தலைமை பொறுப்பு கொண்ட தலைவர் வேண்டும், தமிழக மக்கள் முழுமையாக நம்ப வேண்டும், குறிப்பாக இவர் செய்தால் சரி! இவர் சொன்னால் சரியாக இருக்கும்! இவர் முடிவெடுத்தால் நன்றாக இருக்கும்! இவரை நாம் ஆதரிக்க வேண்டும்! இவர் நமக்கு வருங்கால தேவை! இவரால் மட்டுமே நமக்கான அரசியலை கொடுக்க முடியும் என யார் மீது மக்கள் நம்பிக்கை வைக்கிறார்களோ அவர்தான் தமிழகத்தின் அடுத்த அரசியல் மையப்புள்ள்ளி. அவர்தான் தமிழக ஆளுமை.

அந்த வெற்றிடம் தமிழகத்தில் இருந்தாலும், பலர் நிரம்பியதாக தம்பட்டம் அடித்துக்கொண்டாலும் அந்த வெற்றிடத்தில் இதுவரை தமிழக மக்கள் யாரையும் வைத்து பார்க்கவில்லை என்பதே உண்மை!

இந்த நிலையில் முன்னாள் ஐ.பி.எஸ் அதிகாரி என்ற முத்திரையுடன் மெல்ல அரசியலில் அடி எடுத்து வைத்த அண்ணாமலை ஒரு கோச்சிங் சென்டரில் வகுப்பிற்கும் விரிவுரையாளர் போல் காட்சி அளித்து வந்தார். பார்க்கும் போதெல்லாம் அண்ணே சரிங்க அண்ணே! என்பார், யாராவது கேள்வி கேட்டால் பொறுமையாக பேசிக் கொண்டிருந்தார். ஆரம்பத்தில் அண்ணாமலை தானே என பத்தோட பதினொன்னு என கடந்து சென்றவர்கள், இப்பொழுது 'இந்த அண்ணாமலை தலைவலிய்யா!!' அப்படின்ற அளவிற்கு அண்ணாமலையின் வளர்ச்சி இன்றைய தேதியில் விஸ்வரூபம் எடுத்துள்ளது.

தமிழகத்தில் ஒருவர் ஒரு விஷயத்தை கூறினால் அது அடுத்த நாள் முதல்வரிலிருந்து மந்திரி வரை அனைவரும் வருகிறார்கள் என்றால் அது இன்றைய சூழலில் அண்ணாமலைக்கு மட்டுமின்றி வேறு யாருக்கும் அது கிடைக்கவில்லை. இவ்வளவிற்கும் சொந்தமாக சாட்டிலைட் சேனல் இல்லாத கட்சி தலைவர் என்றால் அது தமிழகத்தில் அண்ணாமலை மட்டும்தான்.

நிலையில் இணையங்களில் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது 8 முதல் 10 வயது கொண்ட சிறுவர்கள் கும்பலாக நின்று பேசிக் கொண்டிருக்கையில் ஒரு சிறுவனின் கையில் இருக்கும் மொபைலில் அண்ணாமலை அவர்களின் புகைப்படம் இடம் பெற்றிருக்கிறது. உடனே பெண்மணி ஒருவர் அவர்கள் அருகில் சென்று யாருப்பா இது அப்படின்னு கேட்கும்போது, 'அண்ணாமலை, எங்களுக்கு பிடிக்கும் அண்ணாமலைக்கு ரசிகர் மன்றம் வைத்திருக்கும்' என எட்டு முதல் 10 வயது வரை உள்ள சிறுவர்கள் கூறும் வீடியோ சமூக இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

இது தெளிவுபடுத்தும் விஷயம் என்னவெனில் இளைஞர் பட்டாளம் குறிப்பாக 25 வயதிற்கு உட்பட்ட இளைஞர் பட்டாளம் அவர்களுக்கு ஒரு அரசியல் மாற்றம் தேவைப்படுகிறது, புதுவித முன்னேற்ற அரசியல் தேவை ஏற்பட்டுள்ளது. அந்த அரசியல் தேவையை பூர்த்தி செய்யும் அளவிற்கு நம்பிக்கையான ஒருவர் யார் கிடைக்கிறாரோ, அவரின் மீது மொத்த நம்பிக்கையை மட்டும் இல்லாமல் தனது வாக்கு என்ற ஆதரவையும் செலுத்த இளைஞர் சமுதாயம் தயாராகி விட்டது! அந்த இடத்தை கிட்டத்தட்ட அண்ணாமலை பிடித்து விட்டார் எனவே கூறலாம், அதற்கான வழிகள் இப்பொழுதே தெரிய துவங்கி விட்டன.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News