ஆளுங்கட்சியினர் நடத்தும் சட்டவிரோத வியாபாரங்கள் - அறிக்கை தயார் செய்கிறது உளவுத்துறை
மணல் கடத்தல், மறைமுக லாட்டரி விற்பனை, கஞ்சா உள்ளிட்ட போதை பொருள் விற்பனையில் அரசியல் தலையீடு இருப்பதை பற்றி விசாரிக்க உளவுத்துறை போலீசார் களம் இறக்கப்பட்டுள்ளனர்.
By : Mohan Raj
மணல் கடத்தல், மறைமுக லாட்டரி விற்பனை, கஞ்சா உள்ளிட்ட போதை பொருள் விற்பனையில் அரசியல் தலையீடு இருப்பதை பற்றி விசாரிக்க உளவுத்துறை போலீசார் களம் இறக்கப்பட்டுள்ளனர்.
காவல்துறையை தன் வசம் வைத்துள்ள முதல்வர் ஸ்டாலின் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சிறப்பாக உள்ளது குற்றங்கள் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது என கூறி வருகிறார். ஆனால் மணல் கடத்தல், ஒரு நம்பர் லாட்டரி சீட்டு விற்பனை, கஞ்சா, குட்கா உள்ளிட்ட போதை பொருள் கடத்தல்காரர்களுக்கு பின்னணியாக இருப்பது என ஆளும் கட்சியினர் எனவும் இதன் பின்னணியில் நாளுக்குநாள் அட்டூழியம் அதிகரித்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
மேலும் ஆளுங்கட்சியினர் காவல் நிலையங்களுக்கு சென்று அதிகாரிகளை மிரட்டுகின்றனர் இதற்கு சாட்சியாக சமூக வலைத்தளங்களில் பல வீடியோக்கள் வெளியாகி வருகின்றன. முதல்வர் சாட்டையை சுழலவிட்டால் மட்டுமே அவர்களை கட்டுப்படுத்த முடியும் என சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர். இந்நிலையில் மணல், கட்டப்பஞ்சாயத்து மற்றும் போதை பொருள் கடத்தல் போன்ற குற்றங்களுக்கு உறுதுணையாக இருப்பவர்கள் பற்றி விசாரிக்க உளவுத்துறை போலீசார் களம் இறக்கப்பட்டுள்ளனர்.
இவர்கள் மாவட்டம் வாரியாக விசாரித்து உயர் போலீஸ் அதிகாரிகளுக்கு அறிக்கை அளிக்க உள்ளனர் அதன் அடிப்படையில் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது நடவடிக்கை பாயுமென போலீஸ் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.