Kathir News
Begin typing your search above and press return to search.

சரியில்லாத சாலை, ஆம்புலன்ஸ் வர தாமதம் -ஹெல்மெட் அணிந்தும் உயிரிழந்த சோமோட்டோ ஊழியர்!

தலையில் ஹெல்மெட் இருந்தும் சாலை சரியில்லாததால் பரிதாபமாக சோமோட்டோ ஊழியர் இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சரியில்லாத சாலை, ஆம்புலன்ஸ் வர தாமதம் -ஹெல்மெட் அணிந்தும் உயிரிழந்த சோமோட்டோ ஊழியர்!
X

Mohan RajBy : Mohan Raj

  |  13 Nov 2022 1:25 PM GMT

தலையில் ஹெல்மெட் இருந்தும் சாலை சரியில்லாததால் பரிதாபமாக சோமோட்டோ ஊழியர் இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை மணலி கேனல் சாலை சந்திப்பில் சாலை பள்ளத்தில் இருசக்கர வாகனத்தில் தவறி விழுந்த சோமோட்டோ ஊழியர் மீது கண்டெய்னர் லாரி ஏறி இறங்கியதில் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே அவர் பலியானார். தலைக்கவசம் அணிந்து இருந்தும் சரியில்லாத சாலைக்கு பலியான உயிர் குறித்து அனைவரும் வேதனை தெரிவித்து வருகின்றனர்.

சென்னை, புளியந்தோப்பு அம்பேத்கர் இரண்டாவது தெருவை சேர்ந்த 30 வயது இளைஞர் முகமது அலி சோமோட்டோவில் உணவு டெலிவரி பாயாக வேலை பார்த்து வந்தார். சனிக்கிழமை மதியம் உணவு டெலிவரி செய்வதற்காக ஹெல்மெட் அணிந்தபடி பல்சர் இருசக்கர வாகனத்தை ஓட்டிக்கொண்டு கார்கில் நகர் பாக்கி கால்வாய் வழியாக சென்ற அவர் மணலி துறைமுகம் விரைவு சுங்க சாலையில் இடது புறமாக திரும்பியபோது சாலையில் இருந்த பள்ளத்தில் சிக்கி அவரது இருசக்கர வாகனம் தடுமாறி கீழே விழுந்த நிலையில் அவரை முந்திக்கொண்டு அதே திசையில் திரும்பிய கண்டைனர் லாரி முகமது அலியின் தலையில் ஏறி இறங்கியது.

இதில் தலைக்கவசம் உடைந்து நொறுங்கியதோடு தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே முஹம்மத் அலி பலியானர். உடனடியாக ஆம்புலன்ஸுக்கு தகவல் தெரிவித்தும் ஆம்புலன்ஸ் வந்து சேர்வதற்கு ஒரு மணி நேரமானால் அப் பகுதியில் சுமார் ஒரே மணி நேரம் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் முகமதுவின் உடலை கைப்பற்றி பிரதேச பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி உள்ளனர் இது தொடர்பாக திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி சேர்ந்த கன்டெய்னர் லாரி ஓட்டுனர் விஜயகுமார் என்பவரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சாலை சரி இல்லாத காரணத்தினால் உயிர் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Source - Polimer News

Next Story
கதிர் தொகுப்பு
Trending News