Kathir News
Begin typing your search above and press return to search.

தொடரும் வருமான வரி சோதனை.. விழி பிதுங்கி நிற்கும் அமைச்சர் செந்தில் பாலாஜி..

தொடரும் வருமான வரி சோதனை.. விழி பிதுங்கி நிற்கும் அமைச்சர் செந்தில் பாலாஜி..

Bharathi LathaBy : Bharathi Latha

  |  28 May 2023 1:48 AM GMT

தமிழக மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அளவுக்கு அதிகமான சொத்துக்களை சேர்த்ததாகவும், மேலும் மதுபான விற்பனைகளில் மோசடி செய்ததாகவும் அவர் மீது குற்றச்சாட்டு எழுந்து இருக்கிறது. குறிப்பாக அதிமுக ஆட்சியில் அவர் முன்னாள் அமைச்சராக இருந்த பொழுது அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி மோசடி செய்ததாகவும் அவர் மீது குற்றச்சாட்டு எழுந்து இருக்கிறது. இந்த நிலையில் சுப்ரீம் கோர்ட் இது தொடர்பாக தனி குழுவை அமைக்க உத்தரவிடப்பட்டு இருக்கிறது. திராவிட முன்னேற்றக் கழகத்தின் குடும்பத்துடன் தொடர்புடையதாகக் கூறப்படும் ரியல் எஸ்டேட் நிறுவனமான G-Square இல் IT துறையின் சோதனை மற்றும் அமலாக்க இயக்குனரகம் சோதனைகள் நடத்திய ஒரு மாதத்திற்குப் பிறகு இந்த சோதனை வந்துள்ளது. அடுக்கடுக்காக தற்பொழுது பல்வேறு இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகிறார்கள்.

டாஸ்மாக் கடைகளில், 'கரூர் டீம்'க்கு பணம் கொடுப்பதற்காக, மதுபாட்டில்களை விற்கும் போது, ​​10 ரூபாய் கூடுதலாக வசூலிப்பதாக மேலும் அமைச்சர் செந்தில் பாலாஜி மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கரூர் அணிக்கும், செந்தில் பாலாஜிக்கும் தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது. ஏற்கனவே தமிழக கவர்னரிடம் பாஜக தலைவர் அண்ணாமலை அவர்கள் அமைச்சர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், அவர் பதவியில் இருந்து விலக வேண்டும் என்றும் மனு ஒன்றை அளித்து இருக்கிறார். அதேபோல அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி போன்ற பலரும் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி இருக்கிறார்கள்.


இந்த நிலையில் தமிழகத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு சொந்தமான 40 இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். சென்னை, கோவை, கரூர் போன்ற நகரங்களில் கலால், மின்சாரம் மற்றும் மதுவிலக்கு துறை அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு சொந்தமான 40 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் நடைபெற்று வருகிறது. இந்த வருமான வரித்துறை சோதனை பக்கத்து மாநிலங்களிலும் நடைபெறுகிறது. தமிழ்நாட்டை தாண்டி பல்வேறு மாநிலங்களிலும் தற்போது வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறார்கள். குறிப்பாக அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்புடைய பல்வேறு வெளி மாநிலங்களில் சொத்துக்களையும் அவர்கள் தங்களுடைய கணக்கின் கீழ் கொண்டு வர தீவிர முயற்சிகளை செய்து வருகிறார்கள். கேரளா, தெலுங்கானா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் அமைச்சரின் புகழ் பரவி வருகிறது, வருமான வரித்துறைக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது. ஐதராபாத், பெங்களூரு, பாலக்காட்டில் செந்தில் பாலாஜிக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறையில் சோதனை நடைபெற்று வருகிறது.


கரூரில் வருமான வரித்துறையினர் சோதனையின் போது தங்களை சோதனை செய்ய விடாமல் அமைச்சர் செந்தில்பாலாஜியின் ஆதரவாளர்களும், அவரது தம்பி அசோக்கின் ஆதரவாளர்கள்ம் தாக்குதல் நடத்தி, குறிப்பாக தங்கள் வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டதாகவும் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவத்திற்கு பிறகு அமைக்க செந்தில் பாலாஜி தரப்பில் கூறும் பொழுது, கரூரில் நடந்த விரும்பத்தாகாத சம்பவம் காரணமாக இனி சோதனை நடக்கும் இடங்களில் கட்சியினர் இருக்கக் கூடாது என்றும், சோதனைக்கு ஒத்துழைப்பு தர வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டு இருந்தது. போலீஸ் ஸ்டேஷனில் இது தொடர்பாக புகார் ஒன்றை கொடுத்துள்ளனர் வருமான வரித்துறை அதிகாரிகள். அதன் பின்னர் போலீஸ் பாதுகாப்பின் கீழ் தற்பொழுது வருமான வரித்துறையின் சோதனை மேற்கொண்டு வருகிறார்கள். ஆனால் இன்னும் தற்பொழுது வருமான வரி சோதனை தீவிரமாக நடைபெற்றுக் கொண்டுதான் வருகிறது. இந்த சோதனை எப்போதும் முடியும் என்று தெரியவில்லை. இதன் காரணமாக செந்தில் பாலாஜி மற்றும் அவருடைய ஆதரவாளர்கள் விளக்கத்தில் இருக்கிறார்கள்.

ஏனெனில் தமிழகத்தில் அனுமதி பெறப்பட்ட பார்களில் விற்கும் பாட்டில்களை விட அனுமதி பெறப்படாத பார்களில் விற்கும் பாட்டில்களில் விற்கும் பாட்டில்கள் எண்ணிக்கை அதிகம் என தகவல்கள் கிடைத்துள்ளன. இந்த பண முழுவதும் கரூர் கேங்'கிற்குதான் செல்கிறது என அரசியல் விமர்சிகர்களும் எதிர்க்கட்சிகளும் கூறி வருகின்றன! இப்படி அனுமதி பெறப்படாத பார்களில் விற்கும் பணத்தை கணக்கிட்டு பார்த்தால் பல நூறு கோடிகள் செல்லும் இது ஒரு மாதத்திற்கு மட்டுமே! ஆட்சிக்கு வந்து இரண்டு வருடங்கள் ஆகிறது அப்படி என்றால் எத்தனை ஆயிரம் கோடி இருக்கும் என கணக்கு போட்டு பார்த்துதான் வருமான வரி துறையினர் இதில் இறங்கி இருக்கிறார்கள் என தகவல்கள் கிடைத்துள்ளது. மேலும் இதனை பல்வேறு அரசியலு விமர்சகர்களும் உறுதிப்படுத்தி வருகின்றனர்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News