Kathir News
Begin typing your search above and press return to search.

வலிமை பெறும் இந்திய-ஆஸ்திரேலிய உறவுகள்- சீனாவுக்கு சவால்.!

தனது சொந்த நலன்களுக்காக சீனாவை எதிர்த்து செயல்பட இந்தியா தயங்காது என்று எப்பொழுதுமே நிரூபித்து வந்திருக்கிறது.

வலிமை பெறும் இந்திய-ஆஸ்திரேலிய உறவுகள்- சீனாவுக்கு சவால்.!

Saffron MomBy : Saffron Mom

  |  5 March 2021 1:15 AM GMT

சீனாவுடனான இந்திய உறவு முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு வீழ்ச்சி அடைந்திருக்கின்ற இந்தத் தருணத்தில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியாவுடனான உறவுகள் மேலும் வலுவடைந்து கொண்டிருக்கின்றன.

கிழக்கு லடாக் பகுதியில் இந்தியாவிற்கும் சீனாவிற்கும் ஏற்பட்ட மோதலில், 20 இந்திய வீரர்களும் கணக்கிடப்படாத சீன படையினரும் உயிரிழந்தனர். அது முதல் இந்திய மற்றும் சீன உறவுகள் மோசமடைந்து வருகிறது. இதன் விளைவாக, இந்தியா முக்கியத்துவம் வாய்ந்த கூட்டாளிகளுடன் உறவுகளை வலுப்படுத்த அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது. குறிப்பாக ஆஸ்திரேலியா. இந்திய- ஆஸ்திரேலிய உறவுகள் எப்பொழுதுமே நல்ல விதமாகவே இருந்து வந்திருந்தாலும் கடந்த சில வருடங்களில் அது முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு வலுவடைந்துள்ளது.

ஆஸ்திரேலியாவிற்கு வெளிப்படையான மற்றும் திறந்த ஆதரவை இந்தியா வெளிப்படுத்தாது என்றாலும், முக்கியத்துவம் வாய்ந்த கணிசமான பாதுகாப்பு ஒத்துழைப்பை அமைதியான முறையில் இந்தியா, ஆஸ்திரேலியாவிற்கு வழங்கும்.

இந்தியாவிற்கும் சீனாவிற்கும் வெளிப்படையாகவே பல இடங்களில் மோதல்கள் இருந்து வந்தாலும், இந்தியா சீனாவின் பெயரை வெளிப்படையாக கூறுவதை எப்பொழுதுமே தவிர்த்து வந்திருக்கிறது. இந்தியாவின் குறிப்பிட்ட நடவடிக்கைகள் சீனாவை குறிவைத்து இருந்தாலும் கூட வெளிப்படையாக சீனாவின் பெயரை குறிப்பிடுவதை இந்தியா எப்பொழுதுமே தவிர்த்து வந்திருக்கிறது.

ஆனால் தனது சொந்த நலன்களுக்காக சீனாவை எதிர்த்து செயல்பட இந்தியா தயங்காது என்று எப்பொழுதுமே நிரூபித்து வந்திருக்கிறது. இந்தோ-பசுபிக் மற்றும் QUAD குழுவில் இந்தியா காட்டும் அர்ப்பணிப்பை இதற்கு உதாரணமாகக் காட்டலாம். 2018 ஆம் ஆண்டு ஷங்க்ரி-லா உரையாடலின் பொழுது பிரதமர் மோடி இதையே குறிப்பிட்டு பேசினார். இந்த இந்தோ-பசுபிக் மற்றும் QUAD குழுவில் இந்தியா பங்கேற்பதன் மூலம் மற்ற நாடுகளை குறி வைப்பதோ அல்லது கட்டுப்படுத்தும் என்னமோ இல்லை என்று தெரிவித்தார். அவர் தெரிவித்தது தெளிவாக சீனாவை தான் என்று அனைவருக்கும் புரிந்தது.

இதே அறிக்கை சமீபத்தில் வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் மூலமும் வெளியிடப்பட்டது. இந்தியா QUAD குழுவில் பங்கேற்பதை ரஷ்யா விமர்சனம் செய்தபோது தெரிவிக்கப்பட்டது. இந்தியா QUAD குழுவில் மிகவும் ஈடுபட்டு வருகிறது என்பதை குறைத்து மதிப்பிடவே இத்தகைய வார்த்தை பிரயோகங்கள் உபயோகிக்கபடுவதாக கூறப்படுகிறது. QUAD குழுவில் ஒரு பலவீனமான இணைப்பாக இருந்த இந்தியா, தற்பொழுது ஒரு மிகவும் வலுவான ஒரு அமைப்பாக மாறி வருகிறது.

இதே பாணியில் இந்தியாவிற்கும் ஆஸ்திரேலியாவுக்கும் இடையிலான உறவுகள் வலுப்படும் என்று நாம் எதிர்பார்க்கலாம். சீனாவின் ராணுவம் மற்றும் ராஜதந்திர முரட்டுத்தனத்தை எதிர்கொள்வதில் ஆஸ்திரேலியாவிற்கு இந்தியா உதவக்கூடும். அப்பொழுதும் கூட சீனாவை வெளிப்படையாக பெயர் குறிப்பிடாது என்று நாம் எதிர்பார்க்கலாம்.

லடாக் மோதல்களுக்கு பிறகு இந்தியாவிற்கு வெளிப்படையாகவே ஆஸ்திரேலியா தங்களது ஆதரவை தெரிவித்து மட்டுமல்லாமல் ஆஸ்திரேலிய பாராளுமன்றத்தில் வெளியுறவுத்துறை அமைச்சர் பெயின் இந்தியாவிற்கு ஆதரவு அளித்தும் சீனா நடவடிக்கைகளை விமர்சித்தும் ஒரு அறிக்கை வெளியிட்து குறிப்பிடத்தக்கது.

உதாரணத்திற்கு ஆஸ்திரேலியாவுடனான இந்தியத் தொடர்புகள் தற்போது அடிக்கடி நிகழ்கின்றன. இது இந்தியா, ஆஸ்திரேலியாவுடனான உறவிற்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை குறிக்கிறது. 2020 ஆம் ஆண்டில் ஒரு விரிவான கூட்டணியை மேம்படுத்தும் விதத்தில் பல பாதுகாப்பு ஒப்பந்தங்களில் கையெழுத்திட பிறகு, இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய வெளியுறவு அமைச்சர்கள் டோக்கியோவில் நடந்த கூட்டத்தில் தனியாக சந்தித்தனர்.

மேலும் பிராந்திய பாதுகாப்பு முன்னேற்றங்களை மறு ஆய்வு செய்வதற்கு இரு தரப்பினரும் நெருங்கிய தொலைபேசித் தொடர்பில் உள்ளனர். இந்தியாவிற்கும் ஆஸ்திரேலியாவிற்கு இடையே உறவு எந்த அளவு வளர்கிறது என்பது சீனா எப்படிப்பட்ட நடவடிக்கைகளை எடுக்கிறது என்பது பொறுத்து அமையும்.

உதாரணமாக மலபார் கடற்போர் ஒத்திகைக்கு இந்தியா, ஆஸ்திரேலியாவை அழைக்கத் தொடர்ந்து தயக்கம் காட்டி வந்தது. இத்தனைக்கும் ஆஸ்திரேலியா இந்நிகழ்வில் பங்கேற்க ஆர்வமாக இருந்து. இந்தியாவிடம் அழைப்பை கோரியிருந்தது.

அமெரிக்காவும் ஆஸ்திரேலியாவை அழைக்கும்படி வற்புறுத்தி வந்தது. ஆனால் 1998 இந்திய அணுசக்தி சோதனைகளுக்கு ஆஸ்திரேலியா வெளியிட்ட விமர்சனங்கள் இந்த இரு நாடுகளின் உறவில் ஆஸ்திரேலியா எந்த அளவிற்கு உறுதியுடன் இருக்கிறது என்பதை குறித்த கேள்விகளை எழுப்பியதால், இந்தியா தொடர்ந்து தயக்கம் காட்டி வந்தது. ஆனால் தற்பொழுது லடாக்கில் நடந்த மோதல்கள், இந்தியாவிற்கு ஆஸ்திரேலியா அளித்த ஆதரவிற்கு பிறகு அழைப்பு நீட்டிக்கப்பட்டது. 2020 மலபார் கடற்போர் ஒத்திகையில் ஆஸ்திரேலியாவின் ஒரு குழு பங்கேற்றது. இந்த உறவு நிலை தற்போதைக்கு மாறும் வாய்ப்பில்லை. வளர்ந்து வரும் இந்திய- ஆஸ்திரேலியா உறவுகள் குறித்து கவலைகள் இருந்தாலும் சீனா இந்தியாவுடனான மோதலை குறைத்துக் கொள்ளும் என்பதற்கான அறிகுறிகளும் இல்லை.


ஆஸ்திரேலியா-சீன மோதல்களில் வெளிப்படையான மற்றும் திறந்த ஆதரவு இந்தியாவினால் வார்த்தைகளினால் கிடைக்காது, ஆனால் இந்தியாவின் நடவடிக்கைகளினால் கிடைக்கும். பேச்சுவார்த்தையும் ஒத்துழைப்பும் தீவிரமடையும். இருதரப்பு மற்றும் பல தரப்பு வடிவங்களில் கூட்டுப்பயிற்சி உட்பட ராணுவ உறவு வலுவாக வளரும்.

ஆஸ்திரேலியாவுடனான தனது பொருளாதார உறவை வலுப்படுத்தும் அதே நேரத்தில், சீன- ஆஸ்திரேலியா வர்த்தக மோதல்களில் இருந்து பயன் அடைவதற்கும் இந்தியா விரும்பும். ஆனால் ஆஸ்திரேலியாவிற்கு சீனாவிற்கும் இடையில் இருக்கும் அளவுக்கு பொருளாதார உறவுகள் இந்தியாவுக்கும் ஆஸ்திரேலியாவுக்கும் அவ்வளவு சீக்கிரம் கிடைப்பதற்கு வாய்ப்பில்லை.

இதற்கு பதிலாக இருதரப்பினரும் நெருக்கமான உளவுத்துறை உறவு, உயர் தொழில்நுட்பம் மற்றும் விண்வெளி போன்ற துறைகளில் ஒத்துழைப்பு தருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இரு நாடுகளும் சீனாவின் நடவடிக்கைகளை எதிர்ப்பதற்கு நெருக்கமான ராஜதந்திர ஒருங்கிணைப்பை ஆராய வேண்டும். இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா மட்டுமல்லாமல் பிற ஒத்த எண்ணம் கொண்ட நாடுகளையும் உள்ளடக்கிய இத்தகைய ஒருங்கிணைந்த ராஜதந்திரம் சீனாவை கட்டுப்படுத்த உதவி செய்யும்.

அடுத்தவர்களின் மோதல்களில் ஈடுபடாத இந்தியாவின் நீண்ட கால பாரம்பரியம் வெளிப்படையாக ஒரு சாரார் பக்கமே சேர இந்தியா தயங்குவதை காட்டுகிறது. ஆனால் இந்த தயக்கம் இந்தியா என்ன பேசுகிறது என்பதை பொறுத்து மட்டுமே அன்றி இந்தியா என்ன செய்கிறது என்பதைப் பற்றி அல்ல. எனவே ஆஸ்திரேலியாவுடனான பாதுகாப்பு ஒத்துழைப்புக்கான இந்திய உறுதிப்பாட்டை தீர்மானிப்பதற்கான சரியான அளவுகோல் இந்தியா என்ன சொல்கிறது என்பதில் அல்ல, இந்தியா என்ன செய்கிறது என்பதில் உள்ளது. இது வரும் காலங்களில் வலுவாக வளரும் என்று நான் எதிர்பார்க்கலாம்.


Reference: ORF

Next Story
கதிர் தொகுப்பு
Trending News