Kathir News
Begin typing your search above and press return to search.

இந்தியா - சீனா - பாகிஸ்தான் உறவுகள்: அமைதிக்கு மறுபடியும் வாய்ப்பு கொடுக்கும் இந்தியா?

சவால் விடுத்தாலும் தங்களுடைய நலன்களை பாதுகாக்க முடியும் என்று நிரூபித்த பிறகு தான் அமைதிக்கு மறுபடியும் ஒரு வாய்ப்பு கொடுத்துள்ளது

இந்தியா - சீனா - பாகிஸ்தான் உறவுகள்: அமைதிக்கு மறுபடியும் வாய்ப்பு கொடுக்கும் இந்தியா?

G PradeepBy : G Pradeep

  |  10 March 2021 3:23 AM GMT

இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையிலான பதற்றங்களை குறைக்கும் ஒரு முக்கிய நடவடிக்கையாக, உண்மையான கட்டுப்பாடு எல்லைப் (LAC) பகுதியில் இரு நாட்டு இராணுவங்களும் கடந்த மாதம் பின்வாங்கத் தொடங்கின. மேலும் இந்தியாவும் பாகிஸ்தானும் கட்டுப்பாடு எல்லையின் (LoC) அருகே போர் நிறுத்த ஒப்பந்தத்தை அறிவித்தன.

9 சுற்றுகள் உயர்மட்ட ராணுவ பேச்சுவார்த்தை நடைபெற்ற பிறகு, தாங் சோ பகுதியில் இந்திய மற்றும் சீன ராணுவம் பின்வாங்கத் தொடங்கின. இந்திய-சீன இராணுவங்கள் உண்மையான கட்டுப்பாட்டு பகுதியில் பல இடங்களில் இன்னும் மோதல் பதற்றத்தில் இருந்தாலும், இரு நாடுகளிடையே சில பல மாதங்களாக நடைபெற்று வரும் மோதல் பதற்றத்தை குறைக்கும் முதல் நடவடிக்கையாக இது பார்க்கப்படுகிறது.

இந்திய-பாகிஸ்தான் எல்லையில், இருநாடுகளின் ராணுவ நடவடிக்கைகளில் இயக்குனர்கள் (DGMO) தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு இரு நாடுகளுக்கு இடையிலான சர்வதேச எல்லைப் பகுதிகளில் இதுவரை இருந்த போர் நிறுத்த ஒப்பந்தங்கள் அனைத்தையும் நடைமுறைப்படுத்த முடிவு செய்ததாகவும், இது எல்லைப்பகுதிகளில் ஒரு நிலையான அமைதியை இருநாடுகளின் பலன்களுக்காக செயல்படுத்தும் ஒரு முயற்சி எனவும் அறிவித்தனர.

2018ம் இதேபோல் ஒரு போர் நிறுத்த ஒப்பந்தம் அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. ஆனால் கடந்த இரண்டு வருடங்களாக இந்த போர்நிறுத்த ஒப்பந்த மீறல்கள் தொடர்ந்து அதிகரித்து வந்துள்ளது. 2020இல் ஐயாயிரத்துக்கும் மேற்பட்ட மீறல்கள் ஏற்பட்டதும் இந்த வருடம் அதற்குள்ளாகவே 600 முறை பாகிஸ்தான் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறியதும் குறிப்பிடத்தக்கது.

இந்திய- பாகிஸ்தான் உறவுகளைப் பொறுத்தவரை திடீரென்ற இந்த போர் நிறுத்த ஒப்பந்தம் அனைவரையும் ஆச்சரியத்திற்கு உள்ளாக்கியது. இந்திய பாகிஸ்தான் உறவுகளைப் பொறுத்தவரை ஒரு ஆச்சர்யமான விஷயம் என்னவென்றால் இந்தப் போர் நிறுத்த ஒப்பந்தம் ஒருவகையான தோல்வி எனவே பார்க்கப்படுகிறது.

பயந்து போனதால் எடுக்கப்பட்ட முடிவு என்று சிலர் விமர்சனம் செய்துள்ளனர், மற்றவர்கள் இது அந்நிய அழுத்தத்தினால் ஏற்பட்டதாக கூறுகிறார்கள். இந்தியாவின் கொள்கை முடிவுகளை விமர்சிப்பதற்கு முன்னால், உள்நாட்டு சூழலில் ஏற்படும் அடிப்படையான மாற்றங்கள், இந்தியாவின் வெளிநாட்டுக் கொள்கைகள் மற்றும் பாதுகாப்பு நிலைமைகள் ஆகியவற்றை ஆராய்ந்த பிறகே விமர்சிக்க முடியும். ஆனால் அதுபோன்ற ஆய்வுகள் நடைபெற்று வருவதாக தெரியவில்லை.

அனைத்துக் கொள்கைகளுக்கான கட்டமைப்புகளும் ஒரு பரந்த உள்நாட்டு, பிராந்திய மற்றும் உலகளாவிய சூழலில் உருவாகின்றன. எந்த ஒரு வலிமையான நாடாக இருந்தாலும் தங்களுடைய கொள்கைகளில் வெளிப்புற அழுத்தங்கள் அல்லது காரணிகள் எதுவுமில்லாமல் இருக்க முடியாது. புத்திசாலித்தனமான கொள்கை என்பது அத்தகைய தடைகளை அறிந்து கொண்டு சரியான நேரத்தில் நம்முடைய நன்மைக்காக அதை பயன்படுத்துவதாகும்.

கடந்த சில மாதங்களில் நடந்த ஒரு முக்கியமான புவிசார் அரசியல் முன்னேற்றம் என்பது சீனாவிடம் கால்வான் பள்ளத்தாக்குத் தாக்குதல்களுக்கு பின்னர், பின்வாங்காமல், பணியாமல் இந்தியா நின்றதாகும். இதன்மூலம் சீனாவின் முரட்டுத்தனத்தை வெற்றிகரமாக தடுக்க முடியும் என்பதை சீனாவிற்கும் உலகத்திற்கும் உணர்த்தியது. இந்தியா தன்னுடைய சவால்களை எல்லைப்பகுதியில் சந்தித்தாலும், இந்தியாவின் ராஜதந்திர நடவடிக்கைகள், கொரானா வைரஸ் தொற்றின் உலக சுகாதார நெருக்கடியில் இந்தியா ஒரு முக்கிய பங்கை தக்கவைத்து, உலகத்தில் அனைவருக்கும் பாதுகாப்பை வழங்குவதில் முன்னோடியாக இருந்தது.

பெரும்பாலான நாடுகளுக்கு சீனாவிடம், இந்த உலகளாவிய சூழலிலும் உள்ளூர் சூழலிலும் எதிர்த்து நிற்பது இயலாத காரியமாக இருந்தாலும், இந்தியா அதை சாதித்து காட்டியது. உலகத்திற்கு இந்தியா அனுப்பிய செய்தி இதுதான். இனிமேல் இதுதான் இயல்பு என்றால் நாங்கள் அதற்கு தயாராக இருக்கிறோம்.

இதை உலகம் மட்டுமல்ல, சீனாவும் கவனித்தது. இப்பொழுது சீன கம்யூனிஸ்ட் கட்சி, எல்லை பிரச்சினைகளை தீர்ப்பதற்கு ஏற்ற சூழலை உருவாக்க வேண்டும் என்றெல்லாம் பேச ஆரம்பித்து இருக்கிறது என்றால் அது சிறிய விஷயம் அல்ல. இந்திய-சீன உறவுகள் எல்லைப் பகுதிகளில் இருக்கும் சவால்களுக்கு தனித்து இருக்க முடியாது என்று இந்தியா தொடர்ந்து அனுப்பிய செய்தியின் விளைவுதான் அது.

இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையிலான உறவுகள் எப்பொழுதும் போல மிகவும் பலவீனமாகவே இருக்கின்றன. இந்தியா எதிர்த்து நின்று, சீனா பின்வாங்கியதால் மட்டுமே தன்னுடைய வழிகளை சீனா திருத்திக் கொள்ளப் போவதில்லை. ஆனால் என்ன மாதிரியான உறவுகளை சீனாவிடம் கொள்ள வேண்டும் என்ற முடிவுகளை எடுக்கும் திறமை இந்தியாவிற்கு உள்ளது என்பதை இனிமேலும் மறுக்க முடியாது. இந்த தன்னம்பிக்கை இந்த புதிய போர் நிறுத்த ஒப்பந்த விவகாரத்தில் இந்தியா செயல்பட்ட விதத்தில் பிரதிபலிக்கிறது.

பல ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா பல்வேறு முனைகளிலிருந்து பாகிஸ்தான் மீது அழுத்தத்தை கொடுப்பதில் வெற்றி அடைந்திருக்கிறது. பொருளாதார ரீதியில் உலகத்தில் இருந்து பாகிஸ்தான் தனித்திருப்பது நடந்து வருகிறது. FTFA அமைப்பு இதில் முன்பு நினைத்ததைவிட மிகவும் திறமையாக செயல்பட்டு வருகிறது.

ராஜதந்திர ரீதியில், பாகிஸ்தான், தீவிரவாதத்தை இந்தியாவிற்கு எதிரான கொள்கையாக பயன்படுத்தி வருவதை இந்தியா சரியான முறையில் எடுத்துக்காட்டியுள்ளது. ராணுவ ரீதியில், பாகிஸ்தானிடம் அணு ஆயுதங்கள் இருக்கிறது என்ற மிரட்டலை தங்களால் சமாளிக்க முடியும், வழக்கமான போர்ச்சூழலில் தங்களால் பதிலடி கொடுக்க முடியும் என்றும் பாகிஸ்தான் பொறுப்பற்று நடந்து கொண்டால் அதன் மீது தாக்கங்களை ஏற்படுத்த முடியும் என்பதையும் நிரூபித்துள்ளது.

சீனாவிடம் எதிர்த்து நின்றதன் மூலம், பாகிஸ்தானுக்கும் சீனாவுக்கும் இடையிலான கூட்டணி இருந்தாலும், இரண்டு நாடுகளும் சேர்ந்து சவால்களை விடுத்தால் கூட இந்தியாவால் சமாளிக்க முடியும் என்பதை உணர வைத்துள்ளது.

இதன் விளைவாக சீனாவுடனும் பாகிஸ்தானுடனும் ராஜதந்திர ரீதியில் விளையாடுவது இந்தியாவிற்கு கைவந்த கலையாகி உள்ளது. அமைதிக்கு ஒரு வாய்ப்பு கொடுத்ததற்கு காரணம், அண்டை நாடுகளுடன் உறவு வைத்துக்கொள்ள வேண்டும் என்ற அப்பாவித்தனமோ அல்லது அமெரிக்கா போன்ற நாடுகளிலிருந்து வந்த அழுத்தமோ அல்ல. இந்தியா எப்பொழுதுமே அமைதிக்கு தன்னுடைய கதவுகளை மூடியதில்லை.

அண்டை நாடுகள் இதுவரை அந்த வழியில் செல்லாமல் சென்றனர். இப்பொழுது இந்தியா, சவால் விடுத்தாலும், எதிர்த்து நிற்க தங்களுக்கு உள்ள திறனை எடுத்துக்காட்டி தங்களுடைய நலன்களை பாதுகாக்க முடியும் என்று நிரூபித்த பிறகு தான் அமைதிக்கு மறுபடியும் ஒரு வாய்ப்பு கொடுத்துள்ளது. இந்தியாவின் இந்த செய்தி பிராந்தியத்தின் அனைத்து நாடுகளுக்கும் சென்று சேர்ந்திருக்கிறது.

Reference: ORF

Next Story
கதிர் தொகுப்பு
Trending News