5G யில் ஹவாயை (Huawei) வெளியேற்றிய இந்தியா- சீனாவின் 'சதிக்கு' பின்னடைவு!
By : Saffron Mom
இந்தியாவில் 5G பரிசோதனைகளுக்காக தேர்ந்தெடுக்கப்பட்டு பட்டியலிடப்பட்ட 5 நிறுவனங்களில் மிகவும் சர்ச்சைக்குரிய சீனாவின் 'ஹவாய்' நிறுவனம் விடுபட்டுள்ளது. இந்தியாவின் தகவல் தொழில்நுட்ப உள்கட்டமைப்பில் சீன நிறுவனங்கள் அனுமதிக்கப்பட வேண்டுமா என்று பல விவாதங்களுக்கு பிறகு, சில பல வருடங்கள் இழுத்தடித்து ஒரு வழியாக இந்தியா இந்த முடிவை எடுத்துள்ளது.
அமெரிக்கா, இங்கிலாந்து, இத்தாலி, ஆஸ்திரேலியா மற்றும் பெரும்பாலான ஐரோப்பிய ஒன்றியங்களுடன் இணைந்து தங்களுடைய 5ஜி நெட்வொர்க்கை பாதுகாப்பாகவும், சீன ஊடுருவல்கள் இல்லாத வண்ணமும் இருக்கும்படி இந்தியாவும் பார்த்துக் கொள்கிறது.
அதாவது ஹவாயுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட சீன கம்யூனிஸ்ட் கட்சி இந்தியாவில் வேவு பார்க்க முடியாது. மே 4 அன்று இந்தியாவின் தகவல் தொலைத்தொடர்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த எரிக்சன், பின்லாந்தை சேர்ந்த நோக்கியா, தென் கொரியாவைச் சேர்ந்த சாம்சங், இந்தியாவின் C-Dot மற்றும் ரிலையன்ஸ் ஜியோ இன்போகாம் ஆகிய ஐந்து நிறுவனங்கள் அசல் உபகரண உற்பத்தியாளர்கள் மற்றும் தொழில்நுட்ப வழங்குனர்கள் என அறிவித்துள்ளது.
இவர்கள் தங்களுடைய உபகரணங்களையும் தீர்வுகளையும் பாரதி ஏர்டெல், ரிலையன்ஸ் ஜியோ இன்போகாம், வோடபோன், எம்டிஎன்எல் ஆகிய நான்கு தொலைதொடர்பு சேவை வழங்குநர்களுக்கு அளிப்பார்கள். இந்த சோதனைகள் 6 மாதங்களுக்கு மேல் நடக்கும். இது நகர்ப்புற மற்றும் கிராமப்புறங்களை அடக்கும்.
ஹவாய் வாங்கும் நேரத்தில் உலகின் மலிவான விலையில் இவற்றை வழங்குகிறது. (ஆனால் ஹவாய் செலவுகள் போக போக அதிகரிக்கும் வண்ணமே இருக்கும்) இதனால் தற்போது இத்தகைய உபகரணங்களின் விலை அதிகமாக தான் இருக்கும். ஆனால் ஹவாயை தவிர்ப்பதன் மூலம் இந்தியாவின் முக்கியமான ஒரு கட்டமைப்பான தொலைத்தொடர்பை நம்பகமான கைகளில் இந்தியா ஒப்படைக்கலாம்.
பாகிஸ்தானில் பயங்கரவாதிகள் ஆதரிப்பது, கால்வான் ராணுவ நடவடிக்கைகள் எடுப்பது என சீனாவின் மேலாதிக்கத்திலிருந்து நம்மை பாதுகாப்பாக வைத்திருக்கும். இந்தியாவிற்கு எதிரான புவிசார் அரசியல் நிலைப்பாட்டை சீனா கொண்டிருக்கும் நேரத்தில் இந்தியாவின் முக்கியமான ஒரு கட்டமைப்பை சீனாவிடம் ஒப்படைப்பது தற்கொலைக்கு சமமானது.
சீனாவுடன் இந்தியா பகிர்ந்து கொள்ளும் 3488 கிலோ மீட்டர் நீளமுள்ள எல்லை காரணமாக, இந்த ஆபத்து இந்தியாவிற்குள் மட்டும் அடங்கி விடவில்லை. சீனாவுடன் வர்த்தக செய்யும் ஒவ்வொரு நாட்டையும் இது பாதிக்கும். 2017 ஜூனில் சீனாவில் வந்த தேசிய புலனாய்வு சட்டத்தின் பிரிவு 7, 9, 12 மற்றும் 14 இன் படி சீன நிறுவனங்களும் குடிமக்களும் சீனாவின் உளவு நிறுவனங்களுக்கு ஆதரவு அளிக்கும்படி சட்டத்தால் கட்டுப்படுத்தப்பட்டுள்ளனர்.
இதற்காக அவர்களுக்கு ஊக்கம் அளிக்கப்படுகிறது. சீனாவின் முகவர்களாக செயல்பட்டு, சீன அரசாங்கத்தை ஆதரித்து கூட்டுறவு கொள்வதற்கு இது வழிவகுக்கிறது.
5ஜி தொழில்நுட்பம் என்பது அதிகபட்சமாக ஊடுருவக்கூடிய தன்மையில் இருப்பதால், ஒரு நாட்டின் இதயம் போன்ற தகவல் தொழில்நுட்ப உள்கட்டமைப்பை, எந்தவித ஒழுங்கொ அல்லது விதிகளையோ பின்பற்றாத ஒரு சர்வாதிகார கட்சிக்கு கொடுப்பது சரியல்ல.
இந்தியாவின் சட்டத்தின்படி எந்த நாட்டையும் ஒருதலைப்பட்சமாக முழுவதுமாக விலக்க முடியாது. இந்தியா கடந்த வருடம் உலக வர்த்தக அமைப்பிற்கு அனுப்பி வைத்த முன்மொழிவில், 'பரிமாற்ற முனைய உபகரணங்களுக்கான அத்தியாவசிய தேவைகள்' என்ற வரைவு ஜூன் 2020 ஒப்புக்கொள்ளப்பட்டு, அக்டோபர் 2020 இல் நடைமுறைக்கு வந்தது.
இதில் ஒரு தகவல் பரிமாற்ற நெட்வொர்க்கை பயன்படுத்துபவர்களின் பாதுகாப்பு மற்றும் மனித சுகாதார பாதுகாப்பு ஆகியவை முக்கியமான தொகுப்புகளாக சேர்த்துக் கொள்ளப்பட்டிருக்கிறது. இதன்படி டெலிகாம் கருவிகள், பொறியியல் மையம் மூலம் சோதனை செய்து சான்றிதழ் வாங்க வேண்டும் என்று கட்டாயப் படுத்தி உள்ளது.
இத்தகைய ஒழுங்குமுறை, ஹவாய் மற்றும் மற்றொரு சீன நிறுவனமான ZTE ஆகியவை இந்திய உள்கட்டமைப்பை ஊடுருவுவதை தடுத்துள்ளது. நோக்கியா அல்லது எரிக்சன் நிறுவனமோ இதனால் ஊடுருவாது என்பது இதன் பொருளல்ல. ஆனால் ஜனநாயகம் ஜனநாயகங்களுடன் ஒப்பந்தம் செய்யும் பொழுது இதை சரி செய்ய தனித்துவமான நீதித்துறை உள்ளிட்ட பல வழிகள் உள்ளன.
ஆனால் சர்வாதிகார மற்றும் முரட்டுத்தனமான CCP கட்சியுடன் ஒப்பந்தம் செய்யும்போது இவை கிடைக்காது. இப்படி புதியதாக வரும் ஒழுங்குமுறை தேவைகளை பூர்த்தி செய்ய இயலாமல் ஹவாய் இந்தியாவை விட்டு வெளியேறுகிறது.
5G டெக்னாலஜி தவிர்த்து 5Gi தகவல் தொலைத்தொடர்பு சேவையை பயன்படுத்த வழங்குநர்கள் பயன்படுத்த ஊக்குவிக்கப்படுவார்கள். இது இந்தியாவால் பரிந்துரைக்கப்படுகிறது. ஐஐடி மெட்ராஸ் சென்ட்ரல்
டெக்னாலஜி மற்றும் IIT ஹைதராபாத்தால் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த தகவல் தொழில்நுட்பம் சர்வதேச தகவல் தொழில்நுட்ப யூனியனால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து சமீபத்தில் சமீர் சரண் கூறுகையில், சீனாவின் டிஜிட்டல் மற்றும் பொருளாதார உயர்வுக்கு இந்தியா பங்களிக்கக் கூடாது. சீனா தொடர்ந்து இந்தியர்கள் பற்றிய தகவல்களை சேகரிக்கும். இந்தியாவின் அரசியல் மற்றும் சமூகத் துறைகளில் தலையிட்டு செல்வாக்கு செலுத்த நினைக்கும் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் நயவஞ்சகம் கவலைக்குரியது. டோக்லாம் மோதலில் நடந்த பிரச்சினையின் பொழுது சீனாவிற்கு சொந்தமான பிரவுசர் இந்தியாவிலுள்ள ஆண்ட்ராய்டு கைப்பேசிகளில் சீனாவிற்கு சாதகமான கருத்துக்களை வடிகட்டி தந்தது என்பது தெரியவந்தது. டிஜிட்டல் யுகத்தில் இது தகவல் போர். தடை செய்யப்பட்ட சில ஆப்களில் சீனாவை விமர்சித்து வரும் கருத்துகள் நீக்கப்படுவதும், மற்ற சம்பவங்கள் புகைப்படங்கள் ஆகியவை குறைக்கப்படுவதும் தொடர்ந்து நிகழ்கிறது.
5ஜி சோதனையின் இந்தக் கொள்கை நடவடிக்கையால், இந்தியாவின் முக்கியமான உள்கட்டமைப்பில் சீன கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் அதன் வணிக ஆயுதங்கள் எந்தவித அணுகலையும் பெறாது என நாம் நம்பலாம்.
இதற்கு முன்னதாக இந்தியாவின் நெடுஞ்சாலை திட்டங்களுக்கு சீன நிறுவனங்கள் ஏலம் எடுப்பதற்கு நிதின்கட்கரி ஏற்கனவே தடை விதித்திருந்தார். மற்ற முக்கியமான உள்கட்டமைப்பு துறைகளான துறைமுகங்கள், ஆற்றல், ரயில்வே, தகவல் தொழில்நுட்பம், இணையதளம், பிராட்பேண்ட், வங்கி, நிதி, விண்வெளி, அணுசக்தி, பொது சுகாதாரம் என அனைத்திலும் சீன நிறுவனங்கள் பங்கு எடுப்பதை நாம் தடுக்க வேண்டும்.
அரசாங்கம் வருங்காலத்தில் பின் வாங்கக் கூடாது. ஹவாய் விவகாரத்தில் எந்தவித பேச்சுவார்த்தைக்கு இடமில்லை என்ற உறுதியுடன் இருக்க வேண்டும். எந்த அரசாங்கம் ஆட்சியில் இருந்தாலும், அரசியல் கருத்தியல்கள் வேறுபட்டாலும் ஹவாய் கண்டிப்பாக உள் நுழையக் கூடாது. இப்போது வெளியேற்றப்பட்டு உள்ளது. அது அப்படியே இருக்க வேண்டும்.
ORF தளத்தில் GAUTAM CHIKERMANE எழுதி வெளிவந்த கட்டுரையின் தமிழ் சாராம்சம்.!