Kathir News
Begin typing your search above and press return to search.

வைரஸை ஏற்றுமதி செய்த சீனா! தடுப்பு மருந்தை ஏற்றுமதி செய்யும் இந்தியா!

வைரஸை ஏற்றுமதி செய்த சீனா! தடுப்பு மருந்தை ஏற்றுமதி செய்யும் இந்தியா!

வைரஸை ஏற்றுமதி செய்த சீனா! தடுப்பு மருந்தை ஏற்றுமதி செய்யும் இந்தியா!

Saffron MomBy : Saffron Mom

  |  25 Jan 2021 8:00 AM GMT

ஒரு வருட காலத்திற்கு முன்பாக சீனாவில் வுஹான் மாகாணத்தில் கொரானா வைரஸ் (covid 19) ஒன்று பரவ ஆரம்பித்தது. முதல் உலகப் போரும், அதைத் தொடர்ந்த ஸ்பானிஷ் ப்ளூ கூட பெரும்பாலும் ஐரோப்பிய நாடுகளையும் சில ஆசிய நாடுகளையும் பாதித்தது.

உலக வரலாற்றிலேயே முதல்முறையாக உண்மையான 'உலக அவசரநிலை' என்று அழைக்கும் அளவிற்கு கொரானா வைரஸ் பல நாடுகளின் பொருளாதார நிலையும் வாழ்க்கை முறையுமே தலைகீழாக புரட்டிப் போட்டது.

ஒட்டுமொத்த ஊரடங்கு என்று பெரும்பாலானோர் தங்கள் வாழ்நாளில் இதுவரை பார்த்திராத அளவுக்கு தீவிரமான நடவடிக்கைகள் ஆரம்பித்தன. அரசாங்கங்கள் மேல் மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கைக்கு இக்காலகட்டம் ஒரு பரிசோதனை தளமாக அமைந்தது.

மக்கள் அரசாங்கம் மேல் எந்த அளவு நம்பிக்கை வைத்திருந்தார்களோ, அந்த அளவு அரசாங்கம் விதிக்கும் விதிமுறைகளைப் பின்பற்ற தயாரானார்கள். அமெரிக்காவில் ஆட்சி மாற்றம் நிகழ்ந்ததற்கு இந்த வைரஸ் ஒரு முக்கிய காரணம் என்றால் அது மிகையல்ல.

ஆனால் தொடர்ந்து மக்கள் நம்பிக்கையைப் பெறுவதில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான இந்திய அரசாங்கம் முன்னிலை வகிக்கிறது.

இந்தியா டுடே சமீபத்தில் வெளியிட்ட 'மூட் ஆப் தி நேஷன்' கருத்துக்கணிப்பில் கொரானா வைரசினால் ஏற்பட்ட பொருளாதார தாக்கங்களை கூட மத்திய அரசு நன்றாக கையாண்டதாக சதவிகிதம் பேர் குறிப்பிட்டுள்ளனர்.

தங்களுடைய சம்பளம் குறைந்து இருந்தாலும், சிலர் வேலையை இழந்து இருந்தாலும் மத்திய அரசாங்கம் மற்றும் பிரதமர் மீது நம்பிக்கை இருக்கிறது.

ஆனால் ஆரம்ப காலகட்டத்தின் போது, அதிக மக்கள் அடர்த்தி மற்றும் வறுமை கொண்ட நாடாக கருதப்படும் இந்தியா வைரஸ் தாக்கத்திற்கு மிகவும் அதிகப்படியாக உள்ள போகிறது என்று உலகில் பல 'நிபுணர்களும்' கருத்து கூற ஆரம்பித்தனர். தங்கள் நாட்டில் வைரஸை சமாளிக்க முடியவில்லை என்பதால் தங்கள் மனதை தேற்றிக் கொள்வதற்காக இந்தியாவில் விரைவில் நிறைய இறப்புகள் ஏற்படும், மில்லியன் கணக்கில் மக்கள் சாவார்கள் என்றெல்லாம் 'கணித்து' தங்களை ஆறுதல் படுத்திக் கொண்டார்கள்.

தன்னை தொற்று நோய் நிபுணர் என்று கூறிக்கொண்ட ஒருவர் இந்தியாவில் ஜூலை மாதத்திற்குள் பல மில்லியன் இறப்புகள் ஏற்படலாம் என்றெல்லாம் கூறி மக்கள் மத்தியில் பீதியை கிளப்ப ஆரம்பித்தனர். மற்றொருவர், நல்ல வேலை கொரானா வைரஸ் சீனாவில் தோன்றியது, அவர்கள் சமாளித்தார்கள் இந்தியாவில் தோன்றி இருந்தால் இன்னும் நிலைமை மோசமாக இருக்கும் என்றெல்லாம் உளறிக் கொட்டினார்கள்.

சீனா வைரஸை உலகத்திற்கு பரப்பி விட்டு விட்டு, தங்கள் நாட்டில் வைரசை கட்டுக்குள் கொண்டுவந்தது அல்லது அப்படி ஒரு தோற்றத்தை உருவாக்கி வைத்தது. கொரானா வைரஸ் எங்கிருந்து உருவானது என்ற கேள்வியை யாரும் கேட்டு விடக் கூடாது என்பதில் சீனா உறுதியாக இருந்தது. இதுகுறித்து உலக சுகாதார அமைப்பு ஒரு ஆராய்ச்சியை மேற்கொள்ள வேண்டும் என்று கூறிய ஆஸ்திரேலியாவின் மீது சீனாவின் முழு கோபமும் திரும்பி ஆஸ்திரேலியாவிற்கு தங்களால் எந்த அளவுக்கு பொருளாதார இழப்பை ஏற்படுத்த முடியுமோ அந்த அளவுக்கு ஏற்படுத்தியது.

ஆஸ்திரேலியா மசிந்து கொடுக்கவில்லை. ஒரு வருடமாக தொற்று நோய் பரவி கொண்டிருந்தாலும் இன்னும் உலக சுகாதார அமைப்பு சீனாவிற்கு சென்று ஆய்வுகளை மேற்கொள்ள பல தடைகளை சீனா தொடர்ந்து விதித்து வருகிறது. ஒரு சர்வாதிகார நாடினால் மட்டுமே ஊரடங்குகளை வெற்றிகரமாக செயல்படுத்த முடியும் என்றும் ஜனநாயக நாட்டில் இது சாத்தியமில்லை என்றும் தொற்றுநோய் காலத்திற்கு ஜனநாயக நாடுகள் சரிப்பட்டு வராது என்று பலரையும் சிந்திக்கும் அளவிற்கு சீனா தூண்டியது.

ஆனால் இத்தனை சவால்களையும் மீறி இந்தியா இன்று கொரானா வைரஸை கட்டுக்குள் கொண்டு வந்துள்ளது. அதுமட்டுமல்லாமல் இந்தியா கொரானா வைரஸ் தொற்றிற்கு வெற்றிகரமாக தடுப்பூசியை கண்டறிந்துள்ளது.

அதற்கு லான்செட் அறிவியல் இதழ் ஒப்புதல் வழங்கியுள்ளது. ஜனவரி 16 ஆம் தேதி ஆரம்பித்த இந்த தடுப்பூசி வழங்கும் திட்டம் ஆறு நாட்களில் ஒரு மில்லியனுக்கும் மேற்பட்டோருக்கு தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது. சுகாதாரத்துறை பணியாளர்களையும், மருத்துவ ஊழியர்களையும் இந்த முதல் கட்டம் உள்ளடக்குகிறது.

இது மட்டுமல்லாமல் இந்தியா பங்களாதேஷ், ஸ்ரீலங்கா, பிரேசில், மாலத்தீவுகள், மொரீசியஸ், நேபாளம் என பல நட்பு நாடுகளுக்கு தடுப்பு மருந்து மைத்ரேயி என்ற திட்டத்தின் மூலம் இலவசமாக தடுப்பூசிகளை வழங்கி வருகிறது.

பல நாடுகளும் இந்தியாவில் இருந்து தடுப்பூசியை எதிர்பார்த்து உதவிகரம் வேண்டி கொண்டுள்ளன. இதனால் இந்தியாவிற்கு நல்லெண்ணங்கள் உலக அளவில் உருவாகி வருகிறது. பிரேசில் அதிபர் சமீபத்தில், அனுமார் சஞ்சீவி மலையில் மூலிகையைக் கொண்டு சரி செய்வது போல இந்தியாவில் இருந்து தங்களுக்கு தடுப்பூசி வந்து சேர்த்ததாக, இந்திய மக்களையும் அரசாங்கத்தையும் புகழ்ந்து ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

சீனாவின் தடுப்பூசி பிரச்சினைக்குரியதாக இருப்பதும், அதை வழங்க ஏகப்பட்ட நிபந்தனைகள் விதிக்கிறது. உதாரணமாக, பிரேசிலுக்கு அந்த தடுப்பூசியை வழங்குவதற்கு கொரானா வைரஸை 'கம்யூனிஸ்ட் வைரஸ்' என்று அழைத்து வந்த பிரேசில் வெளியுறவுத்துறை அமைச்சரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று சீனா நிபந்தனை விதித்தது.

இந்தியா எந்தவித நிபந்தனையும் அல்லது கைமாறும் எதிர்பாராமல் தேவைப்படும் நேரத்தில் உதவி புரிந்து வருவது உலக சுகாதார அமைப்பு, அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளில் இருந்து இந்தியாவிற்கு பாராட்டுகளை பெற்று தருகிறது.

சீனா வைரஸை உலகத்திற்கு ஏற்றுமதி செய்தது. இந்தியா அதன் தடுப்பூசியை உலகத்திற்கு ஏற்றுமதி செய்கிறது. ஆசிய நாடுகளில் சீனாவினால் மட்டுமே அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு காண முடியும் என்ற ஒரு தலைக்கனத்தை இறக்கி இந்தியா இதில் முன்னேறி வருகிறது.

இந்தியா இந்த வாய்ப்பை நல்லபடியாக பயன்படுத்துவது ராஜரீக விவகாரங்களில் நம் மீது நல்லெண்ணத்தையும், நற்பெயரையும் உருவாக்கித் தரும் என்பதில் ஐயமில்லை.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News