Kathir News
Begin typing your search above and press return to search.

ஆப்கானிஸ்தான் அரசு- தாலிபான்கள் பேச்சுவார்த்தை: பங்கேற்கும் இந்தியா.!

ஆப்கானிஸ்தான் அரசு- தாலிபான்கள்  பேச்சுவார்த்தை: பங்கேற்கும் இந்தியா.!

Saffron MomBy : Saffron Mom

  |  27 March 2021 12:25 PM GMT

இந்த மாதம் ஏற்கனவே ஜோ பிடென் தலைமையிலான அமெரிக்க நிர்வாகம் ஆப்கானிஸ்தானின் எதிர்காலத்திற்கான தனது திட்டத்தை முன்வைத்தது. ஆப்கானிஸ்தான் ஜனாதிபதி அஷ்ரப் கானிக்கு எழுதிய கடிதத்தில், அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் ஆண்டனி பிலிங்கன் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகளை முன்மொழிந்தார்.

ஆப்கானிஸ்தானில் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளுக்கும் தலிபான்களுக்கும் இடையிலான அதிகாரப் பகிர்வு, அமெரிக்க வெளிநாட்டுப் படைகள் வெளியேறிய பிறகு இப்பகுதியில் பிராந்திய நாடுகள் ஈடுபாடு, ஆப்கானிஸ்தானில் முக்கியமான பங்காற்றவேண்டிய சீனா, இந்தியா, ஈரான், பாகிஸ்தான், ரஷ்யா, ஆகிய நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் ஐக்கிய நாடுகள் சபையுடன் துருக்கியில் நடத்தப்பட வேண்டிய அமைதிப் பேச்சுவார்த்தைகள் என பல நடவடிக்கைகளை முன்மொழிந்தார்.

இதுவரை ஆப்கானிஸ்தானுடன் வளர்ந்துவரும் உறவை கொண்டிருந்தாலும் அந்த அளவு அதன் அமைதிப் பேச்சுவார்த்தை நடவடிக்கைகளில் முக்கியமான நாடாக இந்தியா பங்கேற்கவில்லை. இப்பொழுது அந்த பொறுப்பை இந்தியாவும் ஏற்றுக் கொண்டிருப்பது ஒரு முக்கியமான விஷயமாக பார்க்கப்படுகிறது.

ரஷ்யா தனது வளர்ந்து வரும் சீனா மற்றும் பாகிஸ்தானுடைய உறவு காரணமாக இந்தியாவை இந்த பேச்சுவார்த்தையில் ஈடுபடுத்த சற்று தயக்கம் காட்டியதாக செய்திகள் வெளியாகின. பாக்கிஸ்தான் எப்பொழுதுமே இந்தியாவை எங்கு சேர்த்துக் கொள்வதிலும் எதிர்த்தே வந்திருக்கிறது. சீனாவுடனான இந்தியாவுடைய உறவுகள் சமீப காலங்களில் பெரும் வீழ்ச்சியை சந்தித்தது. ஆனால் இந்த அமைதிப் பேச்சு வார்த்தையில் ஈடுபடுவதற்கு இந்தியாவிற்கு அமெரிக்காவின் ஆதரவு தெளிவாக உள்ளது .

2018 நவம்பரில் ரஷ்யா, தலிபான்களுடன் மற்றும் ஆப்கான் அமைதி குழு, மற்ற பிராந்திய நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்திய பொழுது இந்தியா 2 அதிகாரப்பூர்வமற்ற டிப்ளமோட்களை ரஷ்யாவிற்கு அனுப்பி வைத்தது.

2020 செப்டம்பரில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் டோஹாவில் நடந்த ஆப்கான் பேச்சுவார்த்தைகளில் வீடியோ வழியாக கலந்து கொண்டு எத்தகைய அமைதி நடவடிக்கைகளும் ஆப்கனிஸ்தான் மக்களால் கட்டுப்படுத்தப்பட வேண்டும் என்று என்று ஊக்குவித்தார்.

ஆப்கானிஸ்தானை பொருத்தவரை ஒரு நிலையான, பாதுகாப்பான, பொருளாதாரத்தில் முன்னேற்றம் அடைந்த ஒரு நாடாக வேண்டும் என்பது அவர்களுடைய முடிவாக இருக்கும் பட்சத்தில் இந்தியா பேச்சுவார்த்தைக்குள் நுழைவது அவர்களுக்கு நன்மையை அளிக்கும்.


பாரம்பரியமாக இந்தியாவும் ஆப்கானிஸ்தானும் வலிமையான இருதரப்பு உறவுகளை கொண்டுள்ளன ஆப்கானிஸ்தானில் வளர்ச்சி திட்டங்களை அந்நாட்டின் வேண்டுகோளின் பேரில் இந்தியா நிறைவேற்றி வந்துள்ளது. இதன் காரணமாக இந்தியாவிற்கு அங்கே நல்ல பெயர் கிடைத்துள்ளது.

ஆப்கானிஸ்தானுக்கு கல்வி, சுகாதாரம், விவசாயம், மின் உற்பத்தி, போக்குவரத்து, கிராமப்புற முன்னேற்றம், மற்றும் முக்கியத்துவம் வாய்ந்த உள்கட்டமைப்பு வசதிகளில் இந்தியா உதவி புரிந்து வருகிறது. பிப்ரவரியில் ஆப்கானிஸ்தான் covid-19 தடுப்பூசியின் ஐந்து லட்சம் டோஸ்களை இந்தியாவிடமிருந்து பெற்றது.

இந்தியாவின் தடுப்பூசி தான் ஆப்கானிஸ்தானில் வந்துசேர்ந்த முதல் தடுப்பூசி ஆகும். ஆப்கானிஸ்தான் அதிபருக்கும் இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கும் இடையில் நடைபெற்ற ஒரு வீடியோ மாநாட்டில், காபூலின் அருகே ஷாஹுத் அணை கட்டுவதற்கு ஒப்புக்கொண்டு கையெழுத்திட்டார்.

இந்த அணை, பாதுகாப்பான குடிநீர் வசதியையும், நீர்ப்பாசன வசதியையும், அருகில் உள்ள பகுதிகளுக்கு மின் உற்பத்தியும் வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆப்கானிஸ்தானில் இந்தியாவுடைய வலிமையும், நற்பெயரும் அதிகரித்து வரும் வேளையில், இது அமெரிக்காவுடனான இந்தியாவின் உறவையும் வலுப்படுத்துகிறது. இந்தியா, ஆப்கானிஸ்தானில் புரிந்துவரும் வளர்ச்சி நடவடிக்கைகளை அமெரிக்கா மிகவும் பாராட்டுகிறது.

இந்தியாவின் கண்ணோட்டத்தில் பார்த்தால் அமைதிப் பேச்சுவார்த்தைகளில் தீவிரமாக பங்கேற்பது ஒரு முக்கியமான மாற்றத்தை ஏற்படுத்த தேவையான ஒன்றாகும். 1990களில் மற்றும் 2000களில் தலிபான்களுடன் எத்தகைய ஒப்பந்தங்களை செய்து கொள்வதற்கோ அல்லது தலிபான்களை அங்கீகரிப்பதற்கோ இந்தியா தொடர்ந்து எதிர்த்து வந்துள்ளது.

சமீப காலங்களில் இந்தியாவுடைய எண்ணங்களில் பரிணாம வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. இந்தியா தலிபான்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு வெறுப்பு காட்டவில்லை என்றும் ஆனால் தொடர்ந்து அங்கே ஜனநாயக ரீதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கங்களுக்கு இந்தியா ஆதரவளிக்கும் என்றும் தன்னுடைய நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ளது. இந்தியா அமெரிக்க அதிபர் ஜோ பிடனின் அமைதி நடவடிக்கைகளில் தற்பொழுது பங்கேற்றால் தலிபான்களுடன் தலிபான்களுடன் ஒப்பந்தம் வைத்துக்கொண்டு அதிகார பகிர்வை செய்து நாட்டில் அமைதி ஏற்பட ஒரு வழி ஏற்படும் என்பதை மறுப்பதற்கில்லை. இந்த பிராந்திய நிலைப்பாடுகளில் இந்தியாவின் முக்கியத்துவத்தை உணர்ந்துகொண்ட தலிபான்களும், இந்தியாவுடன் இணைந்து வேலை செய்வதில் தங்களுக்கு தயக்கம் இல்லை என்பதை வெளிப்படுத்தியுள்ளனர்.

மேலும் சீனா, ரஷ்யா, அமெரிக்கா ஆகிய நாடுகள் ஆப்கானிஸ்தானில் அமைதி என்பது எப்படி இருக்கவேண்டும் என்ற அவர்களுடைய கண்ணோட்டத்திற்கு மீது ஒரு சவாலை அளிக்கக்கூடும். வெளிநாட்டு படைகள் ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேறுவது, ஆப்கானிஸ்தான் மறுபடியும் ஒரு தீவிரவாதிகளுக்கான பாதுகாப்பு தளமாக மாறாமல் இருப்பது, வன்முறையை முடிப்பது, ஆப்கானிஸ்தானில் உள்ள குழுக்களுக்கு இடையிலேயே அரசியல் ஒப்பந்தங்களை ஏற்படுத்தி வலுவான எதிர்காலத்திற்கு அடித்தளம் இடுவது ஆகியவை ஆகும்.

ஆப்கானிஸ்தானின் பெரும்பான்மையான பிரச்சினைகளுக்கு பாகிஸ்தான் ஒரு மூலதனமாக இருக்கிறது என்பதை அனைத்து நாடுகளும் உணரவேண்டும். இந்த உண்மை விடுபட்டு போகக்கூடாது என்று இந்தியா விரும்புகிறது.

அவ்வப்பொழுது அமெரிக்கா பாகிஸ்தானின் மீது அழுத்தங்களைப் பிரயோகித்து உள்நாட்டு அளவில் தீவிரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுக்க வேண்டாம் என்று கூறினாலும், மற்றவர்கள் இந்த விஷயங்கள் பக்கம் போவதே இல்லை. ஆனால் இந்தியாவின் நிலைப்பாடு தான் இதில் சரியானது.

மூத்த தலிபான் தலைவர்கள், அவர்கள் குடும்பங்கள், ஹக்கானி நெட்வொர்க் ஆகியவற்றுக்கு பாகிஸ்தானில் தொடர்ந்த அடைக்கலம் கொடுக்கும் வரை ஆஃப்கானிஸ்தான் ஒரு அமைதியான நாடாக மாற முடியாது.

சீனா, ஈரான், பாகிஸ்தான், ரஷ்யா, அமெரிக்கா ஆகிய நாடுகள் ஒன்றிணைந்து இந்த பிரச்சினையை எப்படி தீர்க்கின்றன என்பதை பொறுத்துதான் பார்க்க வேண்டும். இந்தியாவைப் பொருத்தவரை ஆப்கானிஸ்தானின் நன்மைகளுக்காக தொடர்ந்து இந்தியா குரல் கொடுத்து வருவது தொடரும். ஆனால் தற்பொழுது வரை அமைதிப் பேச்சு வார்த்தைகள் நிறைய பேச்சுவார்த்தைகளை கொடுத்தன, ஆனால் குறைந்தபட்ச அமைதியைத் தான் ஏற்படுத்தி இருக்கின்றன.

Reference: ORF

Next Story
கதிர் தொகுப்பு
Trending News