Top
Kathir News
Begin typing your search above and press return to search.

பாதுகாப்புத் துறையில் 'சுயசார்பு பெற' புதுமை அவசியம் - ஓர் அலசல்!

பாதுகாப்புத் துறையில் சுயசார்பு பெற புதுமை அவசியம் - ஓர் அலசல்!

Pradeep GunasekaranBy : Pradeep Gunasekaran

  |  12 April 2021 6:52 AM GMT

பாதுகாப்பு துறையில் நாம் தன்னிறைவு பெறவேண்டும் என்பதை மத்திய பா.ஜ.க அரசாங்கம் பல காலமாக நோக்கமாகக் கொண்டுள்ளது. இதற்கான முக்கியமான தடைகள், தேவைகள், அதற்கான காரணங்கள் குறித்து சமீர் ஸ்ரீவத்சவா என்ற நிபுணர் ORF தள கட்டுரையில் விளக்கியுள்ளார். அத்தகவல்களின் தமிழ் சாராம்சத்தை கீழே காணலாம். சமீர் ஸ்ரீவத்சவா ஒரு இந்திய ராணுவ அதிகாரி, 20 வருட கால அனுபவங்கள் கொண்டவர்.

கண்டுபிடிப்புக்கும் புதுமைக்கும் இடையே ஒரு தெளிவான வித்தியாசம் உள்ளது. அதாவது கண்டுபிடிப்பு (invention) என்பது ஏற்கனவே இல்லாத ஒரு பொருளை முற்றிலுமாக புதிதாக உருவாக்குவது. புதுமை (innovtation) என்பது ஏற்கனவே இருக்கும் ஒரு பொருளில் முன்னேற்றங்களை ஏற்படுத்துவது.

ராணுவ ஆயுதங்களை பொருத்தவரை ஆதிகாலத்திலிருந்தே இது கண்டு பிடிப்பாக இல்லாமல் புதுமையாக தான் பெரும்பாலும் இருந்துள்ளது. வில், பீரங்கி, மஸ்கட், அணு ஆயுத விமான குண்டு ஆகியவை கண்டுபிடிப்புகள் ஆக கூறப்பட்டாலும், பீரங்கி படைவண்டி என்பது ஒரு புதுமையாகும். கண்டுபிடிப்பை விட புதுமைகளுக்கான நன்மைகள் அதிகம். ராணுவ ஆயுதத் துறை, புதுமைகளையும் கண்டுபிடிப்புகளையும் ஊக்குவிக்கிறது.

ராணுவத்தில் புதுமையும் கண்டுபிடிப்பும் கிட்டத்தட்ட மூன்று நூற்றாண்டுகளாக சிலர் மட்டுமே செய்ய முடிந்த விஷயமாக கருதப்பட்டது. அமெரிக்கா, ரஷ்யா, இஸ்ரேல், ஐரோப்பா ஆகியவை பல்லாண்டுகளாக இதில் முன்னணியில் உள்ளன. ஆயுத புதுமைகளில் கடந்த 10 ஆண்டுகளாகத்தான் புதிய சில நாடுகள் இந்த குழுவில் இடம் பெறுகின்றன. புதிதாக இந்தத் துறையில் இறங்கி உள்ள நாடுகள் சீனா, இந்தியா, பாகிஸ்தான், துருக்கி, தென்னாப்பிரிக்கா ஆகிய இவர்கள் டெக்னோவிட்டெட்ஸ் என்று அழைக்கப்படுகிறார்கள்.

இவர்கள் ஏற்கனவே இருக்கும் ஒரு விஷயத்தில் அப்படியே அதன் காப்பியை உருவாக்கி கொடுக்கிறார்கள். சீனா இதில் பிரசித்திபெற்றது. சீனா விரைவில் 'கண்டுபிடிப்பு' குழுவிற்கும் முன்னேறி சென்று கொண்டிருக்கிறார்கள்.

அமெரிக்கா போன்ற நாடுகளுக்கு ஏற்கனவே பல ஆண்டுகளாக நடக்கும் ஆராய்ச்சியும் முன்னேற்றமும் தொழிற்சாலைகளும் அவர்களுக்கு எளிதாக வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்கின்றன. ஆனால் இந்த டெக்னோவிட்டேட்ஸ் நாடுகளுக்கு இது ஒரு லட்சியம். தங்களை காப்பாற்றிக் கொள்வதற்கான ஒரு முயற்சி. தற்பொழுது இது ஒரு வித்தியாசமான ஆயுதப் போட்டியை ஏற்படுத்துகிறது. கூடிய சீக்கிரத்தில் டெக்னோவிட்டேட்ஸ் நாடுகளும் கண்டுபிடிப்பாளர்கள் ஆக மாறுவார்கள்.

ஒரு நாடு இரண்டு விஷயங்களை முடிவு செய்ய வேண்டும். நாம் 'முன்னேறி செல்ல வேண்டுமா' (race ahead ) அல்லது 'பின் தொடர்ந்து பிடிக்க வேண்டுமா' (catch up). முன்னேறிச் செல்வதற்கு ஒரு நாடு ஆய்வுக்கூடங்கள், தொழிற்சாலைகள் ஆகியவற்றில் மிகுந்த முதலீடுகள் செய்திருக்க வேண்டும். இதற்கு நிதிகள், வளங்கள் அனைத்தையும் இணைக்க வேண்டும். இதை தவிர இதற்கு ஏற்கனவே நிறுவப்பட்ட தொழிற்சாலைகள் ஆதரவு இருக்க வேண்டும். தோல்விகளை கையாளும் அளவிற்கு உறுதி இருக்க வேண்டும்.

எனவே தற்போதைக்கு சில பாதுகாப்பு தயாரிப்பாளர்களால் மட்டுமே முன்னேறி செல்வதைப் பற்றி நினைக்க முடியும். 'பின் தொடர்ந்து பிடிப்பது' ஓரளவிற்கு சாத்தியமான ஒன்று. இதில் இரண்டு அம்சங்கள் உள்ளன. ஒன்று ஏற்கனவே ஒரு மாதிரியை போலவே நாம் காப்பியை உருவாக்கலாம். அது இப்போது பெரிய சவாலாக இருக்காது. சீனா, ஈரான், வடகொரியா, இந்தியா போன்ற நாடுகளும் கூட இதை நிரூபித்துள்ளன.

இன்னொன்று, ஏற்கனவே இருக்கும் ஒரு ஆயுதத்தில் உள்ள பலவீனங்களை கண்டறிந்து அதற்கு தகுந்த ஏற்பாடுகளை செய்வது. இங்கு தான் உண்மையான புதுமை இருக்கிறது. தற்பொழுது ஏற்கனவே தயாரிக்கப்பட்ட ஆயுதங்களை தோற்கடிக்கும் அளவிற்கு அதைவிட விலை குறைந்த மற்றும் எளிதான ஆயுதங்கள் புதிதாக உருவாக்கப் படுவதை பார்க்கிறோம். இந்த விஷயத்தில் இந்தியாவிற்கு நல்ல வாய்ப்பிருக்கிறது. எப்பேர்ப்பட்ட சிறந்த ஆயுதமாக ஆயுத அமைப்பாக இருந்தாலும், அதற்கென்று பலவீனங்களும் ஓட்டைகளும் இருக்கும். அதை கண்டறியும் அளவிற்கு நமக்கு ஆராய்ச்சி வேண்டும்.

இதை யார் செய்யலாம்? அரசாங்கம் செய்ய வேண்டுமா, தனியார் தொழிற்சாலைகள் செய்ய வேண்டுமா? அமெரிக்காவைப் போல் இல்லாமல் இந்தியா இங்கே ஒரு புதிய அமைப்புகளை உருவாக்கி அதை அரசு காப்பாற்ற வேண்டும். கல்வி, உள்கட்டமைப்பு, ஆராய்ச்சிக்கு நிதி என பல விஷயங்களை செய்ய வேண்டும்.

ஆனால் அரசாங்கம் இந்த ஆராய்ச்சிகளில் இருந்து, தயாரிப்புகளில் இருந்து தள்ளி இருந்து இதை தனியார் தொழிற்சாலைகளுக்கு விடவேண்டும். எனவே இது அரசாங்கமும் தனியார் துறையும் சேர்ந்து செய்ய வேண்டிய ஒரு விஷயமாகும். தனியார் தொழிற்சாலைகள், வளங்களை உருவாக்க முடியாது. கனெக்ஷன், நிதி வளம் உள்ள தனியார் அமைப்புகளால் கூட ஒரு அளவிற்கு மேல் செய்ய முடியாது. அவர்களால் தோல்விகளை தாங்கமுடியாது மேலும் அவர்களுக்கு லாபம் உடனடியாக வேண்டும்.

ஆனால் தனியார் தொழிற்சாலைகளால் திறமையை ஊக்குவித்து சிறப்பாக செயல்பட முடியும். இது அரசாங்கத்தால் செய்ய முடியாது. எனவே பாதுகாப்பு புதுமை என்பது அரசாங்கத்தால் உருவாக்கப்பட்டு, நிதி அளிக்கப்பட்டு, உத்வேகம் அளிக்கப்பட்டு ஆனால் தனியார் தொழிற்சாலைகளால் நிறைவேற்றப்பட வேண்டும். இதுதான் இருவரிடமும் இருக்கும் சிறந்த திறமைகளை வெளிக்கொண்டு வரும்.

புதுமை என்பது சிலரால் மட்டுமே கையாளப்படும் ஒரு விஷயம் அல்ல. இந்தியா இதில் பல படிகளில் முன்னேற வேண்டியிருக்கிறது. இந்தியா அதை செய்து முடித்தால் 'பின்தொடர்ந்து பிடிப்பது' மட்டுமல்லாமல் 'முன்னேறியும் செல்லலாம்' ஆனால் இரண்டில் எது செய்ய இருந்தாலும் முதலில் இருக்கும் இடத்தை விட்டு நகர வேண்டும்.

சாராம்சம்- ORF

Cover Image Credit: Tata group

Next Story