Kathir News
Begin typing your search above and press return to search.

இந்துக்கள் பண்டிகையை இஷ்டத்திற்கு மாற்றும் தி.மு.க - இந்துக்கள் என்றால் இளக்காரமா?

இந்துக்கள் பண்டிகையை இஷ்டத்திற்கு மாற்றும் தி.மு.க - இந்துக்கள் என்றால் இளக்காரமா?

இந்துக்கள் பண்டிகையை இஷ்டத்திற்கு மாற்றும் தி.மு.க - இந்துக்கள் என்றால் இளக்காரமா?

Mohan RajBy : Mohan Raj

  |  12 Jan 2021 7:30 AM GMT

ஒரு சமுதாயத்தின் வாழ்வின் வழிமுறை என்பது அந்த சமுதாயத்தின் மக்கள் கடைபிடிக்கும் சம்பிரதாயம் மற்றும் சடங்குகளை சார்ந்தது. அந்த சம்பிரதாயம் மற்றும் சடங்குகள் மூலம் மக்களை ஒருநிலைப்படுத்தி வாழ்வில் வழி மாறாமல் சிறப்புடன் வாழ மூதாதையர்களால் ஏற்படுத்தப்பட்டதே சடங்கு சடங்கு மற்றும் சம்பிரதாயங்கள். அப்படிப்பட்டவைகளில் ஒன்றுதான் பண்டிகைகள்.

பழம்பெரும் சம்பிரதாயங்கள் மக்களுக்கு மறவாமல் இருப்பதும் அவைகள் அடுத்த தலைமுறைக்கு பழக்கப்படுத்தி பின்பற்ற வைக்க பெரிதும் பண்டிகைகள் உதவுகின்றன.

அப்படிப்பட்ட பண்டிகைகளை மக்கள் கொண்டாடும் காலங்களில் அவை பற்றிய புரிதலை தான் விரும்பும் அரசியல் காரணத்தை புகுத்தி மக்களை குழப்புவதற்கு பெயரும் "மத மாற்றம்"தான். சனாதனம் என்னும் இந்து மதத்தின் சிறப்பே பழம்பெறும் பண்டிகைகள் தான் ஆனால் அப்படிப்பட்ட பண்டிகைகளை மக்களை மறக்கடிக்க வைப்பது, சமத்துவம் என்ற பெயரில் அதனை மடைமாற்றுவது என அத்தனை வேலைகளையும் தி.மு.க செய்து வருகிறது.

தமிழ் புத்தாண்டு, விநாயகர் சதுர்த்தி, தைப்பூசம், ஆயுத பூஜை, தீபாவளி, கார்த்திகை தீபம் போன்ற பண்டிகைகளை மக்களுக்கு விடுமுறை நாளாக மட்டும் பழக்கி அதற்கு வாழ்த்துக்கள் கூற சொல்லாமல் மறக்கடித்து வந்த தி.மு.க பொங்கல் பண்டிகையை தமிழ் புத்தாண்டு என மாற்றி சமத்துவ பொங்கல் என உருவகம் செய்து அதில் தான் நினைக்கும் அரசியல் காரணிகளை புகுத்தி மக்களை மழுங்கடிக்க செய்யும் செயலை செய்து வருகிறது.

மறைந்த தி.மு.க தலைவர் ஆட்சிக்காலத்தில் பொங்கல் விழா "தமிழ்புத்தாண்டு" என மாற்றம் செய்து அரசாணை வெளியிடப்பட்டது. மக்கள் குழம்பினர் அதற்கு மேற்கோளாக பல காரணங்கள் அடுக்கப்பட்டது. ஆனால் அனைத்தும் அரசியல் காரணங்களே தவிர புராண காரணங்களோ, ஆச்சார விதிகளின் காரணங்களோ அல்ல.

ஆனால் மற்ற சமுதாய பண்டிகைகளான கிருஸ்துமஸ், ரம்ஜான் போன்றவை எவ்வித மாற்றங்களும் இன்றி தி.மு.க தலைவர்களால் அப்படியே ஏற்றுக்கொள்ள பட்டது. காரணம் "தேர்தல் அரசியல்" அதன் விளைவான வாக்கு வங்கி.

இந்து பண்டிகைகளில் ஆராய்ந்து அதில் மாற்றங்களை புகுத்தும் தி.மு.க தலைவர்கள் ரம்ஜான் கால நோன்பிலும், கிருஸ்துமஸ் மரங்களிலும் ஆராய மனமின்றி அதனை அனுமதித்ததுடன் அவர்களுடன் சேர்ந்து கொண்டாடவும் செய்தனர். ஆனால் இந்துக்களுக்கு வாழ்த்துக்கள் கூட தேறாது இந்த பகுத்தறிவுவாதிகளிடமிருந்து.

இப்படிப்பட்ட அவல நிலையில் இன்று தி.மு.க தலைவர் ஸ்டாலின் ஒரு அறிக்கையை பொங்கில் பண்டிகையை முன்னிட்டு வெளியிட்டுள்ளார். அதில், "பொங்கல் நம் விழா! தமிழர்களின் தனிப்பெரும் விழா! திராவிட இயக்கம் தமிழகமெங்கும் மறுமலர்ச்சியை ஏற்படுத்திய விழா! காலந்தோறும் வெவ்வேறு வேடம் போட்டு வரும் பண்பாட்டுப் படையெடுப்புகளைத் துல்லியமாக அடையாளம் கண்டு துரத்தி அடித்து - தமிழ்ப் பெருமை காத்திடும் விழா! மகிழ்ச்சி பொங்கிடும் விழா! வெற்றியின் விளைச்சலுக்கான விழா!

தமிழர் திருநாளைத் தமிழ்நாடெங்கும் சமத்துவப் பொங்கல் விழாவாகக் கொண்டாடுவோம்!" என கொண்டாட்ட செய்தியாக கூறியுள்ளார். ஆனால் அதிலும் தனது அரசியலை புகுத்தியுள்ளார் தி.மு.க தலைவர் ஸ்டாலின்.

அதாவது பொங்கலை சமத்துவ பொங்கலாக கொண்டாடுவோம் என கூறிக்கொண்டே "காலந்தோறும் வெவ்வேறு வேடம் போட்டு வரும் பண்பாட்டுப் படையெடுப்புகளைத் துல்லியமாக அடையாளம் கண்டு துரத்தி அடித்து" என கூறியுள்ளார்.

"பண்பாட்டு படையெடுப்பு" என்ற வார்த்தையை பயன்படுத்த தெரிந்த முத்தமிழறிஞரின் மகனுக்கு மொகலாய படையெடுப்பின் விளைவாக வந்தது தான் 'ரம்ஜான்', கிழக்கிந்திய கம்பெனியின் ஆதிக்க மிச்சம்தான் 'கிருஸ்துமஸ்' என தெரியாமல் போனது ஏனோ? அல்லது தெரிந்து தெரியாமல் முகத்தை திருப்புவது ஏனோ?

இந்துக்களின் பண்டிகையை அதிலும் நவக்கிரகங்களில் முதன்மையாக கிரகமாக விளங்கும் சூரிய பகவானின் பண்டிகையான பொங்கலை 'சமத்துவ பொங்கலாக மாற்ற தெரிந்த ஸ்டாலினுக்கு 'சமத்துவ கிருஸ்துமஸ்', 'சமத்துவ ரம்ஜான்' கொண்டாட தெரியாதா? அல்லது கொண்டாட திராணி இல்லையா? எது தடுக்கிறது முதல்வர் கனவில் மிதப்பவரே?

தி.மு.க'வில் இருப்பது 90% சதவீதம் இந்துக்கள் என கூறிக்கொண்டே அந்த 90% சதவீத மக்களை மடையர்களாக மாற்ற நினைப்பது யார் சொல்லி கொடுத்தது தி.மு.க தலைவரே? மக்கள் அனைத்தையும் பார்த்துக்கொண்டு உள்ளார்கள் அது ஒருநாள் மகேசன் தீர்ப்பாக வெளியில் வரும்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News