Kathir News
Begin typing your search above and press return to search.

கொண்டாடத் தகுந்த 'பெரியார்' தானா ஈ.வெ.ரா? ஓர் அலசல்!

கொண்டாடத் தகுந்த பெரியார் தானா ஈ.வெ.ரா? ஓர் அலசல்!

Saffron MomBy : Saffron Mom

  |  14 April 2021 5:12 AM GMT

பல்லாண்டுகளாக, ஒரு சில பிரிவினரால் 'பெரியார்' எனும் சர்ச்சைக்குரிய மனிதரின் பார்வைகளும் கருத்துக்களும் வெள்ளையடிக்கப்பட்டு, அவர் ஏதோ ஒரு 'தமிழ் அம்பேத்கர்' போல கட்டமைக்கப்பட்டுள்ளார்.

வரலாற்று ஆதாரங்களோ உண்மை அதில் இருந்து எவ்வளவு தூரத்திற்கு அப்பாற்பட்டது என்று காட்டுகிறது. இந்த நேரத்தில் 'பெரியாரின்' பார்வைகளையும், அக்காலத்திய பெரிய தலைவர்கள் 'பெரியாரை' பற்றி கூறினார்கள் என்பதையும் நாம் பார்க்கலாம்.

பெரியார் 'திராவிட நாடு' என்ற பிரிவினைவாதத்தை பெரிதும் ஆதரித்தார். அதாவது தென்னிந்தியாவை, இந்தியாவில் இருந்து பிரித்து மற்றொரு பிரிவினை. தற்போதைய தமிழ்நாடை ஒரு தனிநாடாக அறிவிக்க வேண்டும் என்றும் கூறினார்.


பாகிஸ்தான் பிரிவினையை வெளிப்படையாக ஆதரித்து, திராவிடர்கள் இந்தியர்கள் கிடையாது என்றும் கூறினார். 1939 இல் 'பெரியார்' 'திராவிட நாடு மாநாடு' என்ற ஒன்றை நடத்தி, சுதந்திரமான, தனியான திராவிட நாடு வேண்டும் என்று கோரினார்.

கிட்டத்தட்ட தமிழ் நாட்டிலும் சரி, தென்னிந்தியாவின் மற்ற மாநிலங்களிலும் சரி அவருக்கு ஆதரவு என்பது இந்த விவகாரத்தில் கிடையாது. ஆனாலும் அவருடைய கருத்தில் இருந்து பின்வாங்கவில்லை.

அதற்கு அடுத்த வருடம் லாகூர் தீர்மானத்தில் பாகிஸ்தான் வேண்டும் என்று முஸ்லிம் லீக் கோரிக்கையுடன் வந்தது. இவர் திராவிட நாடு கோரிக்கையை அப்போதும் முன்வைத்தார்.

'பெரியார்' பிரிட்டிஷ் ராஜ்ஜியத்தின் மிகப்பெரிய ஆதரவாளர். அவர்கள் திராவிட நாடு கோரிக்கையை ஏற்றுக் கொள்வார்கள் என்று நம்பினார். குடியரசு பத்திரிகையில் ஜூலை 28 1940ல் அவர், இரண்டாம் உலகப்போர் முடிந்தவுடன் இந்தியாவைப் பிரித்து திராவிடர்களுக்கு திராவிடநாடு வாங்க வேண்டும் என்று கூறினார்.


1947 ஜூலையில் இந்தியர்கள் தங்கள் சுதந்திரத்திற்காக தயாராகிக் கொண்டிருந்த வேளையில் பெரியார் 'திராவிட நாடு' என்ற இரண்டாவது பிரிவினைவாதத்திற்கு ஆதரவு அளித்துக் கொண்டிருந்தார்.

1957 அக்டோபர் 17 இல் 'பெரியார்', முகமது அலி ஜின்னாவை பின்பற்றியவர்கள் அவருக்கு எப்படி ஒழுக்கமாக நடந்து கொண்டார்களோ அதைப் போலவே தன்னுடைய தன்னை பின்பற்றுபவர்களும் நடந்து கொண்டிருந்தால் இந்நேரம் சுதந்திரம் பெற்று இருக்கலாம் என்று கூறினார்.


அவர் மேலும், ஜின்னா வாளை கையில் எடுத்து, ரத்த ஆறாக ஓட விட்டு சுதந்திரம் அடைந்தார். நாமும் அவ்வாறே செய்ய வேண்டும் என்று கூறினார். 1938 மார்ச் 20இல் பெரியார், பிராமணர்களை யூதர்களுடன் நாசி போல ஒப்பிட்டு இருவருமே மற்றவர்களை கொடுமைப்படுத்தி அவருடைய வாழ்வை கெடுத்து, தாங்கள் வசதியுடன் வாழ்வதாக ஒப்பிட்டார்.

அவர் விடுதலை நாளிதழில் எழுதிய வார்த்தைகளை அப்படியே கூறவேண்டுமானால், "யூதர்கள் தங்களுக்காக மட்டுமே இருப்பவர்கள். வேறு யாருக்காகவும் அல்ல. அவர்கள் எப்படியாவது ஆள்பவர்களை தங்கள் கையில் போட்டுக்கொண்டு, அதிகாரத்தில் பங்கெடுத்து, மற்றவர்களை கொடுமைப்படுத்தி அவர்களின் வாழ்வை உறிஞ்சி எடுக்கிறார்கள். அவர்களை நாம் ஏன் பிராமணர்களுடன் ஒப்பிடக்கூடாது? அவர்களுக்கும் எந்த பொறுப்பும் கிடையாது. ஆள்பவர்களை தங்கள் கைக்குள் போட்டுக்கொண்டு அதிகாரத்தில் நுழைந்து நம்மையெல்லாம் ஆட்சி செய்யவில்லையா?" என்று கேள்வி எழுப்பினார்.



நாம் ஒன்றை கருத்தில் கொள்ள வேண்டும். ஹிட்லர், யூதர்களுக்கு எதிரான இனப்படுகொலையை நடத்திக்கொண்டிருந்த உச்சத்தில் இவர் இந்த கருத்தை கூறி இருக்கிறார். இது நாசிகளின் கூற்றை போன்றதாகும்.


பெரியார் இந்திய அரசியலமைப்புச் சட்டத்திற்கும் மகாத்மா காந்தி மீதும் மிகுந்த வெறுப்பு கொண்டிருந்தார். இது வரலாற்றில் நன்றாக பதியப்பட்ட ஒன்றாகும். உதாரணமாக 1957 இல் அவர் கூறுகையில், இந்திய அரசியலமைப்புச் சட்டம் முதல் படியாக எரிக்கப்பட வேண்டும் என்று கூறினார். அப்போதும் அரசாங்கம் தனது கோரிக்கைகளுக்கு செவி சாய்க்கவில்லை என்றால் காந்தியின் புகைப்படத்தை எரிப்பது மட்டுமல்லாமல், பிரதமர் நேருவின் உருவபொம்மையை எரிப்பேன் என்று கூறினார்.

இதற்கு பதிலடியாக, அன்றைய பிரதமர் ஜவகர்லால் நேரு பெரியாரை, "அவர் ஒரு வயதான பைத்தியக்காரர். அவருக்கு பொது வாழ்வில் இடம் கொடுப்பதைவிட பைத்தியக்கார ஆஸ்பத்திரியில் தான் இடம் வேண்டும்" என்று குறிப்பிட்டிருந்தார்.


ஆரம்பத்தில் அம்பேத்கரும் பெரியாரும் சாதி ஒடுக்குமுறைக்கு எதிராக கூட்டுறவு வைத்திருந்தாலும், அம்பேத்கரின் தேசிய ஒற்றுமை மற்றும் இந்தியாவிற்கு ஆதரவான நிலைப்பாடு பெரியாரை எரிச்சலடைய வைத்தது.

1947 ஜூலை 8-ல் அவர் திராவிட நாடு ஆதரவு அளித்ததோடு மட்டுமல்லாமல், அம்பேத்கர் திராவிட நாடு உருவாவதை எதிர்க்கலாம். ஏனெனில் தற்போது திராவிடநாடு ஒரு ஹிந்து அமைப்பால் அதாவது காங்கிரசால் ஆட்சி செய்யப்படுகிறது. என்று தன்னுடைய விடுதலை பத்திரிக்கையில் அம்பேத்கரை விமர்சித்தார்.

" இன்றைக்கு அம்பேத்கர் வட இந்தியர்களின் நிலைப்பாட்டை எடுக்க ஆரம்பித்துவிட்டார். இந்த நாடு பிரிவினை அடையக்கூடாது என்று கூறுகிறார். அவர் வரும் காலங்களில் திராவிட நாட்டின் கோரிக்கையையும் எதிர்ப்பார்" என்று தெரிவித்திருக்கிறார்.

1957 நவம்பர் 11 இல் மறுபடியும் டாக்டர் அம்பேத்கரை விமர்சித்து, பிராமணர்கள் அம்பேத்கருக்கு இட ஒதுக்கீடு என்ற பெயரில் ஒரு விலை வைத்து விட்டதாகவும் அம்பேத்கர் மற்றவர்களின் பிரச்சினையைப் பற்றி கவலைப்படுவது இல்லை என்றும் கூறினார்.

"அம்பேத்கர் நம்மைப் போலவே உணர்வு கொண்டு இருந்தார். அவர் என்னிடம் கேட்டார், "உங்கள் மக்களுக்கு நான் என்ன செய்ய வேண்டும்?" நான் அவருக்கு நிறைய தரவுகள் அளித்தேன். அவர் நம்மிடம் பேச ஆரம்பித்தார். ஆனால் பிராமணர்கள் அவருக்கு ஒரு விலை வைத்து விட்டனர். அவர் தன்னுடைய மக்களுக்கு அரசாங்க வேலை மற்றும் உத்தியோகத்தில் பத்து சதவிகித இட ஒதுக்கீடு வேண்டும் எனக் கேட்டார். அவர்கள் 15ஏ தருகிறோம் என்றனர். பிராமணர்களுக்கு தெரியும் 25% கொடுத்தாலும் தாழ்த்தப்பட்டோர் பட்டியலில் இருந்து 3,4 பேர்கள் கூட வரமாட்டார்கள். அம்பேத்கர் அதை சட்டமாக கையெழுத்து இட்டுவிட்டார். மற்றவர்களின் பிரச்சினைகளை பற்றி அவர் கவலைப்படவில்லை" என்று கூறினார்.

தமிழ்நாட்டின் மிகப்பெரும் தலைவரான காமராஜர், 1960களில் இந்திய அரசியலில் கிங் மேக்கர் என்று அழைக்கப்பட்டவர். அவருக்கு 1961 தேர்தல்களில் பெரியார் ஆதரவளித்தார். ஆனால் காமராஜர், திராவிடர் கழகம் போன்ற அமைப்பிடம் இருந்து ஆதரவை ஏற்க முடியாது என்று கூறி, பெரியாரின் பார்வைகளோடு தான் எந்த விதத்திலும் ஒத்துப் போகவில்லை என்று தெளிவுபடுத்தினார்.

அண்ணாவும் மிக விரைவாக பெரியாரின் தீவிரமான எண்ணங்களில் இருந்து விலகி கொண்டிருந்தார். 1947 ஆம் ஆண்டு இந்தியா விடுதலை அடைவதற்கு முதல் நாள், திராவிட நாடு கிடைக்காது என்ற விரக்தியில் பெரியார் இந்திய விடுதலை நாளை ஒரு துக்க தினமாக அனுசரிக்க வேண்டுகோள் விடுத்தார். இதற்கு திராவிடர் கழகத்தின் பொதுச் செயலாளரான அண்ணாவே அப்போது, "சுதந்திரதினம் எந்தவித தடையுமில்லாமல் கொண்டாடப்பட வேண்டும். காங்கிரசிற்கு நம்முடைய எதிர்ப்பு, சுதந்திரத்திற்கு நம்முடைய எதிர்ப்பாக பார்க்கப்படக் கூடாது" என்று தெரிவித்து இருந்தார்.

அண்ணா மேலும் கூறுகையில், "இந்த நாளை துக்க தினமாக அனுசரிப்பது சுதந்திர போராட்ட வீரர்களுக்கான நினைவை கொச்சைப்படுத்துவது ஆகும்." மேலும் இது தமிழ் மக்களின் உயர்ந்த பாரம்பரியத்தில் இருந்து விலகுவதாகும் என்று கூறினார். பெரியார் இதை விசுவாசமற்ற செயலாக கருதினார்.பெரியாரின் வாரிசாக கருதப்பட்டாலும், அவரிடமிருந்து பிரிந்து தான் அண்ணா திராவிடர் முன்னேற்றக் கழகத்தை ஆரம்பித்தார்.

இந்தியாவிற்கு எதிரான, ஒரு குறிப்பிட்ட வகுப்பினருக்கு எதிரான, காந்திக்கு எதிரான, ஹிந்துக்களுக்கு எதிரான, வன்முறைக்கு ஆதரவான பெரியாரின் பார்வைகளின் ஒரு சிறு தொகுப்பு தான் இது. பெரியாரை மிகப் பெரும் தலைவர்களான அம்பேத்கர் உடன் ஒப்பிடுவது அம்பேத்கருக்கு செய்யும் மிகப் பெரிய அநீதி ஆகும். அது இந்தியாவிற்கு செய்யும் அநீதியும் ஆகும்.

Courtesy: https://www.thetruepicture.org/the-true-face-of-periyar/

Next Story
கதிர் தொகுப்பு
Trending News