Kathir News
Begin typing your search above and press return to search.

சாராய ஆலைக்காக நிலத்தடி நீரை உறிஞ்சும் தி.மு.க - விவசாயிகள் ஆதரவு நாடகமா? - மக்கள் சரமாரி கேள்வி!

சாராய ஆலைக்காக நிலத்தடி நீரை உறிஞ்சும் தி.மு.க - விவசாயிகள் ஆதரவு நாடகமா? - மக்கள் சரமாரி கேள்வி!

சாராய ஆலைக்காக நிலத்தடி நீரை உறிஞ்சும் தி.மு.க - விவசாயிகள் ஆதரவு நாடகமா? - மக்கள் சரமாரி கேள்வி!

Mohan RajBy : Mohan Raj

  |  5 Dec 2020 1:22 PM GMT

இன்றைய தினம் தமிழகத்தில் திராவிட முன்னேற கழகம் சார்பில் மத்திய அரசின் வேளாண் திருத்த சட்ட மசோதாக்களை எதிர்த்து விவசாயிகளை ஆதரிக்கின்றேன் என்ற போர்வையில் மத்திய அரசை கண்டித்து கருப்பு கொடி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளது. இதில் தமிழகத்தின் பல பகுதிகளில் தி.மு.க-வின் முக்கிய நிர்வாகிகள் பங்கேற்கின்றனர்.

"கறுப்புக்கொடிகள் உயரட்டும்!

தமிழகமே கறுப்புக்கடல் ஆகட்டும்!

டெல்லி போல குலுங்கட்டும் தமிழகம்!

விவசாயிகளின் உரிமை காக்கும் பெருந்திரள் ஆர்ப்பாட்டம் வெற்றி காணட்டும்!"

என தி.மு.க தலைவர் ஸ்டாலினின் பேச்சை கேட்டு வேலூரில் துரைமுருகன், மயிலாடுதுறையில் டி.ஆர்.பாலு, திருச்சியில் கே.என்.நேரு, திண்டுக்கல் பகுதியில் ஐ.பெரியசாமி, திருவண்ணாமலையில் பொன்முடி, ஈரோட்டில் சுப்புலட்சுமி ஜெகதீசன், நீலகிரியில் ஆ.ராசா, நாமக்கல்லில் அந்தியூர் செல்வராஜ் என அனைவரும் இறுதியாக சேலத்தில் தி.மு.க தலைவர் ஸ்டாலினும் கருப்பு கொடி ஏந்தி போராட்டம் என கூடியுள்ளனர்.

மத்திய அரசின் வேளான் விவசாய மசோதாவை பற்றிய விமர்சனங்கள், விளக்கங்கள் ஒருபுறம் இருக்கட்டும். ஆனால், இந்த வேளாண் திட்டங்களை எதிர்க்கிறேன் விவசாயிகளை ஆதரிக்கிறேன் என்று கூறி போராட்டம் செய்ய தி.மு.க-விற்கு தகுதி இருக்கிறதா என்று மக்கள் யோசிக்கின்றனர்.

இப்படியான கேள்விகளை விவசாயிகளுக்கு எதிரான தி.மு.க-வின் செயல்பாடுகளை மீத்தேன் கையெழுத்திட்டது முதல் காவிரி பிரச்சினையை அரசியல் லாபத்திற்காக காங்கிரஸ் பேச்சை கேட்டு தமிழக விவசாயிகளை வஞ்சித்தது வரை எடுத்து பார்த்தால் தி.மு.க-வின் கபட நாடகம் புரியும். இவற்றில் முக்கியமாக மத்தியில் ஆளும் பா.ஜ.க அரசு பதவி ஏற்றது முதல் தி.மு.க-வின் விவசாயிகளுக்கு எதிரான மீத்தேன், காவிரி போன்ற பிரச்சனைகளை சரிவர கையாண்டு சரி செய்து வருகிறது.

ஆனால், இன்றைக்கு கருப்பு கொடி ஏந்தும் தி.மு.க மன்னார்குடி பகுதியில் விவசாயிகள் வயிற்றில் அடிப்பதை வெளி உலகத்தில் இருந்து மறைத்து வருகிறது. அதை ஏன் தி.மு.க மறைக்க வேண்டும்? இன்றைக்கு விவசாயிகளுக்காக நீலிக்கண்ணீர் வடிக்கும் தி.மு.க மன்னார்குடி பகுதி விவசாயிகளுக்கு சோற்றில் மண் அள்ளி போட்டு வருகிறது.

தி.மு.க-வின் பொருளாளர் டி.ஆர்.பாலு மற்றும் அவரது மகன் மன்னார்குடி தொகுதி எம்.எல்.ஏ டி.ஆர்.பி.ராஜா ஆகிய இருவருக்கும் சொந்தமான சாராய ஆலை "கோல்டன் வேட்ஸ்" என்ற பெயரில் மன்னார்குடி கர்ணாவூர் கிராமத்தில் இயங்கி வருகிறது. இந்த சாராய ஆலை விவசாயிகளுக்கு ஏற்படுத்தும் பாதிப்புகள் ஏராளமானது.

கருணாநிதியின் ஆட்சிகாலமான 2007-ஆம் ஆண்டு துவங்க திட்டமிடப்பட்ட இந்த ஆலையானது, 2007-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 11-ஆம் தேதி ஒருங்கிணைக்கப்பட்டு கடந்த 2011-ஆம் ஆண்டு மார்ச் 1-ஆம் தேதியில் தன் இயக்கத்தை துவங்கியது இந்த சாராய ஆலை.

சுமார் 25 ஏக்கர் பரப்பளவில் 1,76,000 சதுர அடி கட்டுமானத்தில் 12 வரிசையில் மதுபான பாட்டில்களை தயாரிக்க இயந்திரங்களை கொண்டது இந்த ஆலை. இதன் உற்பத்தி திறனானது ஒரு இயந்திரம் ஒரு நிமிடத்திற்கு 240 பாட்டில்களை உற்பத்தி செய்யும் வலிமை கொண்டது. இது 20 இயந்திரங்களை தானியங்கி அடிப்படையில் கொண்டுள்ளது. இதன் முழு உற்பத்தி திறனை கணக்கிட்டால் ஒரு நிமிடத்திற்கு ஒரு இயந்திரம் 240 பாட்டில்களை உற்பத்தி செய்யும் 20 இயந்திரங்களை கணக்கிட்டால் 4,800 பாட்டில்களை ஒரு நிமிடத்திற்கு உற்பத்தி செய்யும் சக்தி வாய்ந்தது. இதன் லிட்டர் கணக்கீட்டை எடுத்தோமேயானால் ஒரு பாட்டிலுக்கு சராசரி 360 மில்லி லிட்டர் என கணக்கிட்டால் 4,800 பாட்டிலுக்கு 17,28,000 லிட்டர் சராசரி தண்ணீர் தேவைப்படுகிறது. அதாவது உற்பத்தி அளவில் இதன் தண்ணீர் தேவையானது மாதம் முழுவதும் தேவைப்பட்டால் கிட்டதட்ட 5 கோடி லிட்டர் தண்ணீர் இந்த சாராய ஆலை முழு வீச்சில் இயங்க தேவைப்படுகிறது.

இந்த தண்ணீர் அனைத்துமே மன்னார்குடி பகுதியில் இருந்தே விவசாய நிலங்களில் இருந்து உறிஞ்சப்படுகிறது. இப்படி 5 கோடி லிட்டர் விவசாய பாசன தண்ணீரை உறிஞ்சி விவசாயிகள் வயிற்றில் அடிப்பது மட்டுமில்லாமல் தன் பணத்தாசைக்காக அதை சாராயமாக்கி விற்று பலரை குடிகாரர்களாக்கி, பல பெண்மணிகளை விதவையாக்கி, பல குழந்தைகளை தகப்பன் இல்லாமல் செய்து சம்பாரித்து பிழைக்கும் தி.மு.க-வின் பொருளாளர் டி.ஆர் பாலுவை ஓர் கேள்வி கேட்கவோ அல்லது தடுக்கவோ வக்கில்லாத தி.மு.க இன்று கருப்பு கொடியை ஏந்தி போராடுகிறது.

என்ன ஒரு கபடநாடகம் விவசாயிகள் வயிற்றில் அடிப்பது மட்டுமில்லாமல் சாராயத்தை விற்று பல குடும்பங்களை அழித்த தி.மு.க இன்று வெட்கமில்லாமல் கருப்பு கொடியை காட்டி போராடுகிறது. மக்கள் தி.மு.க-விற்கு கருப்பு கொடி காட்டும் நாள் வெகு தொலைவில் இல்லை.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News