Kathir News
Begin typing your search above and press return to search.

இந்திய-பாகிஸ்தான் எல்லையில் அமைதி நிலவுமா? போர் நிறுத்த ஒப்பந்தம் நடைமுறைக்கு சாத்தியமா?

இந்திய-பாகிஸ்தான் எல்லையில் அமைதி நிலவுமா? போர் நிறுத்த ஒப்பந்தம் நடைமுறைக்கு சாத்தியமா?

Saffron MomBy : Saffron Mom

  |  9 March 2021 4:10 AM GMT

இராஜதந்திர வழிகளில் மோசடி என்பது ஒரு முக்கிய பகுதியாகும். இது அமைதி காலத்தை விட எதிரி நாடுகளிடையே போர்களின் போது அடிக்கடி பயன்படுத்தப்படுகிறது. இந்தியாவும் பாகிஸ்தானும் சமீபத்தில் எல்லைப் பகுதியில் போர் நிறுத்த ஒப்பந்தம் செய்து இருப்பது ஒரு முக்கியமான விஷயமாக இருக்கலாம் அல்லது இல்லாமல் இருக்கலாம்.

ஆனால் இதன் பிறகு இது இரு நாடுகளுக்கு இடையிலான இருதரப்பு உறவுகளில் ஏதேனும் முன்னேற்றம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஜம்மு & காஷ்மீர் மாநிலத்தை யூனியன் பிரதேசங்கள் ஆக மறுசீரமைப்பு செய்தது, அரசியல் சட்டப்பிரிவு 370ஐ ரத்து செய்தது ஆகிய காலகட்டங்களில் இருந்து இந்தியா, பாகிஸ்தானின் விரோதப் போக்கு மேலும் அதிகரித்து வந்துள்ளது.

இந்தப் போர் நிறுத்த ஒப்பந்தம் மூலமாக எல்லையோரங்களில் துப்பாக்கி சுடும் ஸ்னைப்பர்களின் நடவடிக்கைகளுக்காக நிறுத்தப்பட்டுள்ள சிறப்புப் படைகள் பின்வாங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இருநாடுகளின் DGMOக்களின் அறிவிப்பு முதல் இந்தப் போர் நிறுத்தம் பிப்ரவரி 25 முதல் அமலுக்கு வருகிறது.

இந்த ஒப்பந்தம், பொதுமக்கள் பார்வையில் இருந்து விலகி திரைக்குப் பின்னே நடந்த கலந்துரையாடல்கள் விளைவு என அரசாங்கம் தெரிவித்துள்ளது. ஆனால் திரைக்குப்பின் என்ன நடவடிக்கைகள் நடைபெற்றன என்பதைக் குறித்து இந்த அறிக்கைகள் கூறவில்லை.

அதிகாரப்பூர்வமாக 2019 ஆம் ஆண்டில் 5133 அத்துமீறல்களும் 44 உயிர் இழப்புகளும், பிப்ரவரியில் 2021 வரை 299 அத்துமீறல்களும் ஒரு உயிரிழப்பும் ஏற்பட்டதாக மத்திய அரசு பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளது.

லடாக்கிலுள்ள பாங்சாங் சோவில் இந்திய-சீன படைகள் எல்லையையொட்டி பின்வாங்கியதையடுத்து, தற்பொழுது இந்த போர் நிறுத்த ஒப்பந்தம் வந்திருப்பது இந்த நடவடிக்கைக்குப் பின்னால் உள்ள காரணங்களைக் குறித்து கேள்விகளை எழுப்பியுள்ளது.

கடந்த சில வாரங்களில் பாகிஸ்தான் ராணுவ தளபதி மற்றும் அதன் பிரதமர் இம்ரான்கான் வெளியிட்ட அறிக்கைகளில் இந்த போர் நிறுத்த ஒப்பந்தம் குறித்த சில அறிகுறிகள் தென்பட்டன. இது கண்டிப்பாக எல்லையோரம் வசிக்கும் மக்களின் வாழ்க்கையில் எளிதாக்கும் என்பதில் சந்தேகமில்லை.

இதற்கு முன்னால் இது போல் போர்நிறுத்த ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. ஒரு நிலையான அமைதியை நோக்கி பாகிஸ்தான் ராணுவத்தால் செயல்படும் முடியுமா? இந்தியாவில் இருக்கும் பெரும்பாலானோர் நாய் வாலை நிமிர்த்த முடியாது என்றே நம்புகிறார்கள். பாகிஸ்தானில் பிரதமர் இம்ரான்கானின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் இந்த ஒப்பந்தத்தை அவருடைய நாட்டின் மிகப்பெரிய வெற்றியாக கொண்டாடி வருகிறார். இந்தியாவிற்கு எதிராக பாகிஸ்தான் ஏதோ ஒரு வெற்றியை அடைந்து விட்டதாக தன் நாட்டு மக்களுக்கு காட்டுவதற்கு அவர் முயல்கிறார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

இதை தொடர்ந்து இம்ரான்கான், தொடர்ந்து அமைதிக்கான சுற்றுச் சூழலை உருவாக்க இதற்கு மேற்பட்ட நடவடிக்கைகளை எடுக்க வேண்டியது இந்தியாவின் பொறுப்பு என்று அறிவித்துள்ளார். ஆனால் அப்படிப்பட்ட நடவடிக்கைகள் நடப்பதற்கு முன்னால் சில அடிப்படையான விஷயங்கள் நடக்க வேண்டும். அதாவது 2 நாடுகளின் உயர்மட்ட தூதர்களையும் தலைநகரங்களில் அனுப்புவது, வர்த்தகத்தையும் பயணத்தையும் இரு நாடுகளுக்கு இடையே திறப்பது ஆகியவை.

இன்னொரு தீவிரவாத தாக்குதல் நடந்தால் இந்தப் போர் நிறுத்த ஒப்பந்தம் நிறுத்தப்பட்டு விடும். இதற்கு முன்னால் 2003இல் இந்திய பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய்க்கும், பாகிஸ்தான் பிரதமர் பர்வேஸ் முஷாரப்பிற்க்கும் இடையிலிருந்த போர் நிறுத்த ஒப்பந்தத்தை போல.

பாகிஸ்தானை பொறுத்தவரை இந்தியா தன்னுடைய அணுகுமுறையை மிகவும் கடுமையாக்கி உள்ளது. யூரி தீவிரவாத தாக்குதல்களுக்கு பிறகு எல்லைதாண்டி நடந்த சர்ஜிகல் தாக்குதல்களும், புல்வாமா தீவிரவாத தாக்குதலை நடந்து அடுத்து நடந்த பாலக்கோட் வான்வெளி தாக்குதல்களும் இந்தியாவுடைய அணுகுமுறையை தெளிவாக்குகின்றன.

இந்தியாவைப் பொருத்தவரை பாகிஸ்தானுடன் அணுகும் விதத்தில் ஒரு சிவப்புக் கோடு போட்டாகிவிட்டது. அதாவது பேச்சுவார்த்தைகளும் தீவிரவாதமும் ஒரேசமயத்தில் நடக்காது. பாகிஸ்தானியர்களால் இந்தியாவில் நடத்தப்படும் தீவிரவாத தாக்குதல்களுக்கு, பாலக்கோட் இந்தியாவின் அணுகுமுறையை தெளிவாக உணர்த்தியது. அதாவது நிலவழி மட்டுமல்லாமல் நாங்கள் வான் வழியாகவும் தாக்குவோம்.

மேலும் தீவிரவாத தாக்குதல்கள் இந்தியாவில் நடைபெறும் என்ற தகவல்கள் கிடைத்தால் அதை நிறுத்துவதற்காக அதற்கு முன்னரே தாக்குதல் நடத்தவும் இந்தியா தயங்காது என தெளிவுபடுத்தியுள்ளது. இது பாகிஸ்தானில் மிகுந்த ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. ஒவ்வொரு தீவிரவாத தாக்குதல் நடைபெற்ற பிறகும் இருதரப்பு பேச்சுவார்த்தைகளை இந்தியா நிறுத்தி விட்டு திருப்பிப் சிறிது நாள் கழித்து தொடங்கும் என்பதை மட்டுமே பாகிஸ்தானியர்கள் அதுவரை அறிந்திருந்தார்கள்.

தீவிரவாத தாக்குதல்களை எல்லாம் உள்வாங்கிக்கொண்டு எப்பொழுதுமே பதிலடி கொடுக்காது இந்தியா என்றே அவர்கள் நம்பி இருந்தார்கள். ஆனால் இத்தகைய எண்ணங்களை எல்லாம் பிரதமர் மோடி மாற்றிவிட்டார். இது ஒரே நாள் இரவில் நடந்த மாற்றங்கள் அல்ல.

பிரதமர் மோடி அப்போதைய பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப்பை பல முறை அணுக முயன்று தோல்வி அடைந்ததன் விளைவுதான் இது. ஒவ்வொரு முறையும் இத்தகைய முயற்சிகள் பாகிஸ்தான் ராணுவத்தால் தடைசெய்யப்பட்டன. விரைவில் பாகிஸ்தான் ராணுவம் நவாஸ் ஷெரீப்பை நாடு கடத்தியது. அங்கே இருந்து கொண்டுதான் நவாஸ் ஷெரீப் அவருடைய நாட்டின் ராணுவம் அவரது நாட்டின் அரசாங்கத்திற்கு மேலானது என்று புலம்பி வருகிறார்.

இந்த போர் நிறுத்த உடன்படிக்கைக்கு உலகளாவிய பதில் நல்லவிதமாக உள்ளது. ஆனால் அது இயல்பானதுதான். இந்த மாதிரியான போர் நிறுத்தங்கள் மேலும் ஒரு சமாதான முயற்சிகளுக்கு ஒரு ஆரம்பத்தை அளிக்கிறது. ஆனால் இந்த விவகாரத்தில் இந்தியா மிகுந்த எச்சரிக்கையாக இருக்க வேண்டும். பாகிஸ்தான் ராணுவம் தனது அடிப்படையான நிலையை மாற்றிக்கொண்டது என்று நினைப்பது மிகப்பெரிய தவறு. பிரதமர் இம்ரான்கானின் இந்தியா மற்றும் பிரதமர் மோடிக்கு எதிரான முரட்டுத்தனமான மற்றும் தவறான மொழியை மறக்க முடியாது.

காலிஸ்தான் இயக்கத்தை மீண்டும் உயிர்ப்பிக்கவும், வெவ்வேறு பெயர்களைக் கொண்ட புதிய பயங்கரவாத குழுக்களை உருவாக்க பாகிஸ்தான் எடுத்துவரும் நடவடிக்கைகள் நிறுத்தப்படவில்லை. பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத தொழிற்சாலைகள் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் இல்லை, அவை அவ்வப்போது செயல்படுத்தப்பட்டு அவ்வப்போது அணைத்து வைக்கப்படுகின்றன.

1949ன் இருந்த கராச்சி ஒப்பந்தம், 1972ன் சிம்லா ஒப்பந்தம் என அனைத்தையும் பாகிஸ்தான் இதுவரை மீறி இருக்கிறது. தனக்கு கிடைத்த முதல் வாய்ப்பில் இருக்கின்ற அனைத்து ஒப்பந்தங்களையும் தூக்கி எறிந்து விடும் என்பதை இந்தியா கவனத்தில் கொள்ளவேண்டும். 2003ஆம் ஆண்டில் ஏற்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தம் எல்லைப்பகுதிகளில் ஓரளவிற்கு தாக்குதல்களை குறைத்தது உண்மைதான் என்றாலும், இது 2007 வரை நீடித்து 2008 இல் முடிவடைந்தது.

இந்த போர்நிறுத்த ஒப்பந்தத்தின் நேரமும் முக்கியத்துவம் வாய்ந்தது. ஏனெனில் கோடைகாலங்களில் தீவிரவாதிகள் ஊடுருவவும், தீவிரவாத தாக்குதல்கள் பொதுவாக அதிகரிக்கும். இனிவரும் காலங்களில் இது குறைவடைந்து இருந்தால் இந்த ஒப்பந்தம் வெற்றியடைந்தாக நாம் கொள்ளலாம். அவ்வாறு அது வெற்றியடைந்தால் பாகிஸ்தான் ராணுவம் தான் தீவிரவாதிகளை கட்டுப்படுத்தும் கைப்பிடியை வைத்திருக்கிறது என்பதை நாம் கருத்தில் கொள்ளலாம்.

இந்தியா-சீனா உறவுகள், பொருளாதார மந்த நிலை ஆகியற்றினால் எல்லைப்பகுதியில் நடத்தப்படும் துப்பாக்கிச் சண்டைகள் ஆகியவை பாகிஸ்தானின் மீது மிகுந்த சேதத்தை ஏற்படுத்தியுள்ளதா? தொற்றுநோயால் பாகிஸ்தானின் பொருளாதாரம் ஆட்டம் காண்பது மட்டுமல்லாமல், பலுசிஸ்தானில் நடைபெற்றுவரும் சுதந்திர போராட்டமும் சர்வதேச அளவில் வழங்கப்பட்ட நிதி காய்ந்து போனதும் இதற்கு காரணமா? சவுதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு நாடுகள் ஆகியவை வழங்கும் அவசரகால நிதி கடனுதவியும் எண்ணெய் இறக்குமதியும் தொடர்ந்து கிடைக்காததால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

ஜம்மு-காஷ்மீரை பொறுத்தவரை, இந்தியாவை ஒரு வில்லனாக சித்தரிக்க பாகிஸ்தான் எடுத்த முயற்சிகளும் சர்வதேச நாடுகளை இந்திய விவகாரத்தில் தலையிட வைக்க எடுத்த முயற்சிகளும் வீணாகிவிட்டது. வெளிநாடுகளில் இருந்து உள்ளே வரும் நிதி FTFA சாம்பல் பட்டியலில் பாகிஸ்தான் இருப்பது தடையை ஏற்படுத்தி உள்ளது. சர்வதேச நிதி நாணயமும் பாகிஸ்தானுக்கு கடுமையான விதிமுறைகளின் கீழ் மட்டுமே பணத்தை வழங்குகிறது.

பாகிஸ்தானுக்கு அனைத்து உதவிகளையும் புரிந்து வந்த சீனா தற்போது தன்னுடைய சொந்த பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டு வருகிறது. சீனா-பாகிஸ்தான் இடையே முக்கியமான திட்டமான CPEC திட்டம் நிதி பற்றாக்குறையினால் பாதிக்கப்படுவதோடு மட்டுமல்லாமல் பலுசிஸ்தானில் சேர்ந்த சுதந்திரப் போராட்ட வீரர்களால் தாக்குதல்களுக்கு உள்ளாகிறது.

ஆப்கானிஸ்தானில் நிலைமை முன்னேறவில்லை. அமெரிக்கர்கள் அங்கிருந்து வெளியேற தீர்வு தீர்மானித்தால் அதனுடைய அதிகபட்ச விளைவு பாகிஸ்தானை வந்து சேரும். எனவே சீனா, இந்தியா, பாகிஸ்தான் ஆகியவை தங்களுடைய வாய்ப்புகளை ஆராய்ந்து பதற்றங்களை குறைப்பதற்கான நடவடிக்கைகளில் இறங்கியுள்ளன என்று நாம் கருத்தில் கொள்ளலாம். இது வெறும் ராஜதந்திர நடவடிக்கையா அல்லது அமைதியான நிலையான அமைதியை நோக்கிய முயற்சியா என்பதை காலம் நமக்கு உணர்த்தும்.

Reference: ORF

Next Story
கதிர் தொகுப்பு
Trending News