Kathir News
Begin typing your search above and press return to search.

சிறப்புக் கட்டுரை- தலிபான்களுக்கும் ISISற்கும் உள்ள ஒற்றுமை, வேற்றுமையின் வரலாறு !

தலிபான்களுக்கும் ISIS தீவிரவாதிகளுக்கும் இடையே எதுவும் வேறுபாடு உள்ளதா?

சிறப்புக் கட்டுரை- தலிபான்களுக்கும் ISISற்கும் உள்ள ஒற்றுமை, வேற்றுமையின் வரலாறு !
X

Saffron MomBy : Saffron Mom

  |  28 Aug 2021 1:11 PM GMT

தலிபான்கள் ஆப்கானிஸ்தானை கைப்பற்றிய பிறகு காபூல் தெருக்களில் கொடிகளுடனும் இயந்திரத் துப்பாக்கிகளுடனும் தீவிரவாதிகள் வலம் வந்தனர். தலிபான் கொடியில் வெள்ளை பின்னணியில் இஸ்லாமிய ஷஹாதா கருப்பு நிறத்தில் சித்தரிக்கப்பட்டுள்ளது. சுவாரஸ்யமாக ISIS கொடியில் கருப்பு பின்னணியில் இஸ்லாமிக் ஷஹாதா அச்சிடப்பட்டுள்ளது.

இந்த இரண்டு கொடிகளுக்கும் இருக்கும் நிற வேற்றுமை என்பது இரண்டு அமைப்புகளும் வேறுபட்ட இஸ்லாமிய கோட்பாடுகளை பின்பற்றுவதைக் குறிக்கிறதா அல்லது இரண்டு தீவிரவாத அமைப்புகள் ஒரு தலைகீழ் வண்ணக் கலவையை தங்கள் கொடிகளில் வைத்திருப்பது வெறும் தற்செயலா?

தலிபான்களுக்கும் ISIS தீவிரவாதிகளுக்கும் இடையே எதுவும் வேறுபாடு உள்ளதா?

இரு அமைப்பும் இஸ்லாமின் தூய்மையான பதிப்பை பின்பற்றுவதாகவும் அதை வளர்ப்பதாகவும் அறிவித்துக் கொள்கிறார்கள். இரு குழுக்களும் தாங்கள் கட்டுப்படுத்தும் பகுதிகளில் இஸ்லாமிய ஜிஹாத்தை மேற்கொண்டு இஸ்லாத்தின் மேலாதிக்கத்தை நிறுவ பாடுபடுவதாக தெரிவிக்கிறார்கள். ISISன் இலக்கு ஒரு இஸ்லாமிய கலிபாவை (Caliphate) உருவாக்குவது, ஆப்கானிஸ்தானை தலிபான்கள் 'இஸ்லாமிக் எமிரேட்ஸ் ஆப் ஆப்கானிஸ்தான்' என பெயரிட்டு இரு குழுக்களுக்கும் இடையில் உள்ள ஒற்றுமையை வெளிப்படுத்துகிறார்கள்.

ISIS ஐ விட பழமையானதாக இருக்கும் தலிபான்கள், அந்தக்கால சோவியத் படைகளை எதிர்த்துப் போரிடும் பொழுது வெள்ளைக் கொடிகளை பயன்படுத்தினர் . 1996இல் அவர்கள் காபூலைக் கைப்பற்றிய பொழுது வெள்ளை கொடியானது அந்நாட்டின் தேசியக் கொடியானது. அவர்களின் 'நம்பிக்கை' மற்றும் 'அரசாங்கத்தின் தூய்மையை' குறிப்பதாக தெரிவிக்கப்பட்டது. 1997ல் தலிபான்கள் தங்கள் கொடியில் இஸ்லாமிய ஷஹாதாவை சேர்த்தனர்.

மறுபுறம் ISIS என்பது சமீபத்திய ஒரு ஒரு நிகழ்வு. அமெரிக்கா ஈராக்கில் இருந்து வெளியேறிய பிறகு ISIS கடகடவென்று வளர்ச்சி பெற்றது. ISIS உடனடியாக கவனிக்கப்பட்டதற்கு காரணம், முஸ்லிம்களின் எதிரிகளாக கருதப்பட்டவர்கள் மீது அவர்கள் நடத்திய சித்திரவதையும் கொடூரமாகும். இதில் முஸ்லிம் அல்லாதவர்களும் அடக்கம். சமூக வலைத்தளங்களின் வளர்ச்சியும் இந்தத் தீவிரவாத அமைப்பு வளர்வதற்கு உதவி செய்தது.

தங்களுடைய மிருகத்தனத்தை விளம்பரமாக காட்டி, பல நூற்றாண்டு கால கனவான ஒரு இஸ்லாமிய ராஜ்யத்தை (Caliphate ) உருவாக்கும் ஆசையை தூண்டினர். ISIS தீவிரவாதிகள் ஒரு கருப்புக் கொடியில் வெள்ளை நிற இஸ்லாமிய எழுத்துக்கள் பதிந்த கொடியுடன் நிற்கும் புகைப்படங்கள் தொடர்ந்து தீவிரவாத கும்பலால் பகிரப்பட்டது.

அந்த இஸ்லாமிக் ஷஹாதா என்பது என்ன?

ஹதித்களில் இது இஸ்லாமின் ஐந்து தூண்களில் ஒன்றாகக் கூறப்படுகிறது. இது என்ன தெரிவிக்கிறது? இது அல்லாஹ்வின் மேலாதிக்கத்தையும், முகமது நபிகள் மட்டுமே கடவுளின் தூதுவர் என்று ஒப்புக் கொள்வதையும் தெரிவிக்கிறது. அந்த ஷஹாதாவின் அர்த்தம் என்ன? கடவுளைத் தவிர (அல்லாஹ்வைத் தவிர) வேறு யாரும் வணங்குவதற்கு உரியவர்கள் அல்ல. முகமது நபிகள் அக்கடவுளின் தூதுவர் என்பதற்கு நானே சாட்சியம்.

இம்மாதிரி ஜிகாத்களை மேற்கொண்டு இஸ்லாமிய மேலாதிக்கத்தை நிறுவ முயற்சிப்பது இது முதல் முறை அல்ல. முகமது நபிகளே மெக்காவில, காபாவில் ஒரு இடத்தில் வைக்கப்பட்டிருந்த சுமார் 360 சிலைகளை அழித்தார்.

முகம்மது நபிகளின் இறப்பிற்குப் பிறகு அவரை பின்பற்றுபவர்கள் இஸ்லாமை பரப்பும் ஒரே நோக்கத்துடன் ஆயுதங்கள் தாங்கி, பல இடங்களை கைப்பற்றி காலிபாக்களை உருவாக்கினர். அவற்றில் பலரும் ஐரோப்பா, ஆப்பிரிக்கா மத்திய ஆசியா ஆகியவற்றை அணுகினாலும்,அதில் குறிப்பிடத்தக்க ஒரு குழு தெற்கு ஆசியா மற்றும் இந்திய துணைக்கண்டத்திற்கு வந்து சேர்ந்தது.

இந்த குழுக்கள் இஸ்லாமின் ஆதிக்கத்தை நிறுவுவதற்காக ஜிகாத்தை அமைக்கவேண்டும் என்று கூறினர். இத்தகைய குழுக்கள் மற்ற ஆளும் வர்க்கத்தினரே போலவே தங்களுடைய அதிகாரத்தையும் குழுவையும் பிரதிநிதிப்படுத்த கொடிகளை கொண்டிருந்தனர். இஸ்லாமிய காலிபாக்கள் முகமது நபிகள் மற்றும் அவரின் வழித்தோன்றல்களால் நிறுவப்பட்டன. இத்தகைய நாடுகள் மிகப் பெரும் நிலப்பரப்புகளை ஆக்கிரமித்துக் கொண்டு, வன்முறை மற்றும் மிரட்டலால் தங்கள் வழிக்குக் கொண்டுவந்தனர்.

இவர்களுடைய கொடி மாறுபட்டாலும், ISISஉம், தாலிபான்களும் இஸ்லாமிய மேலாதிக்கத்தை கொண்டுவரவேண்டும் என்ற ஒரே நோக்கத்தை கொண்டுள்ளனர். இந்த கொடிகளின் வரலாறு என்ன? முகமது நபிகள் ஆக்கிரமிப்புகளை வழிநடத்தும் பொழுது கருப்புக்கொடி உபயோகித்ததாகக் கூறப்படுகிறது.


முஹம்மது நபிகளின் இறப்பிற்குப் பிறகு மீண்டும் கருப்பு கொடியே பயன்படுத்தப்பட்டது. அட்லாண்டிக் பத்திரிக்கையில் வெளிவந்த தகவல்களின்படி ISISன் கொடி அமைப்பும் முகமது நபிகளின் கொடிகளால் ஈர்க்கப்பட்டது (Inspired). ISIS கொடியில் உள்ள வெள்ளை வட்டம் முகமது நபிகள் சார்பாக எழுதியதாக கருதப்படும் கடிதங்களில் உள்ள சீல்கள் என கூறப்படுகிறது.

மத்திய ஆசியாவில் உள்ள பல நாடுகள் முகமது நபிகளின் இந்த சீல்களைப் பெற்றுள்ளன. அதனால் ஈர்க்கப்பட்டு தான் ISIS பயன்படுத்தியதாகவும் கூறப்படுகிறது. ஆனால் அதற்கு பிறகு வந்த இரண்டாவது காலிபாவான உம்மையத் கருப்புக் கொடிகளை பயன்படுத்துவதை விடுத்து வெள்ளைக் கொடிகளை பயன்படுத்தியது. இந்த சமயத்தில் தான் இந்தியாவில், மத்திய ஆசியாவில் இஸ்லாமிய படையெடுப்புகள் ஆப்கானிஸ்தான் வழியாக வரத்தொடங்கின. தலிபான் தீவிரவாதிகள் இதனாலேயே கூட வெள்ளைக் கொடிகளை பயன்படுத்தி இருக்கலாம். இது அந்த சமயத்தில் ஆட்சி புரிந்த உம்மையத் காலிபாவை பிரதிநித்துவப்படுத்துகிறது.

'காஸ்வா ஈ ஹிந்' என்பது இந்தியாவில் இஸ்லாமின் ஆதிக்கம் நிகழும் என்பதற்கான ஒரு 'தீர்க்கதரிசனம்' (prophecy) ஆகும். இது பாகிஸ்தானின் மற்றும் இந்தியாவில் உள்ள இஸ்லாமியவாதிகளின் முக்கியமான இலக்காகும். இந்த தீர்க்கதரிசனம் தான் பல்வேறு இஸ்லாமிய தீவிரவாத குழுக்களை ஒரே நம்பிக்கை கொண்டு இந்தியாவிற்கு எதிராக போர் தொடுக்க ஊக்குவிக்கிறது. இந்த தீர்க்க தரிசனம் போர் மட்டுமல்லாமல் பலவித இனப் படுகொலைகளுக்கும், மனித குலத்திற்கு எதிரான குற்றங்களுக்கும் காரணமாக இருந்துள்ளது.

ISIS, மத்திய ஆசியாவில் மையமாகக் கொண்ட காலிபாக்களை ஒட்டி, கருப்பு நிற கொடியை கடைபிடிக்கிறது. ஆனால் காலிபாக்கள் என்பது இஸ்லாமிய கருத்தாக்கம் உம்மாவின் கீழ் வருகிறது. இது உலகளாவிய தேசிய அடையாளம் கொண்ட ஒரு சமூகத்தை உருவாக்க முயற்சிக்கிறது. இது, முஸ்லிம்கள் எல்லாரும் ஒருவர்தான் ஒருவருடைய தேசியத்தால் அது மாறுபட்டு விடாது என்பதற்கான நோக்கத்தை கொண்டுள்ளது. இதை நம்பாதவர்கள் அனைவரையும் இஸ்லாமியமயமாக்குவது தான் இலக்கு.

மேலோட்டமாகப் பார்த்தால் பலவித இஸ்லாமிய குழுக்களும், அமைப்புகளும் பலவித தீவிரவாத இயக்கங்களில் இணைந்து தங்களுடைய சொந்த இலக்குகளை அடைய முயற்சிப்பது போல் தெரியலாம். ஆனால் இவர்கள் அனைவரும் உண்மையாக இஸ்லாமிக் ஆட்சியை அமைக்க தான் வேலை செய்கின்றன. இவர்களிடையிலான பிரச்சினைகள் பெரும்பாலும் இதன் தலைவர்களுக்கிடையிலான ஈகோ மோதல்கள் தான்.

துருக்கியின் கொடி நிறமான ஒட்டமான் சாம்ராஜ்யத்தின் கொடியான சிவப்பு நிறத்தில் இருக்கும். கடைசி அராபிய காலிபாவான பாடிபிட் பச்சை நிற கொடியை கொண்டிருக்கும் என்பதால் இஸ்லாம் பச்சை நிறத்துடனும் தொடர்பு கொண்டுள்ளது. எந்த நிற கொடியாக இருந்தாலும் வெள்ளை, கருப்பு, சிவப்பு, பச்சை அவர்களுடைய மனநிலை ஒன்று தான். இஸ்லாமின் மேலாதிக்கத்தை நிறுவுவது. எனவே முஸ்லிமல்லாதவர்களுக்கு இந்த அச்சுறுத்தல் நிஜமானது. ஏனெனில் மக்களை கட்டாயப்படுத்தி மதம் மாற்றி, துன்புறுத்துவது காலம் காலமாக நடைபெற்று வருகிறது.


Cover Image Courtesy: The Daily Beast

Next Story
கதிர் தொகுப்பு
Trending News