Kathir News
Begin typing your search above and press return to search.

குஜராத் கலவர வழக்கில் மோடியை சிக்க வைக்க சோனியா காந்தி செய்த சதி வேலைகள் - வெளிவரும் தொடர் உண்மைகள்

குஜராத் கலவர வழக்கில் மோடியை சிக்க வைக்க சோனியா காந்தி சதி செய்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

குஜராத் கலவர வழக்கில் மோடியை சிக்க வைக்க சோனியா காந்தி செய்த சதி வேலைகள் - வெளிவரும் தொடர் உண்மைகள்
X

Mohan RajBy : Mohan Raj

  |  18 July 2022 10:47 AM GMT

குஜராத் கலவர வழக்கில் மோடியை சிக்க வைக்க சோனியா காந்தி சதி செய்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

குஜராத் மாநிலத்தில் கடந்த 22 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்திற்கு மறுநாள் நாரோடா பாட்டியா என்ற இடத்தில் மிகப்பெரிய வன்முறையை வெடித்ததில் 97 சிறுபான்மையினர் பரிதாபமாக இறந்தனர்.

இந்த வழக்கில் அப்போதைய குஜராத் முதல்வராக இருந்த மோடி மீது குற்றம் சாட்டப்பட்டது இது தொடர்பான வழக்கை கடந்த மாதம் விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதி கான்வில்கர் தலைமையிலான அமர்வு மோடி குற்றமற்றவர் என தீர்ப்பு வழங்கியது.

இந்த வழக்கில் போலி ஆவணங்களை தயாரித்து மக்களை திசை திருப்பும் நடவடிக்கையில் ஈடுபட்டதாக சமூக ஆர்வலர் டீஸ்டா செடல்வாட் சிறப்பு புலனாய்வு குழுவால் கைது செய்யப்பட்டார்.

இந்நிலையில் குஜராத் கலவரம் வழக்கில் மோடியை சிக்க வைக்கும் சதியின் பின்னணியில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி இருந்ததாக பா.ஜ.க குற்றம் சுமத்தியுள்ளது.

இதுகுறித்து டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய பா.ஜ.க செய்தி தொடர்பாளர் சம்பித் பத்ரா கூறியதாவது, 'சோனியா காந்தி அரசியல் ஆலோசகர் மறைந்த முகமது அகமது படேல் குஜராத் மாநிலத்தில், பா.ஜ.க அரசை சீர்குலைக்கவும், மோடியின் அரசியல் வாழ்க்கையை சேதப்படுத்தும் வகையில் செயல்பட்டார் எனினும் அவர் சோனியா காந்தியினால் இயக்கப்பட்டார்.

சிறப்பு புலனாய்வு குழுவால் கைது செய்யப்பட்ட டீஸ்டா செடல்வாட் நீதிமன்றத்தின் முன் அளித்த வாக்கு மூலத்தில் அகமது படேல் குறித்து குறிப்பிட்டுள்ளார்.

அதற்கு முன் தனிப்பட்ட பயன்பாட்டிற்காக செடல்வாட் மனைவியிடம் 30 லட்சம் வாங்கியதாக சிறப்பு புலனாய்வு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது அந்த பணம் சோனியா காந்தி வழங்கியது.

மேலும் குஜராத் கலவரம் வழக்குகளை தொடர்ந்து செடல்வாட்டிற்கு காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது, மேலும் அவர் தேசிய ஆலோசனை குழுவில் உறுப்பினராகவும் சேர்க்கப்பட்டார்.


இது குறித்து சோனியா காந்தி விளக்கம் அளிக்க வேண்டும் இவ்வாறு சம்பத் பந்த்ரா குறிப்பிட்டது பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.


Source - Maalai malar

Next Story
கதிர் தொகுப்பு
Trending News