'கன்னியாதானம்' பிற்போக்கானதா அல்லது விமர்சனங்கள் இந்து சடங்கின் மீதான தாக்குதலா?
By : Saffron Mom
"இந்துமத சடங்குகள், சம்பிரதாயங்களை நாங்கள் துறந்து விட்டோம், நாங்கள் எந்த அளவு முற்போக்குவாதிகள் என்று பார்த்தீர்களா? என்ற ரீதியில் திருமண புகைப்படங்கள் அடிக்கடி சமூக வலைத்தளங்களில் வலம் வருவது வழக்கம். அதுபோல இம்முறை மாட்டிய ஒரு சம்பிரதாயம் 'கன்னியாதானம்'. இந்த கல்யாண சீசனில் இந்தியா மற்றும் உலக அளவிலும் இது சம்பந்தமான செய்திகள் அடிபட்டது.
இதற்கு ஒரு முக்கியமான காரணமாக, திருமண ஆடை அலங்காரங்களை வடிவமைக்கும் 'மான்யவர்' என்ற ஒரு ஆடை நிறுவனத்தின் விளம்பரம் அலியாபட் நடித்து வெளியானது. இந்த விளம்பரத்தில் 'ஒரு மகள் என்பவர் தானம் கொடுப்பதற்கு ஒரு பொருள் அல்ல' என்பது போன்ற 'விழிப்புணர்வை' ஏற்படுத்த முயற்சித்தனர். இதைத்தொடர்ந்து 'பெண் என்பவள் தானமாகக் கொடுப்பதற்கு பொருளல்ல' என்றெல்லாம் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ்களின் புகைப்படங்கள் வலம் வந்தன.
இதுதொடர்பாக 'சுபமஸ்து கலெக்டிவ்' என்ற ஒரு பெண்ணியவாதிகள் நிறைந்த ஒரு புரோகிதர் குழுவிடம் பேட்டிகள் எடுக்கப்பட்டது. இதில் நந்தினி என்ற முன்னாள் சமஸ்கிருத பேராசிரியரும் நாடகமேடை நடிகை, பிற்போக்குத்தனமான இந்து திருமண சம்பிரதாயங்களை விட்டொழிக்க வேண்டும் என்ற ரீதியில் ஒரு பேட்டி ஒன்றை அளித்தார். பெண்கள் பணி புரியும் இந்த காலகட்டத்தில் இத்தகைய பிற்போக்குத்தனமான சடங்கை செய்ய முடியும் என்ற ரீதியில் கேள்வியும் எழுப்பியுள்ளார்.
இதற்கெல்லாம் பதில் கொடுக்கும் சஹிஸ்னு பட்டாச்சார்யா கன்னியாதானம் என்றால் என்ன உண்மையில் என்ன என்பதை இந்தியா பாக்ட்ஸ் வலைதள கட்டுரையில் விளக்குகிறார். இந்த 'கன்னியாதானம்' முறை பிற்போக்குத்தனமாக பார்க்கப்படுவதற்கு காரணம் ஒரு கன்னி (பெண்) தானமாக கொடுக்கப்படுகிறாள் என்ற புரிதலே ஆகும். இது ஒரு பெண்ணை பொருள் போல சமூகம் பாவிப்பதாகவும் குற்றம் சுமத்துகிறது.
ஆனால் உண்மை என்ன? 13ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்திலேயே தானம் என்பது அப்படியே 'தானம்' என்ற வெளிப்படையான பொருளை குறிப்பது அல்ல. எப்படி? இது குறித்து விளக்கும் ஆசிரியர் ஹரிகரன் சாரியா 'ஒரு பொருளின் மீதான உரிமை முழுவதுமாக நீங்கி மற்றொருவரின் உரிமை தொடங்கும் மட்டுமே தானம் வழங்க முடியும்' ( கா கன்யா கதாஞ்சித் அபி அ-ஸ்வகன்யா கர்துஷ் ஷக்யதே' ) இது எப்படி கன்னியா தானத்திற்கு பொருந்தும்?
ஒருவரின் சொந்த மகள் ஒருவருக்கு சொந்தமாக இருப்பதை நிறுத்துவது எப்போதும் சாத்தியமில்லை. ஏனெனில் அவருடைய பெற்றோர்கள் எக்காலத்திலும் மாற முடியாது. 'நாபி பரஸ்ய கன்யா பவதி விவஹோத்தரமபி மமேயாத்யப்தாத்ரஹோதாஹோதா'கணீதா இதனால் கொடுப்பது என்பது வெளிப்படையான அர்த்தத்தில் அல்ல. உருவகம் மட்டுமே. மகன்கள் மகள்கள் அறிவு ஆகியவற்றை கொடுப்பது உருவகம் மட்டுமே. அதாவது ஒரு மாணவருக்கு ஒரு ஆசிரியர் அறிவைக் கொடுத்து விட்டு அந்த அறிவிலிருந்து அன்னியபடுத்திக்கொள்ள முடியாது. அதனால் 'கொடுப்பது' ஒரு 'கௌனா' அல்லது உருவ அர்த்தத்தில் (ஒரு நேரடி அர்த்தத்திற்கு மாறாக) குறிக்கப்படுகிறது. சோமநாதரின் மயூகமல்லிகா மேலும் சிறப்பித்துக் காட்டுகிறது: 'கன்யாதன-புத்ராதன-வித்யாதான-ஆதௌ ஸ்வத்வ-த்யாக-அஸம்பவாத் இத்யார்த:'
மணமகள் வீட்டிற்கு மணமகன் வரும்பொழுது, மணமகள் வீட்டாரின் மூத்தவர்கள் தங்கள் மகளை முறைப்படி 'காட்டுகிறார்கள்' (present) 'அளிக்கிறார்கள்'. மணமகன் தன் இஷ்டத்திற்கு வீட்டுக்குள் வரவில்லை. பெரியவர்களின் ஆசியோடு இந்த இணைப்பு நடைபெறுகிறது என்பதன் அடையாளம். 'கன்னியாதானம்' என்பது ஒரு 'சிஷ்டாசாரம்'. கலாச்சாரம் உடைய மக்களின் பழக்கம் இது. இது தர்மத்தின் ஒரு உதாரணமாகவும் காட்டப்படுகிறது.
இந்த உணர்வை மேலும் விளக்க, மணமகன் வேதத்தில் இருந்து கூறும் கன்யாதானத்தை ஏற்றுக் கொள்ளும் மந்திரத்தை பரிசீலிப்போம்: 'த்யௌஸ்த்வா ததாது ப்ருதிவி த்வா ப்ரதிக்ருணாது' – "வானம் உனக்குத் தரட்டும், பூமி உன்னைப் பெறட்டும்!" வானத்தின் தாராள மனப்பான்மையிலும் பூமியின் பணிவின் கீழும் எல்லாமே செழித்து வளர்கின்றன: வானம் 'கொடுக்கிறது' மற்றும் பூமி நம்மை 'பெறுகிறது'. மணமகன் மணப்பெண்ணின் கையைப் பிடித்து, 'த்யுரஹம் ப்ரிதிவி த்வம்' - "நான் வானம், நீ பூமி!" என்று அறிவிக்கும் போது, இந்தச் சடங்கில் இந்த மையக்கருத்து மேலும் தொடர்கிறது. – நான் உன்னுடன் சேர்ந்தவன், நீ என்னோடு சேர்ந்தவன்; ஏனென்றால், வானம் இல்லாமல் பூமி இல்லை, பூமி இல்லாமல் வானமும் இல்லை!
புனிதமான காமஸ்துதி இந்த கட்டத்தில் வாசிக்கப்படுகிறது - 'கோதாத் கஸ்மா'தாத் காமோ தத் காமாயாதாத் காமோ ததா காம: பிரதிக்ரஹிதா காமைதாத்தே? "காமன் கொடுப்பவர் மற்றும் காமன் பெறுபவர். இது காமனுக்கு மட்டுமே அர்ப்பணம்!'' - "நான்தான் கொடுப்பவன்" என்று நினைத்துக் கொடுப்பவர், "நான்தான் பெறுபவர்" என்று நினைத்துப் பெறுபவர் இருவரும் சமமாகத் தவறாகப் புரிந்து கொள்ளப்படுகிறார்கள். சில விஷயங்கள் உண்மையிலேயே கொடுக்கப்படுவதில்லை அல்லது உண்மையாகப் பெறப்படுவதில்லை . 'கொடுத்தல்' என்ற சடங்குச் சட்டம் ஒரு உயர்ந்த நோக்கத்திற்கு உதவுகிறது, அதாவது தர்மம்.
எனவே கன்யாதானம் என்பது 'மணப்பெண்ணைக் கொடுப்பது' அல்ல; ஆங்கிலத்தில் அதன் பொருத்தமான மொழிபெயர்ப்பு 'மணமகளை முறையான காட்டுதல்' (Presentation) என இருக்க வேண்டும். 'கன்யாதானம்' என்பது ஒரு பெண் ஒரு நாள் தன் வீட்டை விட்டு வெளியேறி, யாரிடமும் தெரிவிக்ககாமல் காதலனின் வீட்டிற்குச் செல்லவில்லை என்பதையும், தம்பதியரை அவர்களது குடும்பத்தினர் ஏற்றுக்கொள்வதையும் ஆதரிப்பதையும் காட்டுகிறது. மேலும் குடும்பங்கள் ஒப்புதல் அளித்துள்ளனர் மற்றும் அதை ஆசீர்வதித்துள்ளனர் என்பதைக் குறிக்கிறது. ஒரு திருமணம் வெறுமனே இரண்டு தனிப்பட்ட நபர்களுக்கு இடையில் ('உலகின் மற்ற பகுதிகளில் உள்ளது போல்) மட்டுமானது அல்ல. திருமணம் என்பது இரண்டு குடும்பங்கள் இணைவது. ஒரு 'நவீன' யுகத்தில், திருமணங்கள் அடிக்கடி நடக்கும் நகர்ப்புறங்களில், மணமகன் வருகை மற்றும் மணமகள் அழைத்துச் செல்லப்படுதல் ஆகியவற்றின் அடிப்படைக் குறியீடுகள் பெரும்பாலும் கண்ணுக்குத் தெரியாததாகவும், அநீதிகளாகவும் தவறாகக் கருதப்படுகின்றன. ஆனால் அது சொல்லும் கதையைப் பார்க்க பெரிய சூழலை ஆராய வேண்டியது அவசியம்.
Translated From: To Give or Not to Give: 'Kanyādāna' in an Age of Idiocy and Instantaneity