Kathir News
Begin typing your search above and press return to search.

#Kathirexclusive கனமழையில் திருவாரூர் மாவட்டத்தில் பள்ளிகள் இயங்கின - தி.மு.க எம்.எல்.ஏ மாணவர்களை வரவேற்க வேண்டும் என இப்படியா?

#Kathirexclusive கனமழையில் திருவாரூர் மாவட்டத்தில் பள்ளிகள் இயங்கின - தி.மு.க எம்.எல்.ஏ மாணவர்களை வரவேற்க வேண்டும் என இப்படியா?

Mohan RajBy : Mohan Raj

  |  2 Nov 2021 2:15 PM GMT

நேற்று எட்டு மாவட்டங்களில் கடும் மழையினால் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்த நிலையில் கடும் மழையிலும் திருவாரூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படாததால் மாணவர்களும், பெற்றோர்களும் அவதிக்குள்ளாகினர்.

தமிழகம் முழுவதும் மழை கடந்த 4 தினங்களாக அதிக அளவில் பெய்து வருவதால் மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். சில இடங்களில் ஏற்படும் விபத்துக்களால் உயிர்பலி விபத்து கூட நடந்தேறியுள்ளது. நிலைமை இவ்வாறு இருக்கையில் நேற்று 1'ம் வகுப்பு முதல் 8'ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்திருந்தது.

இந்த நிலையில் நேற்று மழை அதிக அளவு இருந்ததால் தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. நேற்றும் அது போல் தமிழகத்தில் கடலோர மாவட்டங்களில் மழை கடுமையாக பெய்தது. அதன் காரணமாக 10 மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு காலையிலேயே வெளியிடப்பட்டது.

சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், பெரம்பலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, அரியலூர், ஆகிய மாவட்டங்களில் நேற்று காலை 8 மணியளவில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டதால் மாணவர்கள் பாதுகாப்பாக வீட்டிலேயே இருந்தனர். ஆனால் திருவாரூர் மாவட்டத்தில் மழை அதிகம் இருந்தும் மாவட்ட ஆட்சியர் காயத்திரி கிருஷ்ணன் நேற்று விடுமுறை அறிவிக்கவில்லை மாறாக நேற்று பள்ளிகள் இயங்கியதால் பல மாணவர்கள் மழையில் பள்ளி வரவேண்டியதாவிட்டது, அதுமட்டுமின்றி மாலை பள்ளி விடும் சமயத்தில் சரியாக 4 மணியளவில் மழை அடர்த்தியாக பெய்ததால் நிறைய மாணவர்கள் ஒதுங்கி நிற்க வேண்டிய சூழலும் ஆகிவிட்டது. அதுபோக நேற்று தீபாவளி கூட்டம் வேறு பேருந்துகளை ஆக்கிரமித்ததால் மாணவர்களுக்கு சரியான போக்குவரத்து வசதி கூட இல்லை.





இப்படியாக இருக்கையில் நேற்று அடாது மழையிலும் மாணவர்களுக்கு விடுமுறை அறிவிக்காமல் மாவட்ட ஆட்சியர் காயத்திரி கிருஷ்ணன் அலட்சியம் காட்டியுள்ளார். இந்த நிலையில் திருவாரூர் எம்.எல்.ஏ பூண்டி கலைவாணன் அவர்கள் திருவாரூர் பகுதியை சேர்ந்த ஒரு அரசுப்பள்ளியில் மாணவர்களை வரவேற்று நிகழ்ச்சி ஒன்றை நிகழ்த்தினார். உடன் மாவட்ட ஆட்சியர் காயத்திரி கிருஷ்ணன் பங்கு பெற்றார். இன்று முதல் தீபாவளி விடுமுறை என்பதால் எம்.எல்.ஏ பூண்டி கலைவாணன் மாணவர்களை வரவேற்று நிகழ்ச்சியை நடத்த வேண்டும் என நேற்று மழையிலும் மாணவர்களை பள்ளிக்கு வரவரைத்து அலைக்கழித்துள்ளனர்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News