#KathirExclusive : இலங்கை தமிழர்களுக்காக பல முறை குரல் கொடுத்துள்ள யோகி ஆதித்யநாத்!
By : Yuvaraj Ramalingam
நடந்து முடிந்த 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகளில், பா.ஜ.க 4 மாநிலங்களில் கைப்பற்றி அமோக வெற்றி பெற்றுள்ளது.
நாட்டின் பெரிய மாநிலமான உத்தரப் பிரதேசத்தை மீண்டும் முதல்வர் யோகி ஆதித்யநாத் கைப்பற்றியுள்ளார். இதனால் இந்தியா முழுவதும் அவரது புகழ் ஓங்கி ஒலித்து வருகிறது. ஆனால் தமிழக மீடியாக்கள், "யோகி ஆதித்யநாத் தனது வெற்றியை ஏதோ பாசிச அரசியலால் வெற்றி பெற்று விட்டார்" என்பது போன்ற பிம்பங்களை உருவாக்கி வருகிறது.
இன்று மட்டுமல்ல, அவர் 2017 இல் பதவி ஏற்றது முதல், தமிழக மீடியாக்கள் அவரை ஏதோ ஒரு கேலி பொருளாகவே தமிழக மக்களிடம் சித்தரித்து வந்தது. ஆனால் அவரோ தமிழக மக்களின் முக்கிய பிரச்சினைகளுக்கு குரல் கொடுத்தவராகவே திகழ்கிறார் என்பதே வரலாற்று உண்மையாகும்.
இலங்கை தமிழர்கள் விவகாரம் குறித்து யோகி அவர்கள், 2013 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 14 ஆம் தேதி இலங்கை தமிழர்களுக்காக பாராளுமன்றத்தில் குரல் கொடுத்த நிகழ்வை தமிழக மக்களிடம் எந்த மீடியாக்களும் பதிவு செய்யவில்லை.
அதாவது 2013இல், "இலங்கை தன் 13 ஆவது சட்டத் திருத்தம் செய்ய போவதாக செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றனர். அது இந்திய நாட்டின் ஒப்புதலுடன் நடந்ததா?" என்று யோகி பாராளுமன்ற உறுப்பினர் திரு யஸ்வந்த் சின்ஹாவுடன் இணைந்து காங்கிரஸ் அரசை நோக்கி கேள்வி எழுப்பினார்.
அடுத்து, 2014 ஜூலை மாதம் 23ஆம் தேதியன்று நாடாளுமன்றத்தில் திரு யோகி ஆதித்யநாத் அவர்கள் இலங்கையில் மனித உரிமைகள் பாதுகாப்பிற்காக தமிழர்களின் நலனுக்காக இந்திய அரசாங்கம் எடுத்த நடவடிக்கைகள் என்ன ? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
இப்படி தமிழர்களின் நலனுக்காக குரல் கொடுத்தவராக திகழும் யோகி ஆதித்யநாத் அவர்களை, தமிழக மீடியாக்கள் கொண்டாடாமல் இருக்கலாம். ஆனால் ஒருநாள் தமிழினம் அவரை கொண்டாடும்.