வானதி சீனிவாசன் VS கமலஹாசன் : தகுதி ஒப்பீடு
By : Vishwamitra
பிறப்பு
வானதி சீனிவாசன் : பிறந்து வளர்ந்தது கோவையில்.
கமலஹாசன் : பிறந்தது பரமக்குடி, வளர்ந்தது சென்னை. கோவைக்கு சம்பந்தமில்லாதவர்.
படிப்பு
வானதி சீனிவாசன் : பள்ளிப் படிப்பில் முதல் மாணவர். கோவை பி.எஸ்.ஜி கல்லூரியில் கெமிஸ்ட்ரி பட்டப் படிப்பு. சென்னை அம்பேத்கார் சட்டக் கல்லூரியில் பி.எல். இண்ட்டர்நேஷனல் கான்ஸிட்ட்யூஷன் படிப்பில் எம்.எல் பட்டம் பெற்றவர். சட்டசபை உறுப்பினரின் வேலையே சட்டங்கள் இயற்றுவதுதான். அதற்கான படிப்பில் முதுகலைப் பட்டமும் பயிற்சியும் அனுபவமும் மிக்கவர். முதுகலை சட்டப்படிப்பு முடித்து வக்கீலாக பல்வேறு நீதிமன்றங்களில் பணியாற்றியவர். மத்திய அரசுக்காகவும், ரயில்வே துறைக்காகவும் பணிபுரிந்த ஒரு சட்ட வல்லுனர்.
கமலஹாசன் : பள்ளிக்காலங்களிலேயே நடிக்க ஆரம்பித்து விட்டார். சட்ட அறிவு எந்த அளவிற்கு இருக்கிறது என்று தெரியவில்லை. சட்டம் இயற்றுவது குறித்தோ இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் குறித்தோ எந்த அறிவும் இல்லாதவர். தனது வாழ்க்கை முழுவதும் இதுவரை சினிமாவிலேயே செலவிட்டவர். யதார்த்த வாழ்வில் இருந்து விலகி இருப்பவர்.
தேசப்பற்று
வானதி சீனிவாசன் : சுதந்திரப் போராட்ட வீரர்களுக்காக வாதாடி அவர்களுக்கான சலுகைகளைப் பெற்றுத் தந்த வழக்கறிஞர்.
கமலஹாசன் : விடுதலைப் போராட்ட வீரராக சினிமாக்களில் நடித்தவர். எந்த சுதந்திரப் போராட்ட வீரர்களின் நலன்களுக்காகவுன் நிஜத்தில் எதையும் செய்ததாக தகவல் இல்லை.
வழக்காடும் அனுபவம்
வானதி சீனிவாசன் : சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பல வழக்குகளில் அனுபவம் பெற்றவர். ஆகச் சிறந்த பெண் வழக்கறிஞர் என்ற பட்டத்தை சென்னை உயர்நீதிமன்றத்தின் தலமை நீதிபதி இக்பால் இவருக்கு அளித்துள்ளார்.
கமலஹாசன் : வழக்கறிஞராக சினிமாக்களில் நடித்துள்ளார். மற்றபடி சட்ட அறிவு என்பது கேள்விக்குறியே.
நிர்வாகத் திறன்
வானதி சீனிவாசன் : மத்திய அரசு வழக்கறிஞராகவும், ரயில்வே துறைக்கான வழக்கறிஞராகவும் பணிபுரிந்துள்ளார்.
கமலஹாசன் : சினிமா அனுபவம் மட்டுமே உண்டு. ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் என்ற சினிமா கம்பெனியை நடத்தி வருகிறார். அரசுப் பணிகளிலோ நிர்வாகப் பணிகளிலோ மக்கள் சேவைப் பணிகளிலோ அனுபவம் இல்லாத ஒரு நடிகர்.
பெண்களின் முன்னேற்றம்
வானதி சீனிவாசன் : பெண்களின் முன்னேற்றத்துக்காக சக்தி ட்ரஸ்ட் என்ற அமைப்பை உருவாக்கி, ஏஷியன் கேம்ஸ் போட்டிகளில் பெண் விளையாட்டாளர்களின் பாலியல் சோதனை நடத்தும் முறைக்கு போராடி முடிவு கொண்டு வந்தவர். பெண்களின் நலன் உரிமைகள் குறித்து சட்ட ரீதியாகப் போராடி வருபவர்.
கமலஹாசன் : பெண்களை சினிமாவில் காட்சிப் பொருளாக்கி கேலி செய்பவர்.
கொரோனா காலத்தில் உதவி
வானதி சீனிவாசன் : கோவை மக்கள் சேவை மையம் என்ற அமைப்பை உருவாக்கி கோவை மக்களின் நலன்களுக்காக உழைத்து வருபவர். கொரோனா காலத்தில் மோடி உணவகம் அமைத்து பிற மாநிலங்களில் இருந்து புலம் பெயர்ந்தவர்களின் குடும்பங்களுக்கு உணவு அளித்தவர்.
கமலஹாசன் : மக்கள் சேவை மையம் என்ற அரசியல் அமைப்பை உருவாக்கி, அவ்வப்பொழுது தன் ரசிகர்களை ரத்த தானம் கொடுக்கச் செய்தவர். அது தவிர தானே நேரடியாக பெரிய தாக்கம் எதையும் ஏற்படுத்தாதவர். கொரானா காலத்திலோ பிற இயற்கைப் பேரிடர் சமயங்களிலோ தெருவில் இறங்கி நேரடியாக மக்களுக்கு செய்ததாக தெரியவில்லை.
தொழில்துறை மேம்பாடு
வானதி சீனிவாசன் : நியூ இண்டியா என்ற அறிவுசார் அமைப்பை உருவாக்கி அதில் தொழிலதிபர்களையும் தொழில்சார் இளைஞர்களையும் அறிஞர்களையும் ஒன்றிணைத்து கோவையின் தொழில்துறை மேம்பாட்டுக்காக உழைத்து வருபவர்.
கமலஹாசன் : சினிமா துறையில் உள்ள தொழில் முனைவோர்கள் இடையே இணக்கம் உள்ளவர். சினிமா துறையில் அறிவுசார் பங்களிப்பு அளித்தவர். ஆனால், தொழில் ரீதியாக சினிமா துறைக்கும் கோவைக்கும் பெரிய தொடர்பு இல்லை.
திருநங்கைகளுக்கான போராட்டம்
வானதி சீனிவாசன் : இந்திய அளவில் திருநங்கைகள் மற்றும் தனித்துவமான பாலியல் தேர்வு உடையவர்களின் உரிமைகளுக்காகப் போராடி வருபவர்.
கமலஹாசன் : பெண்களையும் திருநங்கைகளையும் கேலி செய்தும் அவமதித்தும் எடுக்கப்படும் சினிமாக்களைக் கூட கண்டிக்காதவர்.
அரசியல் பயணம்
வானதி சீனிவாசன் : 1993 ஆம் ஆண்டு முதல் 30ஆண்டுகளாக அரசியலில் ஈடுபட்டு பொது மக்களுக்காக சேவை செய்து வருபவர். மாணவர்களுக்கான ஏ.பி.வி.பி அமைப்பில் கல்லூரி காலத்தில் இருந்தே அரசியலில் தன்னை இணைத்துக் கொண்டு, பா.ஜ.க-வின் அடிமட்ட தொண்டரில் இருந்து மாநில செயலலாளர் பதவி வரை வகித்து இப்பொழுது அகில இந்திய பா.ஜ.க மகளிர் அணியின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளவர். படிப்படியாக அரசியலில் உயர்ந்து வந்தவர். கோவை தொகுதியில் 2016 ஆம் போட்டியிட்டு 33,000 வாக்குகளை பெற்றவர். 2011 சட்டமன்ற தேர்தலிலும் கோவையில் போட்டியிட்டவர்.
கமலஹாசன் : சிறு வயது முதலே சினிமாவில் நடித்து வருபவர். தமிழகத்தின் பிரச்சனைகள் எதையும் அறிந்து கொள்ளவோ கருத்துச் சொல்வதில் இருந்தோ தவிர்த்து வந்தவர். சினிமாவில் வாய்ப்புகள் குறைந்த பின்னர் இன்னொரு பொழுது போக்கு தனக்கு வேண்டும் என்பதற்காக அரசியலுக்குள் நுழைந்தவர். நுழைந்தவுடனேயே முதல்வர் பதவிக்கு போட்டியிடுபவர். எந்த ஒரு அரசியல் அறிவோ சட்ட அறிவோ மக்களுக்கு உழைத்த அனுபவமோ இல்லாதவர்.
கோவை மக்களுடன் தொடர்பு
வானதி சீனிவாசன் : கோவை மாவட்டத்தில் பிறந்து வளர்ந்து, அப்பகுதி மக்களுக்கு நன்கு அறிமுகமாகி அவர்களுக்காக பல்வேறு திட்டங்களைப் பெற்றுத் தந்தவர். தொடர்ந்து கோவை மாவட்ட மக்களுக்காக உழைத்து வருபவர். கோவை தெற்குத் தொகுதியில் ஒவ்வொரு மூலை முடுக்கையும் அதன் சமூக அமைப்பு, பூகோளம், தேவைகள், தொழில் தேவைகள், மக்களுடைய தேவைகள் அனைத்தையும் நன்கு அறிந்தவர். அனைத்து தகவல்களையும் விரல் நுனியில் வைத்துள்ளவர். மக்களின் பிரச்சனைகள் அனைத்தையும் நன்கு அறிந்து அதற்காக பாடுபட்டு வரும் ஒரு தலைவர் வானதி.
கமலஹாசன் : சினிமா ஷூட்டிங்குகளுக்காக அன்றி கோவைப் பகுதிகளை எட்டி கூடப் பார்த்திராதவர் கமலஹாசன். அப்படி வரும் பொழுதும் ஐந்து நட்சத்திர ஹோட்டல்களில் தங்கி, கருப்புக் கண்ணாடி உள்ள ஏசி கார்களில் வெளியுலகையே பாராமல் சென்று விடுபவர். கோவைப் பகுதியில் எத்தனை ஊர்கள் உள்ளன, எத்தனை கோவில்கள் உள்ளன, எத்தனை புராதன இடங்கள் உள்ளன, நதிகள் உள்ளன, வனங்கள் உள்ளன, என்னவிதமான மக்கள் வாழ்கிறார்கள், அவர்கள் வாழ்வாதாரம் என்ன, அவர்களது சமூகப் பொருளாதார தொழில் ரீதியிலான பிரச்சனைகள் என்ன என்ற எந்தவொரு விஷயத்தையும் கமலஹாசன் அறிந்ததாக தெரியவில்லை.
அரசியல் விவாதங்கள்
வானதி சீனிவாசன் : தமிழிலும் ஆங்கிலத்திலும் சரளமாகப் பேசவும் எழுதவும் தெரிந்தவர். அமைதியாகவும் தெளிவாகவும் எளிமையாகவும் பேசக் கூடிய சிறந்த பேச்சாளர். பத்திரிகைகள், தொலைக்காட்சி மற்றும் பொது விவாதங்களில் அடிக்கடி கலந்து கொண்டு தன் கருத்துக்களைத் தெளிவாகவும், உறுதியாகவும், அழுத்தமாகவும் துணிவாகவும் எடுத்து வைப்பவர். தமிழ் ஆங்கில மீடியாக்களில் தொடர்ந்து பா.ஜ.க-வின் கொள்கைகள் சாதனைகளை மக்களிடம் எடுத்துச் சொல்பவர்.
கமலஹாசன் : தமிழிலும் ஆங்கிலத்திலும் பேசக்கூடியவர். தன்னை அறிவுஜீவி போல காட்டிக்கொள்ளும் எண்ணத்துடன் இவர் பதிவிடும் ட்விட்டர் பதிவுகள் சாமானிய மக்களுக்கு புரியாத வண்ணம் உள்ளது என்ற விமர்சனங்களுக்கு ஆளானவர். பத்திரிக்கையாளர்களின் கேள்விகளுக்கு நேரடியாக பதில் கூற இயலாதவர் என்ற கிசுகிசு பத்திரிக்கையாளர்கள் இடையே அதிகம் உண்டு. ரிபப்ளிக் தொலைக்காட்சியில் ஸ்மிருதி ஈரானி கேட்ட கேள்விகளுக்குப் பதில் சொல்ல முடியாமல் அசடு வழிந்த காணொளி மக்கள் மனதில் இருந்து நீங்கவில்லை.
களத்தில் வீரம்
வானதி சீனிவாசன் : தோல்வியைக் கண்டு அஞ்சி நடுங்கி ஓடி ஒளியாதவர். தன்னை மக்கள் தேர்ந்தெடுக்காவிட்டாலும் கூட தொடர்ந்து அந்தத் தொகுதியின் நலன்களுக்காக தன்னால் முடிந்த வழிகளில் உழைத்து வருபவர். மத்திய அரசின் திட்டங்களைத் தொகுதிக்குள் கொண்டு வர பெரிதும் உறுதுணையாக இருப்பவர். தலமைப் பண்பு உடையவர். அதை பல முறை துணிவாக நிரூபித்தவர். பல போராட்டங்களிலும் கலந்து கொண்டு கடும் எதிர்ப்புகளை மிரட்டல்களையெல்லாம் சவாலாக எதிர் கொண்ட ஒரு வீராங்கனை.
கமலஹாசன் : இவரது விஸ்வரூபம் திரைப்படம் வெளியிடக் கூடாது என்று இவரை மிரட்டிய பொழுது நாட்டை விட்டே ஓடப் போகிறேன் என்று சொல்லி தனது கோழைத்தனத்தை வெளிப்படுத்தியவர். நாளை எம்.எல்.ஏ ஆனால் களத்தில் உள்ள ரவுடிகளை, சமூக விரோதிகளை எப்படி சமாளிப்பார் என்பது கேள்விக்குறியே.
மத்திய மாநில அரசுகளுடன் உறவு
வானதி சீனிவாசன் : கோவை தொழிற்சாலைகள் மற்றும் குறுதொழில்கள் நிறைந்த தொகுதி. அந்தப் பகுதி தொழில் முனைவர்களின், தொழிலாளிகளின் தேவைகளை மத்திய அரசிடம் எடுத்துச் சொல்லி அவர்களுக்குத் தேவையான சலுகைகளை திட்டங்களைப் பெற்றுத் தருபவர். அவ்வப்போது கோவை நகரில் தொழில் முனைவோர்களை பிரதமர், மத்திய அமைச்சர்கள் மற்றும் மாநில அமைச்சர்களை நேரடியாக சந்திக்க வைத்து அவர்களின் குறைகளுக்கு தீர்வு காண தொடர்ந்து உழைப்பவர். மத்தியில் உள்ள மோடி அரசாங்கத்துடனும் மாநிலத்தில் உள்ள எடப்பாட்டியார் அரசாங்கத்திடனும் நெருக்கமாக தொடர்பில் உள்ளவர். எந்த பிரச்சனையாக இருந்தாலும் சம்பந்தப்பட்டவர்களை அணுகி எளிதில் நிரந்தர தீர்வு காண முயல்பவர்.
கமலஹாசன் : கோவையில் உள்ள தொழில் முனைவர்களுக்கோ, விவசாயிகளுக்கோ அல்லது நெசவாளர்களுக்கோ நாளைக்கு ஒரு பிரச்சினை என்றால் அதை மத்திய அரசிடமோ மாநில அரசிடமோ எடுத்து சென்று விளக்கித் தீர்வு காண தகுதி உள்ளவரா என்பது கேள்விக்குறியே. பிரச்சனைகளைப் புரிந்து கொள்ளும் அடிப்படை அறிவுத் திறனோ பிரச்சினைகள் பற்றிய அனுபவப் புரிதல்களோ இல்லாதவர் என்பதே அரசியல் நோக்கர்களின் கருத்தாக உள்ளது.
விவசாயிகளுடன் தொடர்பு
வானதி சீனிவாசன் : விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவர். விவசாயிகள் தொழில் முனைவர்கள் சிறு குறுந்தொழில் செய்பவர்களுடன் தொடர்ந்து பேசியும் அவர்களது பிரச்சனைகளைத் தீர்க்கத் தொடர்ந்து பாடுபட்டும் வருபவர்.
கமலஹாசன் : விவசாயம், தொழில், வியாபாரம் போன்ற என்ற துறைசார்ந்த அறிவும் அனுபவமும் இல்லாதவராக கமலஹாசன் திகழ்கிறார். அவர்களை நேரடியாகச் சந்தித்து உரையாடி அவர்களது பிரச்சனைகளை அறிந்தவராக அறியப்பட்டவர் அல்ல.
எளிதில் அணுகும் தன்மை
வானதி சீனிவாசன் : நம் பக்கத்து வீட்டு சகோதரியைப் போன்ற அடக்கமான அன்பான தோற்றமும் பண்பும் உடையவர். எளிய மக்களைத் தானே தேடிச் சென்று அவர்களது தேவைகளை அறிபவர். மிகவும் எளிமையானவர். எவரும் எந்த நேரத்திலும் எளிதில் அணுகக் கூடியவர். அவர்கள் சொல்வதைக் காது கொடுத்துப் பொறுமையாகக் கேட்டு அதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருபவர்.
கமலஹாசன் : தான் இருந்த சினிமா துறையியினருக்கே அணுகக்கூடியவராக கமலஹாசன் திகழவில்லை. மேல்தட்டு பணக்கார நடிகர். மக்களுடன் நேரடியாகப் பழகாதவர். அதிக பட்சம் தன் ரசிகர் மன்றத்தினரிடம் மட்டும் தொடர்புள்ளவர். மக்களை நட்சத்திர விடுதிகளில் இருந்து கொண்டு பார்ப்பவர். எவரும் எளிதில் அணுக முடியாதவர். உச்சாணிக் கொம்பில் இருந்த நடிகர். தேர்தலுக்காக மட்டுமே கோவைத் தெருக்களில் நடப்பது போல நடிக்கும் ஒரு நடிகர் மட்டுமே. மற்றபடி கோவைத் தொகுதி பற்றி எந்தவொரு அறிவும் புரிதலும் இல்லாதவர்.
கோவையுடன் தொடர்பு
வானதி சீனிவாசன் : கோவை மண்ணில் பிறந்து வளர்ந்து பணிபுரிந்து மக்களுக்காக உழைத்து வரும் அனுபவம் மிக்க சட்டம் படித்தத் திறமையான ஒரு அரசியல்வாதி, மக்களின் சேவகர். கோவை மண்ணின் புத்ரி. மக்கள் அனைவராலும் ஒரு சகோதரியாகப் பாவிக்கப்படுபவர். தான் வெற்றி பெற்றாலும் பெறாவிட்டாலும் தொடர்ந்து கோவை மக்களுக்காக உழைத்து வருபவர். கோவை மக்களின் சேவகர். கூப்பிட்டக் குரலுக்கு ஓடோடி வரக்கூடிய ஒரு பொது நலச் சேவகர். அடிமட்டத்தில் இருந்து உயர்ந்து மக்களின் நலன்களுக்காக உழைத்து வரும் பெண்களுக்கான ஒரு ரோல் மாடலாக இருப்பவர்.
கமலஹாசன் : வாழ்நாள் முழுக்கச் சென்னையில் வசித்தவர். உலக நாடுகளைச் சுற்றுபவர். சாமானிய மக்களிடமிருந்து விலகியே வாழ்ந்தவர். கோவை மண்ணையே இப்பொழுதுதான் தேர்தலுக்காக மட்டுமே சற்று கீழே இறங்கிப் பார்ப்பவர். நாளைக்கு ஜெயித்தாலோ தோற்றாலோ மீண்டும் ஆழ்வார்பேட்டைக்கே போய் விடக் கூடியவர். கோவையின் எந்தத் தொகுதிக்கும் சம்பந்தமில்லாதவர். பாராசூட்டில் இருந்து குதித்தது போல ஹெலிக்காப்டரில் வந்து நேரடியாக தனக்குத் தெரியாத தனக்கு பரிச்சியமில்லாத கோவைத் தொகுதியில் வந்து குதித்தவர். கோவையில் வசிக்காதவர். கோவை மண்ணையும் மக்களையும் அறியாதவர். அடிமட்ட மக்களின் தேவைகள் மற்றும் பிரச்சனைகளை அறியாதவர்.