இந்தியாவை உலகின் வல்லரசு நாடாக மாற்றும் முயற்சியில் மோடி அரசு: வெள்ளை பெட்ரோலியத்தினால் சாத்தியம்!
வெள்ளை பெட்ரோலியம் என்று அழைக்கப்படும் லித்தியம் உற்பத்தியின் காரணமாக இந்தியாவை வல்லரசு நாடாக மாற்ற முடியும்.
By : Bharathi Latha
ஒரு நாடு வல்லரசு நாடாக இருக்க வேண்டும் என்றால் அடிப்படையானது இரண்டு விஷயங்கள்.குறிப்பாக அந்த நாட்டில் இயற்கை வளங்கள் நிறைந்த நாடாக இருக்க வேண்டும். மேலும் அங்கு இருக்கும் மக்கள் தங்களுடைய வாழ்வாதாரத்தை மேம்படுத்திக் கொள்ளும் தனிநபர் வருமானம் ஈட்டும் அளவு அதிகமாக இருக்க வேண்டும். இதை இரண்டையும் வைத்து அந்த நாடு வல்லரசு நாடாக ஆக முடியுமா? என்பதை தீர்மானித்து விடலாம். குறிப்பாக தற்பொழுது வல்லரசு நாடுகளை எடுத்துக் கொண்டால் அமெரிக்கா, பிரிட்டன், சவுதி அரேபியா போன்ற நாடுகள் அதிக இயற்கை வளங்களை கொண்ட நாடாக அல்லது அங்கு இருக்கும் மக்கள் அதிக வருமானம் ஈட்டக்கூடிய நபர்களாக இருப்பார்கள்.
குறிப்பாக ஏதேனும் ஒரு நாட்டில் இல்லாத வளங்களை பிற நாட்டில் அதிகமாக கிடைக்கும் பொழுது அதிகமான வளங்களைக் கொண்ட நாடுகள் ஆதிக்கத்தை செலுத்துகிறது. குறிப்பாக அந்த நாடுகளிடம் மற்ற நாடுகளை கட்டுப்படுத்தும் அதிகாரம் மற்றும் ஆளுமை இருக்கிறது. குறிப்பாக நீங்கள் தற்பொழுது எடுத்துக் கொண்டால் நடந்து கொண்டிருக்கும் உக்ரைன்- ரஷ்யா போரின் மூலமாக பல்வேறு நாடுகள் பாதிக்கப்பட்டு இருக்கிறது. ஏனென்றால் ரஷ்யா அதிகமாக கச்சா எண்ணெய்களை மற்ற நாடுகளுக்கு விற்பனை செய்யும் மிகப்பெரிய இரண்டாவது நாடாக திகழ்கிறது மற்ற நாடுகள் கட்டாயம் ரஷ்யாவிடம் தான் கச்சா எண்ணெய்களை இறக்குமதி செய்ய வேண்டிய ஒரு கட்டாயத்தில் இருப்பதன் காரணமாக ரஷ்யாவிற்கு பல்வேறு ஆதரவுகளும் இருக்கின்றன. ஒரு பக்கம் உக்ரைன் மிகச் சிறிய நாடாக இருந்தாலும், கோதுமை அதிக அளவில் உற்பத்தி செய்யும் நாடாகவே திகழ்கிறது. எனவே இப்படி ஒவ்வொரு நாடுகளும் ஒவ்வொரு இயற்கை வளங்கள் நிறைந்த நாடுகளாக திகழ்கிறது. ஒரு நாடு மற்ற நாடுகளைச் சார்ந்து இருக்க வேண்டிய ஒரு சூழ்நிலையை ஏற்படுத்துகிறது.
தற்பொழுது இந்தியாவின் பக்கம் பார்க்கலாம், நாம் வல்லரசு நாடாக ஆக வேண்டும் என்றால் நம்மிடம் இருக்கும் இயற்கை வளங்களை முழுமையாக நாம் பயன்படுத்த வேண்டும். குறிப்பாக நாம் எதில் அதிகமாக பிற நாடுகளை சார்ந்து இருக்கிறோம்? என்பதை அறிந்து அவற்றை உள்நாட்டிலேயே உற்பத்தி செய்து விநியோகம் செய்ய தெரிந்து கொள்ள வேண்டும். அந்த வகையில் நாம் அதிகமாக வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யும் ஒரு பொருளாகவே கச்சா எண்ணெய் திகழ்கிறது. குறிப்பாக பெட்ரோல், டீசல் போன்றவற்றை பிற நாடுகளில் இருந்து தான் இறக்குமதி செய்து மற்றும் இந்தியாவின் பகுதிகளுக்கு விற்பனை செய்கிறது மத்திய அரசு. எனவே இவற்றைக் குறைக்க வேண்டும் என்றால் பெட்ரோலியம் கச்சா எண்ணெய்க்கு மாற்று பொருள் என்ன? என்பதை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.
பெட்ரோலியம் பொருட்களுக்கு ஒரே மாற்று பொருள் நீங்கள் எலக்ட்ரிக் வாகனங்களை பயன்படுத்துவது தான். மத்திய அரசு குறிப்பாக பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு இதையே பரிந்துரை செய்கிறது. எலக்ட்ரிக் வாகனங்களில் வாங்குவதையும் இங்கு உற்பத்தி செய்வதையும் ஊக்குவிக்கிறது. இந்த எலக்ட்ரிக் வாகனங்கள் செய்வதற்கு முக்கிய பொருளாக லித்தியம் என்ற ஒரு கனிமம் முக்கிய அங்கம் வகிக்கிறது. குறிப்பாக எலக்ட்ரிக் வாகனங்களில் பொருத்தப்படும் பேட்டரிகள் தயாரிப்பதற்கு இந்த லித்தியம் அதிக அளவில் பயன்படுத்தப்படுகிறது. இந்த லித்தியத்தை உலக நாடுகளுக்கு அதிக அளவில் ஏற்றுமதி செய்யும் நாடாக சீனா திகழ்கிறது. இந்தியா இந்த லித்தியத்தை அதிக அளவில் இறக்குமதி செய்ய வேண்டிய ஒரு கட்டாயத்தில் இருக்கிறது. குறிப்பாக சீனாவை சார்ந்திருக்க வேண்டிய ஒரு சூழ்நிலையில் இருந்து இருக்கிறது முன்பு வரை.!
அது என்ன முன்பு வரை என்றுதானே பார்க்கிறீர்கள். அது ஒன்றும் இல்லை தற்பொழுது இந்தியாவிலேயே இந்த லித்தியம் அதிக அளவில் கிடைக்கிறது என்று சொன்னால் நீங்கள் நம்புவீர்களா? உண்மையில் அதுதான்! இந்தியாவில் லித்தியம் என்று கனிமம் அதிக அளவில் குவிந்து கிடக்கிறது. இந்தியாவில் 5.9 M டன் லித்தியம் இருப்பு கண்டுபிடிக்கப்பட்டதன் மூலமாக உலக நாடுகள் பார்வையில் இந்தியா முக்கிய இடத்தில் இருக்கிறது. 150 ஆண்டுகளுக்கு முன்பு கார், பைக், லாரி, பஸ் போன்றவை இல்லாத உலகத்தை கற்பனை செய்து பாருங்கள்! மத்திய கிழக்கு நாடு வளர்ச்சியடையவில்லை ஆனால் பெட்ரோல் வாகனங்கள் வந்தன. மத்திய கிழக்கில் ஏராளமான எண்ணெய் இருப்பு இருப்பதால், அது பணத்தையும் செழிப்பையும் கொண்டு வந்தது, இந்தியா மற்றும் சீனாவில் மிகப்பெரிய இழப்பு ஏற்பட்டது. காரணம், இந்த நாடுகளில் எண்ணெய் இருப்பு இல்லை, எனவே அவர்கள் பெட்ரோல் தேவைக்காக மத்திய கிழக்கை முழுமையாக நம்பியிருக்கிறார்கள். இது அவர்களின் இறக்குமதி பில்களில் அதிகரிப்புக்கு காரணமாகிறது. அமெரிக்க தொழிலதிபர் ஜான் ராக்பெல்லர் 1869 ஆம் ஆண்டு நீண்ட காலத்திற்கு முன்பே எண்ணெயின் முக்கியத்துவத்தை உணர்ந்தவர்.
1973 ஆம் ஆண்டில், அரபு நாடுகள் எண்ணெயை ஆயுதமாகப் பயன்படுத்தி, மேற்குலகுக்குப் பாடம் புகட்ட, எண்ணெய் விலையை 300% உயர்த்தியது. இது பெரும் உலகப் பின்னடைவை ஏற்படுத்தியது. அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஹென்றி கிஸ்ஸிங்கர் பிரச்சினையைத் தீர்த்து, அரபு விதிகளுக்கு பெரும் அதிகாரம் அளித்தார். அதற்கு பதிலாக அரபு நாடுகள் பெட்ரோ டாலர்களில் பரிவர்த்தனைகளை ஆரம்பித்தன. மத்திய கிழக்கு மிகப்பெரிய எண்ணெய் உற்பத்தியாளர் என்றாலும், அவற்றின் இருப்புகளில் பல அமெரிக்காவின் ராக்ஃபெல்லர் குழுவின் கட்டுப்பாட்டில் உள்ளன. ஆனால் இப்போது இந்த அமெரிக்க மத்திய கிழக்கு கூட்டணி விரைவில் புதிய வெள்ளை எண்ணெய் வருவதால் அதன் சக்தியை இழக்கக்கூடும். வெள்ளை எண்ணெய் என்பது லித்தியம் லித்தியம் என்பது உலகின் மிக இலகுவான உலோகம். இது ஹைட்ரஜன் மற்றும் ஹீலியத்திற்கு அடுத்ததாக 3 ஆகும். EV, லேப்டாப், மொபைலில் பயன்படுத்தப்படும் ரிச்சார்ஜபிள் பேட்டரிகளில் லித்தியம் பயன்படுத்தப்படுகிறது. பெட்ரோல் வாகனங்களை விட எலக்ட்ரானிக் வாகனங்கள் பல நன்மைகளைக் கொண்டுள்ளது. அவை அதிக ஆற்றல் திறன் கொண்டவை மற்றும் நச்சு வாயுக்களை வெளியிடுவதில்லை. இதன் காரணமாக பல நாடுகள் EV நோக்கி நகர்கின்றன. EVக்கு பெட்ரோல் அல்லது டீசல் எதுவும் தேவையில்லை. அவை லித்தியம் பேட்டரிகளால் இயக்கப்படுகின்றன. லித்தியம் தற்போது எண்ணெய் மற்றும் பெட்ரோலை மாற்றுகிறது. புவிசார் அரசியல் என்பது நேரம் மற்றும் எதிர்காலம் பற்றியது. சீனா எதிர்காலத்தில் லித்தியத்தின் முக்கியத்துவத்தை உணர்ந்தது.
லித்தியம் மிகவும் வினைத்திறன் உடையது, எனவே அது சுதந்திரமாக காணப்படவில்லை. எனவே லித்தியம் இருப்பில் இருந்து லித்தியத்தைப் பெறுவதற்கு மிகப்பெரிய உற்பத்தி வசதி தேவைப்படுகிறது மற்றும் இங்கு சீனா மேலாதிக்கத்தைக் கொண்டுள்ளது. சமீபத்தில் சீனா பொலிவியாவுடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. உலகளவில் ஐந்தாவது பெரிய லித்தியம் உற்பத்தி செய்யும் நாடாக சீனா இருந்தாலும், சீன நிறுவனங்கள் உலகளாவிய லித்தியம் உற்பத்தியில் பாதியையும், Li பேட்டரி உற்பத்தியில் 70% க்கும் அதிகமாகவும் கட்டுப்படுத்துகின்றன. சீனாவின் Tianqi Lithium சிலி சுரங்க நிறுவனமான Sociedad Química y Minera இல் 2வது பெரிய பங்குதாரராக இருக்கிறார்கள்.
மேற்கு ஆஸ்திரேலியாவில் உள்ள கிரீன்புஷ்ஸில் உள்ள உலகின் மிகப்பெரிய ஹார்ட்-ராக் லித்தியம் சுரங்கத்தில் இது 51% பங்குகளைக் கொண்டுள்ளது. Ganfeng Lithium Co. 2020 இல் வடக்கு அர்ஜென்டினாவில் Lithium Americas Corp இன் திட்டத்தில் 51 சதவீத பங்கையும் வாங்கியது. இந்த இரண்டு நிறுவனங்களும் உலக சந்தைப் பங்கில் 30% பங்குகளைக் கொண்டுள்ளன. அயர்லாந்து, கனடா மற்றும் ஜிம்பாப்வே ஆகியவை சீன அரசுக்கு சொந்தமான லித்தியம் சுரங்க நிறுவனங்களை நடத்துகின்றன. சீனா லித்தியம் தொடர்பான சொத்துக்களை தீவிரமாக வாங்குவதன் மூலம் சந்தையில் ஆதிக்கம் செலுத்துகிறது. எலக்ட்ரிக் வாகனங்களுக்கு தேவைப்படும் மூலப் பொருட்களை இந்தியா சீனாவிடம் இருந்துதான் தற்போது வரை இறக்குமதி செய்து வருகின்றது. ஆனால் உண்மையில் இந்தியாவில் லித்தியம் அதிக அளவில் கிடக்கிறது. சமீபத்தில் கூட மின்சார வாகனங்கள் மற்றும் சூரிய மின் தகடுகள் தயாரிப்பதில் பயன்படும் லித்தியம் கற்கள் காஷ்மீரில் ரியாசி மாவட்டத்தில் வைஷ்ணவி தேவி கோவில் மலை அடிவாரத்தில் பெருமளவு புதைந்து கிடப்பது தற்பொழுது கண்டுபிடிக்கப்பட்டு இருக்கிறது. இது லித்தியம் இருப்பில் இந்தியாவை 3வது இடத்தில் கொண்டு வந்துள்ளது.
Li பேட்டரியின் பயன்பாடு அடுத்த 7 ஆண்டுகளில் 100 மடங்கு அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப் படுகிறது. Li பேட்டரி தவிர, இந்தியாவும் சோடியம் பேட்டரியை உருவாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது, இருப்பினும் அதன் ஆரம்ப நிலை உள்ளது. இந்தியாவில் சோடியம் அதிகம் உள்ளது. NGO போன்ற வெளிநாட்டு நிறுவனங்கள் இந்தியாவில் இருக்கும் இந்த லித்தியம் வளங்களை வெளிக்கொண்டு வராமல் தடுப்பதற்கு பல்வேறு நடவடிக்கைகளையும் செய்து வருகிறார்கள். அதனால்தான், வலிமையான, நேர்மையான, தேசியவாத பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் குறைந்தபட்சம் 10 ஆண்டுகளுக்கு மத்தியில் ஆட்சியமைக்க வேண்டும். இதனால் இந்தியாவை இந்த லித்தியம் இருப்பின் மூலம் உலகின் வல்லரசாக மாற்ற முடியும்..!
Input & Image courtesy: Twitter Source