Kathir News
Begin typing your search above and press return to search.

சட்டவிரோத மதமாற்றங்களுக்கு 19.88 கோடி - 'இம்மானுவேல் மினிஸ்ட்ரீஸ் கல்கத்தா' மீது LRO புகார்! @Legallro

சட்டவிரோத மதமாற்றங்களுக்கு 19.88 கோடி - இம்மானுவேல் மினிஸ்ட்ரீஸ் கல்கத்தா மீது LRO புகார்! @Legallro

Saffron MomBy : Saffron Mom

  |  23 March 2021 6:43 AM GMT

இந்தியாவில் உள்ள தங்கள் கூட்டாளிகளின் உதவியுடன் வெறித்தனமாக செயல்படும் சுவிசேஷ மிஷனரிகளின் (Evangelist Missionaries) உலகளாவிய நெட்வொர்க், மோசடி, கட்டாயப்படுத்துதல், கவர்ச்சி மற்றும் வற்புறுத்தல் மூலம் கிறிஸ்தவத்திற்கு மக்களை சட்டவிரோதமாக மாற்றுவதற்கு வெளிநாட்டு நிதிகளை வெட்கமின்றி பயன்படுத்துகிறது.

FCRA விதிமீறல்கள் மற்றும் வெளிநாட்டு நிதி சட்டவிரோதமாகப் பயன்படுத்தப்படுவதைக் கண்காணிக்கும் சட்ட உரிமைகள் ஆய்வகம் (LRO), கொல்கத்தாவைச் சேர்ந்த 'சட்டவிரோத மதமாற்றங்களுக்கு 19.88 கோடி - 'இம்மானுவேல் மினிஸ்ட்ரீஸ் கல்கத்தா' மீது LRO புகார்! @Legallro' (EMC) என்ற அமைப்பு டியர்பண்ட் (Tearfund) மற்றும் 40க்கும் மேற்பட்ட வெளிநாட்டு நன்கொடையாளர்களிடமிருந்து 19.88 கோடி ரூபாயை சட்டவிரோதமான மதமாற்று வேலைகளுக்காக பெற்றுள்ளது என குற்றம்சாட்டி உள்ளது.

1971இல் விஜயன் மற்றும் பிரமிளா பாவமணி என்ற தம்பதியினரால், 'கல்கத்தா சமாரிட்டன்ஸ்' என்ற அமைப்பு உருவாக்கப்பட்டது. இதே தம்பதியினர் 1978இல் 'அருணோதய் மிட்வே ஹோம்'என்ற அமைப்பையும், 'கல்கத்தா இம்மானுவேல் ஸ்கூல்' என்ற ஒன்றையும் திறந்தனர். 1985ல் 'இமானுவேல் மினிஸ்ட்ரீஸ் கல்கத்தா' (EMC) என்ற அமைப்பை மேற்கண்ட அமைப்புகளின் மொத்த வடிவமாக உருவாக்கினார்கள்.


இமானுவேல் மினிஸ்ட்ரீஸ் கல்கத்தா மேற்கண்ட அமைப்புகளோடு நெருக்கமாக செயல்படுகிறது. இந்த இமானுவேல் மினிஸ்ட்ரீஸ் கல்கத்தா, "Emmanuel Ministries Calcutta: An Indian Urban Mission Response to the City" என்ற பீனா நாதனின் கட்டுரையில் இடம் பெற்றுள்ளது.


பிரபல கிறிஸ்தவ பாதிரியாரான ரோஜர் ஹெட்லேன்ட்டின் "THE WITNESS OF NEW CHRISTIAN MOVEMENTS IN INDIA" கட்டுரையிலும் இடம்பெற்றுள்ளது.

இதற்கு முன்னரே LRO புகார் அளித்துள்ள மற்றோடு சுவிசேஷ அமைப்பான "ஆவாஸ்- தி வாய்ஸ் ஆப் தி வாய்ஸ்லெஸ்" என்ற அமைப்பின் முக்கியமான செயற்பாட்டாளர், கல்கத்தா சமரிடன்ஸ் நடத்திய மற்றொரு ஆய்வில் பங்கேற்றனர்.

"யூத் வித் எ மிஷன்" என்ற மற்றொரு தீவிர மதமாற்று எவாஞ்சலிஸ்ட் அமைப்பின் நிறுவனர்கள் மகேஷ் நாதன், பீனா நாதன் தம்பதியினரும், பாவமணி தம்பதியினரும் முன் நாளிலிருந்தே கூட்டாளிகள் போல் தெரிகிறது. 35 ஆண்டுகளாக செயல்படும் இந்த NGOவின் பிரார்த்தனைகளில் 'இம்மானுவேல் மினிஸ்ட்ரீஸ் கல்கத்தா' வின் பெயரும் உள்ளது.


இமானுவேல் மினிஸ்ட்ரிஸ் அமைப்பின் நிர்வாக வாரியம் பல NGOக்களின் தலைவர்களை உறுப்பினர்களாகக் கொண்டுள்ளது. இதில் முக்கியமானவை Jatiyo Khrishtiyo Prochar Samity (JKPS)' என்ற அமைப்பும் அதன் தலைவர் பின்னி தாமஸ் மற்றும் அசோக் ஆண்ட்ரூஸ் ஆகியோரும் ஆவர். மற்றொரு சுவிசேஷ அமைப்பான "கிடியன் இன்டர்நேஷனல்" தலைவரான சுனில் ராயும் இதில் மற்றொரு உறுப்பினராக இருக்கிறார்.

இதன் ஆலோசக வாரியத்தில் போலீஸ் டிஜிபி தம்பி என்பவரும் ஜியாலஜிக்கல் சர்வே ஆப் இந்தியாவில் இருந்து ஓய்வுபெற்ற டாக்டர் ஜே கே ஜோனாதன் என்பவரும் இருக்கின்றார்கள். இந்த பாவமணி தம்பதியினர் மதர் தெரசாவுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்ததாக கூறப்படுகிறது.


1974 இல் ஸ்விட்சர்லாந்தில் நடந்த உலக சுவிசேஷ ஒரு மாநாட்டில் இந்த இமானுவேல் மினிஸ்ட்ரிஸ் கொல்கத்தா மற்றும் விஜயன் பாவமணியையும் பற்றி கருத்துக்கள் கூறுகிறது.கிறிஸ்தவத்தை பரப்புவதில் எந்தளவு இது முன்னணியில் இருக்கிறது என பாராட்டு தெரிவிக்கிறது.


உள்துறை அமைச்சகத்திற்கு LRO அளித்த புகார் தீவிரமாக எடுத்துக் கொள்ளப்பட்டு, தீவிரமான FCRA மீறல்களை மட்டுமல்லாமல், தேசிய பாதுகாப்பு பாதிப்புகளையும் பற்றி அக்கறையுடன் விசாரிக்க வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Next Story
கதிர் தொகுப்பு
Trending News