Kathir News
Begin typing your search above and press return to search.

இந்திய கல்வி முறை: மெக்காலே மிஷனரி பள்ளிகள் ஏற்படுத்திய மாற்றம்!

இந்திய கல்வி முறையை முற்றிலுமாக மெக்காலேயின் தொடர்ச்சியான மிஷனரி பள்ளிகள் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.

இந்திய கல்வி முறை: மெக்காலே மிஷனரி பள்ளிகள் ஏற்படுத்திய  மாற்றம்!

Bharathi LathaBy : Bharathi Latha

  |  10 Feb 2022 12:30 AM GMT

தற்போது இருக்கின்ற காலகட்டங்களில் மனிதனுடைய வாழ்வில் இன்றியமையாத தேவைகளில் கல்வியும் ஒன்றாகிவிட்டது. பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே கல்வியில் தலைசிறந்து விளங்கி உலகுக்கே அறிவு ஒளி காட்டிய தேசம் இந்தியா. நாளந்தா, தட்சசீலம் போன்ற பல்கலைக்கழகங்களில் லட்சக்கணக்கான வெளிநாட்டு மாணவர்கள் தங்கி தங்கள் அறிவாற்றலை வளர்த்துக் கொண்டு சென்றதற்கு ஆதாரமாக வரலாறே விளங்குகிறது. அத்தகைய புகழ்மிக்க இந்திய தேசத்தின் நவீன கால கல்வித் துறை குறிப்பாக ஆங்கிலேயர்கள் ஆதிக்கத்திற்குப் பிறகு ஏற்பட்ட இந்திய கல்வி முறையில் பெரிய மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன.


குருகுலக் கல்வியும் பாடசாலைகளும் பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனி நம்முடைய தேசத்தில் ஆதிக்கம் பெறுவதற்கு முன்பு வரையிலும், நம் தேசத்தில் பாடசாலைகள், குருக்கள் மூலம் கல்வி கொடுக்கும் முறையே பிரதானமாக இருந்தது. அந்தப் பாடசாலைகள் பெரும்பாலும் ஒரே ஆசிரியரைக் கொண்டு, பல்வேறு வயதுடைய மாணவர்கள் ஒன்றாக அமர்ந்து கல்வி கற்கும் வழிமுறையைப் பின்பற்றின. மேலும் மன்னர்கள், பிரபுக்கள், அரசு அதிகாரிகள் வீட்டுக் குழந்தைகள் அவரவர் வீடுகளுக்கே ஆசிரியரை வரவழைத்துப் பாடம் கற்றுக் கொண்டனர். தமிழகத்தில் அக்காலத்தில் 700க்கும் மேற்பட்ட பாடசாலைகள் இருந்ததாக 1797ன் கிழக்கிந்திய கம்பெனிக் குறிப்பேடு தெரிவிக்கிறது. ஆனால் ஆங்கிலேய ஆட்சி ஏற்பட்ட பிறகு இத்தகைய பாடசாலைகள் மெல்ல மெல்ல குறையத் தொடங்கியதால் மேலும் ஆங்கிலேய கலாச்சாரம் இந்தியாவில் ஊடுருவ ஆரம்பித்தது.


இதன் விளைவாக கிறிஸ்துவ மதத்தை பரப்புவதற்கு கட்டப்பட்ட தேவாலயங்கள் மதமாற்றத்தை மட்டுமின்றி அவை ஏற்பட்ட இடங்களை சுற்றி நூலகம், பள்ளி என கட்ட வழி ஏற்பட்டது. இந்தக் கல்வியானது மதத்திணிப்பு போல் இருந்ததால் இந்தியர்களிடையே எதிர்ப்பு எழுந்தது. 1834-ல் மெக்காலே இந்தியாவிற்கு வருகை புரிந்தார். அப்போது இந்தியாவின் கவர்னர் ஜெனரலாக இருந்த பென்டிங் பிரபு, மெக்காலேவை பொது போதனை துறை (Public instruction) எனும் கல்வித் துறையின் தலைவராக நியமனம் செய்தார். நான்கு மாதங்கள் இந்தியாவின் கல்வி முறையை ஆய்வு செய்த மெக்காலே, MACAULAY'S MINUTES(மெக்காலே குறிப்புகள்) எனும் அறிக்கையைத் தாக்கல் செய்தார். மெக்காலேவின் நோக்கம் "வர்ணாஸ்ரம தர்மத்தை" கடைப்பிடித்து வந்த இந்திய பாரம்பரியக் கல்வி முறையை மாற்றி அனைவருக்கும் கல்வி வழங்குவதாக இருந்தது.


இவருடைய இந்த அறிக்கை காரணமாக இந்தியாவில் பெரும்பாலான மிஷனரி பள்ளிகள் ஆரம்பிக்கக் தொடங்கினர். அன்றைய காலகட்டங்களில் பலரும் ஆங்கிலம் கற்றுக்கொள்ள வேண்டும் என்றும் இந்த பள்ளிகளில் சேர்ந்து படிக்க ஆரம்பித்தனர். இந்தியாவில் இன்றும் செயல்படும் மிஷனரிகள் தூண்டிவிடப்பட்ட மற்றும் நிறுவப்பட்ட கல்வி முறை எவ்வாறு ஒவ்வொரு இந்துவையும் தனது தர்மத்தை புறக்கணிக்கக் கற்றுக்கொடுக்கிறது என்பதைப் பள்ளிகளில் கற்பிக்க ஆரம்பித்தன. நமது தாய்நாடான இந்தியாவானது கல்வித் திறன், அறிவியல் வளர்ச்சி, செம்மொழியான தமிழ் மற்றும் தெய்வீக மொழியான சமஸ்கிருதத்தில் தலைசிறந்த இலக்கியங்களை வளர்த்தெடுத்த பெரும் பாரம்பரியத்தைக் கொண்டிருந்தது.


ஆனால் பிரிட்டிஷ் அரசியல் அதிகாரம் நம்மை ஆளத் தொடங்கியபோது, ​​இவை அனைத்தும் இரண்டாம் பட்சமாக ஆக்கப்பட்டன. ஆங்கில மொழியும் பிரிட்டிஷ் மாதிரியும் நமது ஊடகமாகவும் கல்வி முறையாகவும் மாறியது. மிஷனரிகள் ஐரோப்பிய மாதிரியில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளை நிறுவினர் மற்றும் குருகுலங்கள் கிட்டத்தட்ட மறைந்துவிட்டன. மிஷனரி கல்வியின் இரண்டாவது எதிர்மறையான தாக்கம் என்னவென்றால், பிரிட்டிஷ் மிஷனரிகள் ஆங்கிலக் கல்வியைப் பயன்படுத்தி இந்தியாவில் கிறிஸ்தவத்தைப் பரப்பினர் மிஷனரி நிதியுதவி கல்வியின் நோக்கம் மற்றும் அதன் உள்ளார்ந்த ஆபத்துகள் உங்களுக்கு புரிகிறதா? இந்துக்கள் தங்கள் சொந்த தர்மத்தை வெறுக்கக் கற்பிக்கும் மிஷனரிகளின் உத்தி மிகவும் நுட்பமானது என்று மிஷன் காளி அமைப்பு செய்தியை வெளியிட்டுள்ளது.

Input & Image courtesy: Missionkaali

Next Story
கதிர் தொகுப்பு
Trending News