Kathir News
Begin typing your search above and press return to search.

வசூலைக் குவிக்கும் மாஸ்டர் பட தயாரிப்பாளரின் பள்ளி! பெற்றோர் வேதனை!

வசூலைக் குவிக்கும் மாஸ்டர் பட தயாரிப்பாளரின் பள்ளி! பெற்றோர் வேதனை!

வசூலைக் குவிக்கும் மாஸ்டர் பட தயாரிப்பாளரின் பள்ளி! பெற்றோர் வேதனை!

Shiva VBy : Shiva V

  |  23 Dec 2020 3:37 PM GMT

சென்னை வேளச்சேரியில் இயங்கி வரும் செயின்ட் பிரிட்டோ அகாடமி பள்ளியில் கட்டணக் கொள்ளை நடப்பதாக குற்றம் சாட்டி பெற்றோர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த பள்ளி, நடிகர் விஜயின் நெருங்கிய உறவினரான சேவியர் பிரிட்டோ என்பவருக்கு சொந்தமானது என்பதால் சமூக ஊடகங்களில் இந்த பிரச்சினை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா சூழ்நிலையால் இந்த வருடம் முதல் இரண்டு மாதங்களைத் தவிர்த்து பள்ளிகள் இயங்கவே இல்லை என்ற நிலையில், ஆன்லைன் வகுப்புக்கு கட்டணம் செலுத்த வேண்டும் என்று கூறி‌ LKG மாணவர்களுக்கு ₹67,000 கட்டணம் வசூலித்திருக்கின்றனர். SMR கல்வி அறக்கட்டளை என்ற பெயரில் சேவை நிறுவனம் நடத்தி வரும் சேவியர் பிரிட்டோ அதன் மூலம் சேவை மனப்பான்மையுடன் கல்வி வழங்கும் நோக்கில் இந்த பள்ளியை நடத்துவதாகக் கூறி வருகிறார்.

ஆனால் அதற்கு மாறாக, பள்ளிகளே இயங்காத போதும் வழக்கமாக வாங்கும் அதே கட்டணத்தைக் கட்டுமாறு பள்ளி நிர்வாகம் பெற்றோரை வற்புறுத்தி இருக்கிறது. இது போக 10 மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கு சிறப்பு வகுப்பு என்ற பெயரில் மேலதிக கட்டணம் வசூலித்துள்ளனர். வசதியான பெற்றோர் கட்டணத்தை செலுத்தி விட்ட நிலையில், நடுத்தர வர்க்கத்தினர் கொரோனா ஊரடங்கால் வேலை இழந்ததாலும், குறைவான வருவாயாலும் கட்டணம் செலுத்த இயலாமல் தவித்துள்னர்.

அவர்களை கட்டணம் செலுத்துமாறு வற்புறுத்தியுள்ளனர். அவ்வாறு செலுத்த முடியாதவர்களது குழந்தைகளுக்கு ஆன்லைன் வகுப்புகளை நிறுத்தி உள்ளனர். இதையடுத்து பாதிக்கப்பட்ட குழந்தைகளின் பெற்றோர் பள்ளி முன்பு திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் இந்த விஷயம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இது குறித்து பள்ளி நிர்வாகம் காவல் துறைக்கு தகவல் தெரிவிக்க, பெற்றோர் பள்ளி மீது முறையாக புகார் அளித்துள்ளனர்‌.

நான்காம் வகுப்பு மாணவர் ஒருவருக்கு 3 பருவங்களுக்கான கட்டணம் என்று சிறப்புக் கட்டணம், பாடப்புத்தகங்கள், நோட்டுப் புத்தகங்கள், சீருடை, மற்ற பிற கட்டணங்கள் என ₹90,000 வசூலித்துள்ளனர். ஒரு புறம் பள்ளி அனுப்பிய கட்டண விவரத்தை பெற்றோர் ஆதாரமாகக் காட்ட, பள்ளி நிர்வாகமோ 50% சலுகை வழங்கியும் கட்டணத்தை செலுத்தாததால் தான் ஆன்லைன் வகுப்புகள் நிறுத்தப்பட்டதாகக் காரணம் கூறியுள்ளது.

பள்ளி தாளாளர் சேவியர் பிரிட்டோ பின்வரும் நிறுவனங்களில் இயக்குநராக பதவி வகிக்கிறார்.

  • ESTHELL RECLAIM PRIVATE LIMITED

  • INDEV IN TIME AIR CARGO SERVICES PRIVATE LIMITED

  • KERRY INDEV LOGISTICS PRIVATE LIMITED

  • PKT INDEV GLOBAL LOGISTICS PRIVATELIMITED

  • INFINITY ESTHELL RESTAURANTS LLP

  • B.S.V.SHIPPING AGENCIES PRIVATE LIMITED

  • INDEV SHIPPING SERVICES (TUTICORIN) PRIVATE LIMITED

இவை அனைத்தும் பல கோடி மதிப்பிலான வணிகத்தில் ஈடுபடும் நிறுவனங்கள். இதில் சென்னையில் செயல்படும் Kerry Indev Logistics நிறுவனத்துக்கு சொந்தமாக கோடிக்கணக்கில் விலை போகும் கிழக்கு கடற்கரைச் சாலையில் 30 ஏக்கர் பரப்பளவில் 85 ஆடம்பர சொகுசு பங்களாக்கள் உள்ளன. இது போக St. Britto’s Matriculation Higher Secondary School மற்றும் St. Britto’s College of Logistics என்ற இரு பள்ளி, கல்லூரிகளையும் நடத்தி வருகிறார்.

நடிகர் விஜயின் தந்தையும் இயக்குநருமான எஸ்.ஏ.சந்திரசேகருடைய சகோதரியின் கணவரான சேவியர் பிரிட்டோ தான் விஜய் நடிப்பில் வெளிவர இருக்கும் மாஸ்டர் திரைப்படத்தை தயாரித்திருக்கிறார். வரி ஏய்ப்பு செய்ததாக இவரது அலுவலகங்களில் சமீபத்தில் வருமான வரித்துறை சோதனை நடத்தியது. இவர் நடிகர் விஜயின் பினாமியாக செயல்படுவதாக குற்றம் சாட்டப்படுகிறது.

சேவியர் முன்பு சென்னை லயோலா கல்லூரியில் பேராசிரியராகப் பணியாற்றினார். இவ்வளவு சொத்துக்கள் இருந்தும், ஆசிரியப் பணியாற்றிய அனுபவம் இருந்தும், சேவைக்காக பள்ளி நடத்துவதாககக் கூறிவிட்டு கட்டணக் கொள்ளை அடிப்பது பெற்றோரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அதோடு பள்ளிக் குழந்தைகளின் கல்வியை பாழாக்கும் விதமாக ஆன்லைன் வகுப்புகளில் கலந்து கொள்ள விடாமல் செய்தது, வியாபார நோக்கத்தில் மட்டுமே சேவியர் பிரிட்டோவும் அவரது அறக்கட்டளையும் இயங்குகின்றன என்பதை வெளிப்படுத்தி இருக்கிறது என்று மக்கள் விமர்சித்து வருகின்றனர்.

சேவியர் பிரிட்டோவின் சகோதரர் சேவியர் அல்போன்சும் லாயோலா கல்லூரியில் பணிபுரிந்தவர். அங்கு முன்னாள் மாணவர்கள் சங்கத்தின் இயக்குநராக இருந்த அல்போன்ஸ், மேரி ராஜசேகரன் என்ற பணியாளரை பாலியல் துன்புறுத்தலுக்கு உட்படுத்தியதாக அவர் மீது சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு நடப்பது குறிப்பிடத்தக்கது.


Source

https://www.zaubacorp.com/director/XAVIER-BRITTO-SWAMIKANNU/00767286

https://thecommunemag.com/masters-mega-vasool-school-run-by-actor-vijays-uncle-and-master-film-producer-xavier-britto-charge-exorbitant-fees-parents-protest/

http://kerryindev.com/management/

Next Story
கதிர் தொகுப்பு
Trending News