Kathir News
Begin typing your search above and press return to search.

தமிழக ஊடகங்களின் தலைமை பொறுப்பில் இருக்கிறவர்கள் மதமாற்றும் ஏஜென்டுகளின் கைக்கூலிகளா? யூடியுபர் சொல்வது என்ன?

தமிழகத்தில் உள்ள ஊடகங்களின் தலைமை பொறுப்பில் வசிக்கின்ற முக்கால்வாசி பேர் மதமாற்ற ஏஜென்டுகளின் கைக்கூலிகள் என்று பிரபல யூடிபர் பிலிப்ஸ் பேசிய வீடியோ வெளியாகியுள்ளது.

தமிழக ஊடகங்களின் தலைமை பொறுப்பில் இருக்கிறவர்கள் மதமாற்றும் ஏஜென்டுகளின் கைக்கூலிகளா? யூடியுபர் சொல்வது என்ன?
X

ThangaveluBy : Thangavelu

  |  7 Nov 2021 11:42 AM GMT

தமிழகத்தில் உள்ள ஊடகங்களின் தலைமை பொறுப்பில் வசிக்கின்ற முக்கால்வாசி பேர் மதமாற்ற ஏஜென்டுகளின் கைக்கூலிகள் என்று பிரபல யூடிபர் பிலிப்ஸ் பேசிய வீடியோ வெளியாகியுள்ளது.

இந்தியாவில் சமீபகாலமாக மதமாற்றும் வேலைகள் நடைபெற்று வருகிறது. வறுமையில் உள்ளவர்களை கண்டறிந்து அவர்களுக்கு பணத்தை கொடுத்தும் மதமாற்றும் வேலைகள் நடைபெற்று வருகிறது. மத்திய அரசு மதமாற்றத்திற்கு தடை சட்டம் கொண்டு வந்தாலும் ரகசியமாகவும், வெளிப்படையாகவும் பல இடங்களில் நடைபெற்று வருகிறது.


அதிலும் குறிப்பாக தமிழகத்தில் அதிகளவு மதமாற்றும் வேலைகள் நடைபெறுகிறது. இதற்கு முதலில் ஊடகங்களில் பணிபுரிபவர்களே முன்னின்று நடத்துபவர்களாக இருப்பது வேதனையாக உள்ளது. இந்து மத நம்பிக்கைகளை இல்லை என்ற வாதங்களை முன்வைப்பது. மற்றும் இந்து பண்டிகையின்போது உண்மையான சம்பவங்களை மறைத்து பொய்யான தகவல்களை மக்களிடம் கொண்டு செல்லும் வேலைகளில் ஊடகங்களில் பணியாற்றுபவர்கள் ஈடுபடுகின்றனர்.


குறிப்பாக தமிழக ஊடகங்களில் பணிபுரிபவர்கள் இந்து மத நம்பிக்கையை சீர்குலைக்கும் விதமாக பல நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர். அதற்கு திக, திமுக போன்ற கட்சிகள் வெளிப்படையாக ஆதரவுகளை தருகிறது. இந்து பண்டிகை வந்தால் தேவையில்லாத கருத்துக்களை பதிவிடுவது வாடிக்கையாக மதமாற்றும் ஊடகவியாலர்கள் செய்து வருகின்றனர்.

பெயரளவில் ஊடகவியாளர்கள் என்று சொல்லிக்கொண்டு, மற்றொரு புறம் மதம்மாற்றும் கும்பல்களுக்கு வேலை செய்கின்றனர். இதற்காக இந்தியா முழுவதும் மதமாற்றும் கிறிஸ்தவ அமைப்பு ஆட்களை தயார் செய்து வைத்துள்ளது. இது போன்றவர்களை வைத்து எளிதாக இந்துமத நம்பிக்கையை சீர்குலைக்க முடியும் என்பது கிறிஸ்தவ அமைப்பு நன்றாக தெரிந்து வைத்துள்ளது. இதற்காகத்தான் மதமாற்றும் கும்பல்கள் முன்னணி ஊடகங்களில் பணிபுரிபவர்களை தங்களின் கட்டுப்பாட்டில் வைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே பலர் மதமாற்றும் வேலைகளில் ஈடுபடுவதற்காக பிரத்யேகமாக பயிற்சியும் எடுத்து வருவதாக யூடிபர் பிலிக்ஸ் கூறியுள்ளார். ஒரு பேட்டி ஒன்றில் அவர் கூறும்போது, இந்தியாவில் நாங்கள் ஒரு இயக்கமாக செயல்பட்டு வருகின்றோம். அதிலும் பிரபல தனியார் செய்தி நிறுவனத்தின் தலைமை பொறுப்பில் இருக்கும் கார்த்திகை செல்வன் கூட ஒரு முன்னாள் போராளி ஆவார். போராளி என்பது (Activist) குறிப்பிடத்தக்கது. இது போன்றவர்கள் மறைமுகமாகவும், நேரடியாகவும் மதமாற்றும் முயற்சிகளுக்கு உறுதுணையாக இருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது.

இது தொடர்பாக அகில உலக ஆன்மீக இந்துமத கட்சி தலைவர் தனது ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது: ஒரு வழியா உண்மையை ஒத்துக்கிட்டானுக... இதைத்தான் நான். ஆரம்பத்துல இருந்து சொல்லி வருகிறேன்.. தமிழக மீடியால தலைமை பொறுப்புல இருக்குற முக்காவாசி பேரு மதமாற்ற ஏஜென்டுகளின் கைக்கூலிகள் தான்.. இவ்வாறு அவர் தனது ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

Source,Image Courtesy:Twitter


Next Story
கதிர் தொகுப்பு
Trending News