Kathir News
Begin typing your search above and press return to search.

விவசாய விலைபொருளுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை உயர்வு - மோடி அரசின் விவசாயிகளுக்கான தீபாவளி போனஸ்

விவசாய விலைபொருளுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை உயர்த்தி மத்திய அமைச்சரவை அதிரடி ஒப்புதல் அறிவித்துள்ளது.

விவசாய விலைபொருளுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை உயர்வு - மோடி அரசின் விவசாயிகளுக்கான தீபாவளி போனஸ்

Mohan RajBy : Mohan Raj

  |  21 Oct 2022 1:39 PM GMT

விவசாய விலைபொருளுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை உயர்த்தி மத்திய அமைச்சரவை அதிரடி ஒப்புதல் அறிவித்துள்ளது.

ரபி பருவத்தில் விளைவிக்கப்படும் பயிர்களுக்கான எம்.எஸ்.பி எனப்படும் குறைந்தபட்ச ஆதரவு விலையை உயர்த்துவதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. ரபி மற்றும் கரீப் என இரண்டு வேளாண் பருவ காலங்கள் உள்ளன. குளிர்காலத்தில் பயிரிடப்படும் ரவி பருவத்திற்கான விதை நடும் பணி அக்டோபரில் துவங்கும் இந்த இரண்டு பருவங்களிலும் பயிரிடப்படும் உணவுப் பொருட்களை விவசாயிகளிடமிருந்து மத்திய அரசு கொள்முதல் செய்யும் இதற்காக எம்.எஸ்.பி எனப்படும் குறைந்தபட்ச ஆதரவுகளை நிர்ணயிக்கப்படும்.

மொத்தம் 23 வகையான உணவுப் பொருள்களுக்கு எம்.எஸ்.பி நிர்ணயிக்கப்படுகிறது வரும் 2023-24 ரபி சந்தை காலத்தில் பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை உயர்த்தி தர பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இறுதினங்கள் முன் அக்டோபர் 18'ம் தேதி நடந்த அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் தரப்பட்டுள்ளது.

அமைச்சரவை முடிவு குறித்து மத்திய செய்தி ஒளிபரப்பு துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் கூறியதாவது, 'ரபி பருவ காலத்தில் கோதுமை மற்றும் கடுகு அதிகம் பயிரிடப்படும் இந்த பருவ காலத்தில் தங்கள் பயிரிடும் உணவுப் பொருட்களை உரிய விலை விவசாயிகளுக்கு கிடைப்பதை உறுதி செய்யும் வகையில் எம்.எஸ்.பி உயர்த்தப்பட்டுள்ளது தேசிய அளவில் மொத்த பயிர் உற்பத்தி கணிப்பின் அடிப்படையில் அதற்கு ஆகும் உற்பத்தி செலவைவிட 1.5 மடங்கு அதிகமாக எம்.எஸ்.பி தரப்படும் என 2018-19 பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது.

இதன்படி விவசாயிகளுக்கு உற்பத்தி செலவைவிட அதிக வருவாய் கிடைக்கும் வகையில் எம்.எஸ்.பி நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. மேலும் ரவி பருவ காலத்தில் அதிகபட்சமாக மசூர் பருப்புக்கு குவிண்டாலுக்கு 500 ரூபாய் எம்.எஸ்.பி உயர்த்தப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து கடுகு குவிண்டாலுக்கு 400 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. எண்ணெய் வித்துக்கு குவிண்டாலுக்கு 29 ரூபாய், கோதுமைக்கு குவின்டானுக்கு 110 ரூபாயும், கடலைப்பருப்பு, பார்லிக்கு குவிண்டாலுக்கு 100 ரூபாயும் உயர்த்தப்பட்டுள்ளன' என அமைச்சரவை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது என்றார்.

மோடி அரசின் இந்த அறிவிப்பால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.



Source - Dinamalar

Next Story
கதிர் தொகுப்பு
Trending News