Kathir News
Begin typing your search above and press return to search.

இந்தியாவில் செயிண்ட் தாமஸ் கட்டுக்கதை !

இந்தியாவில் செயிண்ட் தாமஸ் கட்டுக்கதை !

Mission KaaliBy : Mission Kaali

  |  25 Sep 2021 10:39 AM GMT

தோமா இந்தியா வருகை கப்சாவை நிரூபித்த- இந்தியாவில் செயிண்ட் தாமஸ் கட்டுக்கதை! நூல்.

ஆசிரியர் – வரலாற்று பேரறிஞர். வேதப்பிரகாஷ்.

தோமோ இந்தியா வந்தார் என்றும் கேரளத்திலும் தமிழகத்திலும் கிறிஸ்தவ மதமாற்ற தொழிலை செய்து விட்டு கடைசியில் சென்னையில் இறந்தவருடைய கல்லறை சென்னையில் உள்ளதாகவும் கட்டுக்கதை பரப்பப்படுகிறது. இந்த கதையை மேலும் நீட்டி வளர்த்தி தோமாவை சந்தித்து திருவள்ளுவர் கிறிஸ்தவத்தை கற்றுக்கொண்டதால் மட்டுமே திருக்குறளை இயற்றினார் என்றும் அதிலிருந்து தான் சைவம் வைஷ்ணவம் போன்ற மதங்கள் வந்தன என்றும் பல முனைவர்பட்ட கையேடுகள் திராவிட கிறிஸ்தவ கூட்டணியின் கீழ் உள்ள பல்கலைக்கழகங்களால் தரப்பட்டுள்ளன.

தமிழகத்தின் அன்றைய முதல்வர் மு கருணாநிதியின் அணிந்துரை 1969ம் "திருவள்ளுவர் கிறித்தவரா" எனற் நூல் வந்தது. அடுத்த 15 ஆண்டுகளில் மேலும் சில நூல்கள் என வளர்ந்து அது "திருக்குறள் – விவிலியம்- சைவ சித்தாந்தம் ஒப்பாய்வு"ஒரு முனைவர் பட்ட கையேடு வெளியானது. வரலாற்று பேரறிஞர் வேதபிரகாஷ் அவர்கள் செயின்ட் தாமஸ் வருகை எனும் ஊகத்தை வரலாற்று தரவுகளை வைத்து எழுதிய ஆய்வு நூலே இது.

தோமோ இந்தியா வருகை என்பதற்கு எந்த ஒரு முதன்மை தரவுகளும் கிடையாது. மூன்றாம் நூற்றாண்டின் இறுதியில் எழுதப்பட்டது என கூறப்படும் தோமாவின் பணிகள் ( நடபடிகள்) என்ற நூல் மட்டுமே ஆகும். வேதபிரகாஷ் தன் நூலில் முழுமையாக தோமோ பற்றிய எல்லா தகவல்களையும் ஆராய்ந்து வரலாற்று ரீதியாக முழு பொய் என்பதை நிரூபித்தார் என்பதை நாம் இங்கு சற்று சுருக்கமாக காண்போம்.

ஆரம்பத்திலேயே எப்படி, 'ஆங்கிலத்திலும், தமிழிலும் மொழி நடையை மாற்றி தோமாவின் கதையை பாடத்திட்டத்தில் சேர்த்துள்ளனர் என்றும் தெளிவாக விளக்கியிருக்கிறார்.

பைபிள் சுவிசேஷக் கதைகளில் இயேசு மற்றும்சீடர்கள் யார் என்பதைப் பற்றி உள்ள கதை குறிப்புகளில் சீடர்கள் 12 பேர் என்பதைப் பற்றி சரியான தரவுகள் கிடையாது. பல விபரங்கள் முரண்படுகின்றன என்பதை சுட்டிக்காட்டி அதில் இருந்து தொடங்கி பல்வேறு அதிகாரங்களாக இந்த நூலை அமைத்துள்ளார்.

"தோமாவின் பணிகள்" நூலே தோமா வருகை கதைகளின் அடிப்படை என்பதால் அதில் உள்ள கதைகள் செய்திகளை "தாமஸின் நூல்கள்" எனும் பெயரில் முதலில் கொடுத்து உள்ளார்;

தோமாவின் பணிகள் நூலை முழுமையாக ஆராய்ந்து பல உண்மைகளை "உள்ளத்தாட்சிகள் குட்டை வெளிப்படுத்துகின்றன" வெளிப்படுத்தி உள்ளார் நூலாசிரியர்.


இந்தக் கதையில் உள்ள கோந்தபோரஸ் நாடு என்பது ஆப்கனிஸ்தான் ஒட்டிய பகுதி என்றும், அதற்கு பின்பு தோமா பணியாற்றி அரசனால் மரண தண்டனையில் கொல்லப் பட்ட நாடு பாலைவன நாடு என்பதையும் சுட்டி காட்டி உள்ளார். இரண்டு நாட்டு மக்கள் பழக்கங்கள் பற்றிய குறிப்புகள் இவை எதுவுமே இந்தியாவிற்கு தொடர்பு இல்லாதவை எனவும் நிரூபித்து உள்ளார். தோமா பணிகள் நூல் நூலின் தன்மைகள. இது 11ம் நூற்றாண்டின் பின்பான பல செய்தி வழக்கங்களை கூறுவதையும் எடுத்துக் காட்டி உள்ளார்.


இதுப்போன்ற கேள்விகளையெல்லாம் கிருஸ்தவர்களால் உருவாக்கப்பட்ட திராவிட அடிமை சிந்தனை கொண்ட தமிழ் அறிஞர்கள் யாரும் கேட்கவில்லை. விளைவு …? இந்த கப்ஸா கதையெல்லாம் பாடநூல்களிலேயே வந்துவிட்டது. ஆனால் அந்தக் காலத்திலேயே, தோமா இந்தியாவிற்கு வந்ததாக சொல்லப்படும் கதை கப்சா! என்று சரித்திர ஆய்வாளர்கள் தெளிவாக கூறிவிட்டனர். அதில் குறிப்பிடத்தக்கவர் வேதப்பிரகாஷ்!

திரு. வேதப்பிரகாஷ் எழுதிய, 'இந்தியாவில் செயிண்ட் தாமஸ் கட்டுக்கதை' என்ற நூல் கிருஸ்தவர்கள் சொல்லும் கதையை ஒட்டுமொத்தமாக அம்பலப்படுத்திவிட்டது.

அதுமட்டுமல்ல… இன்று தோமாவின் கல்லரை இருக்கும் பகுதி என்று சொல்லப்படும் சந்தோம் சர்ச்தான் நிஜத்தில் மயிலை கபாலீஸ்வரர் கோயில். என்பதை தமிழக தொல்லியல் அகழ்வில் எடுத்த கல்வெட்டுகள் நிருபிப்பதையும் வெளிப்படுத்து உள்ளார் நூலாசிரியர்.

கத்தோலிக்க கிருஸ்தவர்களின் மிக முக்கிய வழிகாட்டி நூலான "பட்லர்ஸ் லைப் ஆப் செயிண்ட்ஸ்" (பட்லரின் தூய புனிதர்களின் வாழக்கை கதைகள்) கூற்றுபடி தோமா நாள் என்பது டிசம்பர்-21.

தோமாவை பொதுவாக கத்தோலிக்கர்களே ஏற்கின்றனர். ஆனால் இன்று அனைத்து பிரிவு கிருஸ்தவர்களும் ஒன்று சேர்ந்து ஜூலை 3ம் தேதியை கொண்டாடுவதற்கு ஒரே காரணம்தான்! கிருஸ்தவ மதம் 2000 ஆண்டுகளாக இந்தியாவில் இருந்து வருகிறது என்று நிரூபிக்கவே இந்த முயற்சியை செய்து வருகிறார்கள்.

கடந்த ஜூலை 3ம் தேதி நேஷனல் கிரிஸ்டியன் டே அதாவது 'இயேசு பக்தி திவாஸ்' என்ற விழாவை கொண்டாடியிருக்கிறார்கள் கிருஸ்தவர்கள். இந்த விழாவிற்காக சுமார் 200 கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டிருப்பதாகவும் மதிப்பிடப்படுகிறது. தோமாவின் நினைவாக இந்த விழாவை கொண்டாடுவதாக கூறுகின்றனர் கிருஸ்தவ மிஷனரிகள்.

கிருஸ்தவ மிஷனரிகள் எந்த ஒரு நாட்டிற்குச் சென்றாலும், அங்கே தங்களது மதத்தை பிரச்சாரம் செய்வதற்காக வசதியாக ஒரு கட்டுக்கதையை அவிழ்த்துவிடுவார்கள். அப்படி இந்தியாவில் அவிழ்த்துவிடப்பட்ட கதைத்தான் தோமாவின் கதை.

ஆனால் இந்த பிரச்சாரம் முற்றிலும் போலியானது என்பது, 'வேதப்பிரகாஷ் அவர்கள் எழுதிய நூலைப் படித்தால் தெளிவாகத் தெரியும்.

Mission Kaali

Next Story
கதிர் தொகுப்பு
Trending News