Kathir News
Begin typing your search above and press return to search.

வெளிநாட்டு நன்கொடைகளைப் பயன்படுத்தி  இந்தியாவின் பெயரைக் கெடுக்கும் மிஷனரி NGO அம்பலம்.?

வெளிநாட்டு நன்கொடைகளைப் பயன்படுத்தி  இந்தியாவின் பெயரைக் கெடுக்கும் மிஷனரி NGO அம்பலம்.?

வெளிநாட்டு நன்கொடைகளைப் பயன்படுத்தி  இந்தியாவின் பெயரைக் கெடுக்கும் மிஷனரி NGO அம்பலம்.?

Saffron MomBy : Saffron Mom

  |  5 Dec 2020 10:02 AM GMT

சட்ட உரிமைகள் கண்காணிப்பகம் (LRO) என்ற அமைப்பு தேச விரோத செயல்களில் ஈடுபட்டு வரும் NGOக்களை அம்பலப்படுத்தி, மத்திய உள்துறை அமைச்சகத்திடம் புகார் அளித்து வருகிறது. முக்கியமாக வெளிநாட்டு நிதிகளை தவறாக பயன்படுத்தும் NGOக்களின் FRCA உரிமத்தை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகளை எழுப்பி வருகிறது.

பம்பாய் சலேசியன் சொசைட்டி டான் போஸ்கோ (Bombay Salesian Society Don Bosco) சர்ச்சுடன் தொடர்புடைய NGO, தேச விரோத நடவடிக்கைகளில் ஈடுபடுவதை சில ட்வீட்கள் மூலம் அம்பலப்படுத்தியுள்ளனர்.

பம்பாய் சலேசியன் சொசைட்டி டான் போஸ்கோ, FRCA விதிகளை மீறியதாக குற்றம் சுமத்தியுள்ளனர். கடந்த வருடத்தில் மட்டும் 10.19 கோடி ரூபாய்கள் அவர்கள் நன்கொடையாக பெற்றுள்ளதாகவும், கடந்த 10 வருடங்களில் 176 கோடி ரூபாய் பெற்றுள்ளதாகவும் கூறுகின்றனர்.

இவர்கள் 'வனசக்தி' என்ற நிழல் அமைப்பை, மும்பை மெட்ரோவில் ஆரே பகுதியில் கார்ஷெட் அமைப்பதை எதிர்ப்பதற்காக இந்த மிஷினரி அமைப்பு உருவாக்கியதாக குற்றம் சுமத்தியுள்ளது LRO.

டான் பாஸ்கோவுடன் இணைப்பில் உள்ள மற்றொரு அமைப்பான கிரீன்லைன் என்ற அமைப்பும் ஆரெ கார்ஷெட்டுக்கு எதிரான போராட்டங்களில் ஈடுபட்டு வந்தது. டான் பாஸ்கோவுடன் இணைந்த, பாந்த்ராவை சேர்ந்த செயிண்ட் ஸ்டானிஸ்லாஸ் பள்ளி, அரசுக்கு எதிராக போராட்டம் நடத்துவதற்கு அப்பள்ளி மாணவர்களின் பெற்றோர்களிடம் இருந்து கட்டாயமாக கையெழுத்துக்களை வாங்கியது.

அப்பள்ளி மாணவர்களை அரசுக்கு எதிராக போராட கட்டாயப்படுத்தியதற்காக, சிறுவர் உரிமைகள் திட்டத்திற்கான தேசிய ஆணையம் மும்பை கார்ப்பரேஷனுக்கு (BMC) நோட்டீஸ் அனுப்பியிருந்தது.

முன்னாள் மத்திய ஊரக வளர்ச்சி அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் ஒரு முறை, சலேஷியன்ஸ் அமைப்புடன் இணைக்கப்பட்ட மற்றொரு மதமாற்று அமைப்பான சரிடஸ், தங்களுடைய பணிகளை மதமாற்று வேலைகளுக்காக பயன்படுத்துவதாக குற்றம் சாட்டியிருந்தார்.

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கும் சில NGO க்களை கூடங்குளம் அணுமின் நிலைக்கு எதிராக போராட்டங்களை தூண்டுவதாக குற்றம்சாட்டியிருந்தார்.

இந்தியா மீது அவதூறு செய்வதற்கான திட்டமிட்ட முயற்சி சர்வதேச அளவில் நடந்து வருகிறது. இந்த கிறிஸ்தவ மிஷனரிகள் அரசியல் மற்றும் சமூகப் பிரச்சனைகளில் மூக்கை நுழைப்பதற்கு பல வழிகளைத் தேடுகிறார்கள். சமீபத்திய குற்றச்சாட்டுகள் வெளிநாட்டு நிதி உதவியை சிலபல NGOக்கள் தேசவிரோத செயல்பாடுகளுக்கு பயன்படுத்தாமல் இருக்க அவைகளை கண்காணிப்பது எந்த அளவு முக்கியம் என்பதை வெளிப்படுத்துகின்றன.

மத்திய உள்துறை அமைச்சகம் இதன் மீது விசாரணை நடத்தி, தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News