Kathir News
Begin typing your search above and press return to search.

இராமாயணத்தை இழிவுபடுத்திய கிருஸ்தவ பள்ளி மீது நடவடிக்கை எடுக்கக்கோரி 'மிஷன் காளி' புகார்!

இராமாயணத்தை இழிவுபடுத்திய கிருஸ்தவ பள்ளி மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மிஷன் காளி புகார்!

Mission KaaliBy : Mission Kaali

  |  8 Nov 2021 10:17 AM GMT

மிஷன் காளி நேயர்களுக்கு வணக்கம். இந்து மதத்தை அழித்து இந்தியாவை கிருஸ்தவ நாடாக மாற்றி மேற்கத்திய நாடுகளின் அடிமையாக மாற்ற வேண்டும் என்பதே கிருஸ்தவ மிஷனரிகளின் நோக்கம். இதற்காக தொடர்ந்து இந்து மதம் பற்றியும், இந்து மதத்தின் புராணம், பண்பாடு, கலாச்சாரம் போன்றவற்றை கேலி செய்வதை கிருஸ்தவ மிஷனரிகள் வழக்கமாகக் கொண்டுள்ளனர். சமீபத்திலும் அதுப்போன்ற ஒரு சம்பவம் நிகழ்ந்துள்ளது. ஹரியானா மாநிலம் டொஹானாவில் அமைந்திருக்கிறது செயிண்ட் மேரி என்ற கிருஸ்தவப் பள்ளி.

அந்த பள்ளியில் சில காலத்திற்கு முன்பு இராமாயண மேடை நாடகம் அரங்கேற்றப்பட்டது. ஆனால் அது இராமாயணத்தை கேலி செய்யும் வகையில் கிருஸ்தப் பள்ளியால் வடிவமைக்கப்பட்டிருந்தது. இது சம்மந்தமான வீடியோக்கள் பல்வேறு சமூக வலைதளங்கள் மற்றும் ஊடகங்களில் வெளியாகவே அது இந்துக்களிடையே பெரும் கொந்தளிப்பை கிளப்பியிருக்கிறது. இந்த விவகாரம் தொடர்பாக செயிண்ட் மேரி கிருஸ்தவ பள்ளிக்கு நாடு முழுவதும் உள்ள இந்துக்கள் தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். ராமாயணம் என்பது வெறும் இந்து மத நூல் கிடையாது. அது இந்த பாரத நாட்டின் பண்பாட்டை வெளியுலகத்திற்கு எடுத்துச் சொல்லும் நூலாகும். அப்படிப்பட்ட இராமாயணத்தை இழிவுபடுத்திய செயிண்ட் மேரி பள்ளி நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மத்திய கலாச்சாரத்துறை அமைச்சகத்திடம் 'மிஷன் காளி' புகார் அளித்துள்ளது.




அந்தப் புகாரில் , 'உலகத்தின் மிகப்பழமையான இதிகாசங்களில் ஒன்று இராமாயணம். பாரத தேசத்தின் உயரிய பண்பாடுகளை சிறந்த முறையில் எடுத்துச்சொல்லும் இந்த காவியத்தை தெற்கு ஆசிய நாடுகள் மட்டுமில்லாது, தென்கிழக்கு ஆசிய நாட்டு மக்களும் பெரிதும் போற்றி மதிக்கின்றனர்.

இந்தியாவில் பல மொழிகள் பேசப்பட்டு வருகிறது. ஆனால் அனைத்து மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்ட நூல் என்ற சிறப்பு இராமாயணத்திற்கு உண்டு! தமிழில் கம்பரும், வடமொழியில் வால்மீகியும், இந்தியில் துளசி தாசரும், மலையாளத்தில் எழுத்தச்சனும், அசாமியில் மாதவ் கங்குனியும், ஒரியாவில் பலராம்தாசுவும் இந்த மகா காவியத்தை எழுதியுள்ளனர். இதுவே மொழியைத் தாண்டி பாரத நாட்டு மக்கள் பண்பாட்டிற்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுத்துள்ளதற்கு ஆதாரம்.

அதனாலேயே ராமாயணம் இன்றளவும் இந்திய நாட்டின் கலாச்சாரம் மற்றும் பண்பாட்டை விளக்கும் ஒரு நூலாக இருந்து வருகிறது. நமது பாரத நாட்டைத் தாண்டி தென் கிழக்கு ஆசிய நாடுகளிலும் கூட இராமாயண காவியம் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது இராமாயணம் போதிக்கும் நல்ல பண்புக்கு உதாரணம்.

இப்படி உலகமே கொண்டாடிக்கொண்டிருக்கும் ராமாயணம் நமது பாரத நாட்டிலேயெ இழிவு படுத்தப்பட்டுவருவது வேதனையைக் கொடுக்கிறது.




ஹரியானா மாநிலம் டொஹானாவில் செயல்பட்டு வருகிறது செயிண்ட்.மேரி பள்ளி. இந்தப் பள்ளியில் சில காலத்திற்கு முன்பு 'ராம் லீலா' நாடகம் அரங்கேற்றப்பட்டது. நமது நாட்டுக் கலாச்சாரத்தை கேவலப்படுத்தும் வகையில் 'ராம் லீலா' நாடகக் கதையை சிதைத்துள்ளனர் பள்ளி நிர்வாகிகள். இந்தியாவின் கற்பு நெறிக்கு உதாரணமாக சொல்லப்படும் சீதை, ராவணனோடு விருப்பத்துடனே செல்வது போலவும், ராமர் என்பவர் பொது அறிவு இல்லாதவர் போலவும் கதை வடிவமைக்கப்பட்டு இருந்தது.

இதுப் பற்றி பல சமூக வலைதளங்கள் மற்றும் ஊடகங்களிலும் செய்தி வெளியாகியுள்ளது. இந்த சம்பவம் என்னை மட்டுமில்லாது பாரத கலாச்சாரத்தை மதிக்கும் கோடிக்கணக்கான இந்தியர்களை புண்படுத்தியுள்ளது. இதுப் போன்ற இந்திய கலாச்சாரத்தை இழிவு படுத்தும் நாடகங்களில் பள்ளி மாணவர்களை நடிக்க வைப்பது, அவர்களுக்கு நமது கலாச்சாரத்தின் மீது தாழ்வு மனப்பான்மையையே உருவாக்கும்.

இதை நாம் அனுமதிப்பது தவறு. அதனால் இந்திய கலாச்சாரத்தை இழிவு படுத்தும் வகையில் ராம் லீலாவை அவமதித்து நாடகம் போட்ட, செயிண்ட் மேரி பள்ளி மற்றும் அதன் நிர்வாகிகள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இனி பாரத கலாச்சாரத்தை அவமதிக்க நினைப்பவர்களுக்கு இது ஒரு பாடமாக இருக்கவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.

Twitter

நன்றி' என்று கூறப்பட்டுள்ளது.

இந்திய கலாச்சாரத்தை இழிவு படுத்திய கிருஸ்தவ மிஷனரிப் பள்ளியின் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என நம்புகிறோம்.

குறிப்பு : இந்த கட்டுரையில் உள்ள கருத்துக்கள் அனைத்தும் ஆசிரியரையே சாரும். கதிர் செய்திகள் இந்த கருத்துக்களுக்கு பொறுப்பாகாது.


Next Story
கதிர் தொகுப்பு
Trending News