Kathir News
Begin typing your search above and press return to search.

ஆசிரியர் ஜாய்சன் மீது ஏற்கனவே நிறைய கேஸ்கள் உண்டு! திடுகிடவைக்கும் மாணவனின் பெற்றோர் !

ஆசிரியர் ஜாய்சன் மீது ஏற்கனவே நிறைய கேஸ்கள் உண்டு!  திடுகிடவைக்கும் மாணவனின் பெற்றோர் !

DhivakarBy : Dhivakar

  |  23 Oct 2021 12:31 AM GMT

கிருஸ்தவ மிஷனரிப் பள்ளிக்கூடங்களில் இந்துக் குழந்தைகள் மத ரீதியிலான துன்புறுத்தல்களுக்கு ஆளாக்கப்படுகின்றனர். அவர்களுக்கு இந்து மதத்திற்கு எதிரான போதனை கட்டாயமாக வழங்கப்படுகிறது. மாணவர்கள் நெற்றியில் திருநீறு பூசிக்கொள்ளவும், கழுத்தில் ருத்ராட்சம் அணிந்துக்கொள்ளவும் தடைவிதிக்கப்படுகிறது. சொல்லப்போனால் இந்துவாக இருப்பதே அவமானம் என்ற வகையில் தாழ்வு மனப்பான்மைக்குத் தள்ளப்படுகின்றனர். அதேநேரம் கிருஸ்தவ மதம் அவர்கள் மீது திணிக்கப்படுகிறது என்று 'மிஷன் காளி' அமைப்பு பல காலமாகவே எச்சரித்து வந்துள்ளது.

மிஷன் காளி எச்சரித்ததுப் போலவே நடந்துவிட்டது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் ஆண்டர்சன் பள்ளியில் ருத்ராட்சம் அணிந்து வந்ததற்காக மாணவன் கிருபானந்தன், ஜாய்சன் என்ற ஆசிரியரால் கொடூரமாக தாக்கப்பட்டது நாம் அனைவரும் அறிந்ததே! 'ரெளடிப் பசங்கதான் ருத்ராட்சம் அணிவார்கள்' என்று சொல்லிச் சொல்லி அந்த மாணவனை அடித்ததுதான் மதவெறியின் உச்சக் கட்ட வெளிப்பாடு!

இந்த சம்பவம் ஊடகங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வந்த நிலையில், பாதிக்கப்பட்ட மாணவனுக்கு நீதி கிடைத்ததா? தவறு செய்த ஆசிரியர் ஜாய்சன் தண்டிக்கப்பட்டாரா? என்பதைத் தெரிந்துக்கொள்ள மாணவன் கிருபானந்தனின் தாய் ஹேமாவதியை தொடர்புக் கொண்டு பேசினோம். அவர் கூறும்போது, 'அந்தப் பள்ளியில் இப்படியெல்லாம் நடக்கும் என்று நாங்கள் நினைத்துப்பார்க்கவே இல்லை. ஆசியர் ஜாய்சன் ஏற்கனவே பலமுறை ருத்ராட்சம் அணிந்துவந்ததற்காக என் மகனை அடித்து அவமானப்படுத்தியுள்ளார். ஆனால் இது எங்களுக்குத் தெரியவில்லை.

பிறகு என் மகன் சொல்லித்தான் எனக்கு விஷயமே தெரியவந்தது. அதுமட்டுமல்ல… ஆசிரியர் ஜாய்சன் மீது ஏற்கனவே சில வழக்குகள் நிலுவையில் இருப்பதாக காவல்துறையிலும், தெரிந்த வட்டத்திலும் தற்போது கூறுகிறார்கள். இப்போது அதை கேள்விப்பட்டு அதிர்ச்சியாக உள்ளது. அந்த ஆசிரியர் மீது நாங்கள் காவல்துறை மற்றும் கல்வித்துறை அதிகாரிகளிடம் புகார் அளித்திருக்கிறோம். அவர் மீது நடவடிக்கை எடுப்பதாக வாக்குறுதியளித்திருக்கிறார்கள்.

எங்களுக்குப் பக்கத்துணையாக சைவ சமய திருத்தொண்டர் கூட்டமைப்பும் அதன் தலைவர் சிவகுமார் அவர்களும் செயல்பட்டு வருகின்றனர்' என்று முடித்துக்கொண்டார்.

'மிஷன் காளி' தரப்பில் உதவத் தயாராக உள்ளோம். தேவைப் பட்டால் இந்து ஆன்மீகத்தை மதித்துப் போற்றும் பள்ளியில் அவரது மகனுக்கு இடம் கிடைக்கவும் வழிவகை செய்யத் தயார் என்று உறுதி கூறியதற்கு அவர் தனது நன்றிகளை தெரிவித்துக்கொண்டார்.




தொடர்ந்து சைவ சமய திருத்தொண்டர் கூட்டமைப்பின் தலைவர் சிவகுமார் அவர்களிடம் பேசியபோது, 'பள்ளியின் செயல்பாடு மிகவும் கண்டனத்திற்குறியது. பள்ளிக்கூடம் என்பது கல்வியை போதிக்கும் இடம். அதுவும் அந்தப் பள்ளி அரசு நிதியில்தான் இயங்கி வருகிறது. அப்படியிருக்கும்போது ருத்ராட்சம் அணிந்துவந்த மாணவன் மீது மதவெறியைக் காட்டியிருப்பதை அனுமதிக்கவே முடியாது. அது கிருஸ்தவப் பள்ளியாக இருக்கலாம். ஆனால் நாங்கள் இந்துக்கள். எங்கள் பிள்ளைகள் திருநீறும், ருத்ராட்சமும் அணிந்துதான் பள்ளிக்கு வருவார்கள். மீண்டும் இந்து மாணவர்களை சீண்ட நினைத்தால் பள்ளியை முற்றுகையிட தயங்க மாட்டோம் என்று ஆண்டர்சன் நிர்வாகத்தை எச்சரித்து இருக்கிறோம்.

தற்போது தமிழகம் முழுவதும் பல பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் குடும்பத்தில் இருந்தும் இதுப்போன்ற குற்றச்சாட்டுகள் எங்களுக்கு கிடைத்து வருகிறது. அந்தப் பள்ளிகளை கண்டறிந்து நீதியை நிலைநிறுத்தவேண்டும்' என்று கூறினார்.

இந்துக்களின் எழுச்சியால் ஆண்டர்சன் பள்ளி தற்போதைக்கு அடங்கியிருக்கலாம். ஆனால் இதுப்போல ஆயிரம் ஆண்டர்சன் பள்ளிகள் இந்தியா முழுவதிலும் இந்து மாணவர்களை சித்ரவதை செய்து வருகிறது. அனைத்துமே ஊடகங்களில் வெளிவருவதில்லை. இது போன்ற சம்பவங்களைத் தடுக்க ஒரே வழிதான் உள்ளது. அது இந்து கலாச்சாரத்தை மதிக்கக் கற்றுத் தரும் பள்ளியில் இந்துக் குழந்தைகளை சேர்ப்பதே ஆகும்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News