Kathir News
Begin typing your search above and press return to search.

தலிபான்களை புகழ்ந்து தள்ளும் 'அகில இந்திய முஸ்லீம் தனிநபர் சட்ட வாரிய' செயலாளர் !

ஆப்கானிஸ்தான் அரசுக்கு எதிரான தலிபான்களின் தாக்குதலைப் பாராட்டினார்.

தலிபான்களை புகழ்ந்து தள்ளும் அகில இந்திய முஸ்லீம் தனிநபர் சட்ட வாரிய செயலாளர் !

Saffron MomBy : Saffron Mom

  |  19 Aug 2021 5:39 AM GMT

இஸ்லாமிய பயங்கரவாதக் குழுவான தலிபான்கள் ஆப்கானிஸ்தானைக் கைப்பற்றிய சில நாட்களுக்குப் பிறகு, அவர்கள் நடவடிக்கைகளை நியாயப்படுத்தியும், சில சமயங்களில் புகழ்ந்தும் இந்திய சமூக வலைத்தளங்களில் பலர் கருத்துக்களை பகிர்ந்து வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இத்தகைய கணக்குகளை மத்திய உளவுத் துறை கண்காணித்து வருவதாக தகவல்கள் வெளிவந்த நிலையில், அகில இந்திய முஸ்லீம் தனிநபர் சட்ட வாரியத்தின் (AIMPLB) மூத்த மதகுரு பயங்கரவாதக் குழுவுக்கு தனது ஆதரவை வழங்கியது மட்டுமல்லாமல், ஆப்கானிஸ்தான் அரசுக்கு எதிரான தலிபான்களின் தாக்குதலைப் பாராட்டினார்.



அகில இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியத்தின் (AIMPLB) செயலாளர் மவுலானா உம்ரைன் மஹ்ஃபுஸ் ரஹ்மானி ட்விட்டரில், ஆப்கானிஸ்தானைக் கைப்பற்றிய வெற்றிக்காக தலிபான்களைப் பாராட்டி உருது மொழியில் ஒரு ட்வீட்டை வெளியிட்டார்.

தலிபான்கள் ஆப்கானிஸ்தானைக் கைப்பற்ற முடியும் என்றும், ஏனெனில் முடிவுகள் "சொர்க்கத்தில் எடுக்கப்பட்டன, பூமியில் இல்லை" என்று மவுலானா கூறினார்.



"ஆப்கானிஸ்தானில் தலிபான்களின் வெற்றி, கடவுளின் உதவியால் தான் போர்களில் வெற்றி கிடைக்கிறது, புத்திசாலித்தனம் மற்றும் பலத்துடன் மட்டும் அல்ல என்று காட்டப் போதுமானது" என்று AIMPLB செயலாளர் தனது ட்வீட்டில் வலியுறுத்தினார்.

மற்றொரு ட்வீட்டில், மதகுரு மேலும், "தலிபான்கள் ஆப்கானிஸ்தானை வென்றது, செல்வங்கள் மற்றும் வளங்களின் சக்தியால் அல்ல, மாறாக நம்பிக்கையின் நித்திய செல்வத்துடன்! மேலும், பொது மன்னிப்பை அறிவிப்பதன் மூலம், முஹம்மது (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அடிமைகளின் குழுவிற்கு உரித்தானவர்கள் என்பதை தலிபான்கள் நிரூபித்தனர்" என்று தெரிவித்தார்.

மவுலானா உம்ரைன் மஹ்ஃபுஸ் ரஹ்மானி வெளியிட்ட ட்வீட் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் ஏற்பட்ட சீற்றத்தைத் தொடர்ந்து, தலிபான்களைப் பொறுத்த கருத்துகள் அவரது தனிப்பட்ட கருத்துக்கள் என்றும், AIMPLB செயலாளராக ட்வீட் செய்யவில்லை என்று தெளிவுபடுத்தினார்.

இது போதாது என்று சமாஜ்வாதி கட்சி எம்பி ஷபிகுர் ரஹ்மான் பர்க், தலிபான் அமைப்புக்கு தனது ஆதரவை தெரிவித்ததோடு மட்டுமல்லாமல், பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்திற்கு எதிரான இந்தியாவின் சுதந்திர இயக்கத்திற்கு ஒப்பானது இந்தப் போர் என்று கூறி தலிபான்களை புகழ்ந்துள்ளார்.



ஷபிகுர் ரஹ்மான் பார்க் மேலும் கூறுகையில், "தலிபான், ரஷ்யா மற்றும் அமெரிக்கா போன்ற வலுவான நாடுகளை கூட தங்கள் நாட்டில் குடியேற அனுமதிக்காத ஒரு சக்தி" என்றார்.

அமெரிக்க படைகள் ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேறிய சில தினங்களில் தலிபான்கள் விரைவாக ஆப்கானிஸ்தானை கைப்பற்றினர். காபூல் வரை முன்னேறி ஆப்கானிஸ்தான் ஜனாதிபதி மாளிகையை கைப்பற்றி ஆப்கானிஸ்தானுக்கு, இஸ்லாமிக் எமிரேட்ஸ் ஆப் ஆப்கானிஸ்தான் என்று மறு பெயரும் சூட்டினர்.

அமெரிக்காவினால் ஆதரிக்கப்பட்ட ஜனாதிபதி அஷ்ரப் கனி தனது பதவியை ராஜினாமா செய்து, அமைதிக்காகவும் ரத்தம் சிந்துவதை தவிர்ப்பதற்காகவும் நாட்டை விட்டு வெளியேறுவதாக ஒரு முகநூல் பதிவில் தெரிவித்து விட்டு வெளியேறினார். ஆப்கானிஸ்தான் ஜனாதிபதிக்கும் அங்கு வசிக்கும் அமெரிக்க அதிகாரிகளுக்கும் பாதுகாப்பான வழி ஏற்படுத்தி விட்டு ஆப்கானிஸ்தானிலிருந்து முழுவதுமாக வெளியேற அமெரிக்கா முடிவு எடுத்தது.

Cover Image Courtesy: OpIndia

Next Story
கதிர் தொகுப்பு
Trending News