Kathir News
Begin typing your search above and press return to search.

நாகர்கோவிலில் வெற்றி வாகை சூடுவாரா மக்களுக்கான அரசியல் தலைவர் MR காந்தி?

நாகர்கோவிலில் வெற்றி வாகை சூடுவாரா மக்களுக்கான அரசியல் தலைவர் MR காந்தி?

Saffron MomBy : Saffron Mom

  |  16 March 2021 4:14 PM GMT

நாகர்கோவில் சட்டமன்ற தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணி (NDA) சார்பில் நிற்கும் பா.ஜ.க வேட்பாளர் MR காந்தி. இவர் கன்னியாகுமரி மாவட்டத்தில் நன்கறியப்பட்ட முகமாவார். 1967-ல் ஜன சங்கத்தின் மாவட்டத் தலைவராகவும், 1975-ஆம் ஆண்டு அக்கட்சியின் மாநில செயலாளராகவும் இருந்தார். காங்கிரஸினால் கொண்டுவரப்பட்ட அவசர நிலை பிரகடனத்திற்கு எதிராக ஜனநாயகம் காக்கப் போராடினார்.

1975 இல் MISA (உள்நாட்டு பாதுகாப்பு பராமரிப்பு சட்டத்தின்) வின் கீழ் ஒரு வருடம் சிறையில் இருந்தார். அதற்கு பிறகு உருவான பா.ஜ.க-வில் மாநில செயலாளராக, மாநில பொதுச் செயலாளராக, மாநில துணைத்தலைவரக பணியாற்றி தற்பொழுது தேசிய செயற்குழு உறுப்பினராகவும் உள்ளார்.

கட்சிகளைத் தாண்டி அவரை யாரும் மனிதாபிமான உதவிக்காக அணுகலாம். தேவைப்படுபவர்களுக்கு களத்தில் இறங்கி உதவி செய்ய அவர் எப்போதும் இருப்பார். காந்தியைப் போல் எளிமைக்கு பெயர் போன இவர், எளிதாக அணுகக் கூடியவர், எளிமையானவர், பல்வேறு பிரிவுகளைக் கடந்து அரசியலில் அவருக்கு நல்ல பெயரும் மரியாதையும் சமுதாயத்தின் அனைத்து இடங்களில் இருந்தும் கிடைத்துள்ளது.

அவருடைய மாவட்டத்தில் மதவாதம் இருக்கிறது. கன்னியாகுமரி கடந்த இரண்டு நூற்றாண்டுகளுக்கும் மேலாக மதவாத கலவரங்கள் வெடிக்கும் இடமாக இருந்து வருகிறது. கிறிஸ்தவ மிஷனரிகள் கன்னியாகுமரியை ஒரு கிறிஸ்தவ மாவட்டமாக மாற்ற தொடர்ந்து செயல்பட்டு வருகின்றன.

சமீபத்தில் உலகளாவிய இஸ்லாமிய நடவடிக்கைகளும் அங்கே அதிகரித்து வருகிறது. ஆனால், இந்த மாவட்டத்தை தனித்து காட்டுவது எது என்றால் எந்த ஒரு முறையான ஆதரவோ, சுதந்திரத்திற்கு பிறகான இந்திய அரசாங்கத்திடமிருந்து அனுதாபமோ இல்லாவிட்டாலும் இம்மாவட்டத்தில் இந்துக்கள் தொடர்ந்து ஈடுகொடுத்து சமாளித்து வருகின்றனர்.

சுதந்திரத்திற்குப் பின்னால் தான் ஆர்.எஸ்.எஸ் மற்றும் சங்பரிவார் அமைப்புகள் இங்கு வேரூன்றின. இதனால் இங்கே குறிப்பிடத் தகுந்த இந்து ஒருங்கிணைப்பு இருக்கிறது. ஆனால், கிறிஸ்தவ மிஷனரிகளின் பிடிப்பு இங்கே கடுமையானது. மாநிலத்திலேயே மிகவும் உயர்ந்த காங்கிரஸ் தலைவரான காமராஜர் கூட இந்தப் பகுதியில் தேர்தலில் நின்ற பொழுது சில பகுதிகளில் இந்து மத எதிர்ப்பை எதிர்கொள்ள நேரிட்டது.

தனது ஆரம்பகால நாட்களிலேயே MR காந்தி ஆர்.எஸ்.எஸ் ஸ்வயம்சேவகர் ஆவார். இந்து இயக்க நிகழ்வுகளில் அவர் பங்கேற்பது அனைவரும் அறிந்த விஷயமே. அதைப் போலவே நன்கு அறியப்பட்ட மற்றொரு விஷயம், இந்து அல்லாத எவரும் கூட அவரை மனிதாபிமான உதவிகளுக்காக அணுகலாம். இந்துக்கள் அல்லாதவரிடமும் கூட அவர் பெற்றிருக்கும் நல்லபெயர் மிகவும் ஆச்சரியத்தைத் தரக் கூடியது.

எனவே அவருடைய அரசியல் என்பது மதவாதம் அல்ல. ஆனால் அம்மாவட்டத்தில் நிறுவனப்படுத்தப்பட்ட, அதிகாரத்தில் திளைக்கும் மதவாத சக்திகளை எதிர்த்தே போராடுகிறார் என்றே கூறலாம்.

இதற்கு முன்னால் தேர்தல்களில் நின்றிருக்கிறார். மாவட்டத்திலுள்ள மதவாத சக்திகள் எப்பொழுதுமே ஒன்றிணைந்து அவரை வீழ்த்த முயற்சி செய்திருக்கிறார்கள். எல்லா பிரிவினரிடமும் அவருக்கு இருக்கும் ஆதரவு அவர்களை அச்சுறுத்துகிறது. தங்களுடைய கூட்டங்களின் வாயிலாக பீதியை கிளப்பி அவருக்கு எதிரான மனநிலையை உருவாக்குகின்றனர்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் ஏதாவது ஒரு கிராமத்தில் ஹிந்துக்களின் வழிபாட்டு உரிமை பாதிக்கப்படாத நாளில்லை. சர்ச்சில் செல்வாக்கு மிக்க அதிகாரிகளை இந்துக்களுக்கு எதிராகவே நடக்கத் தூண்டி, இந்துக்களை அவமானத்திற்கு உள்ளாக்குகின்றனர். இதுதான் இம்மாவட்டத்தில் 'மத நல்லிணக்கம்' என்று கூறப்படுகிறது.

ஆனால், MR காந்தி இங்கே விஷயங்களை மாற்றலாம். அவர் பாதிக்கப்பட்ட இந்து மக்களுக்காக வாதாடி, சரியான சட்ட நடவடிக்கைகளை எடுத்து இந்துக்களின் உரிமைகள், பாதுகாப்பை உறுதி செய்வார். எனவே இந்துக்களுக்கு எதிரான சக்திகள் அவரை கண்டு பயப்படுகின்றன. ஆனால் சாதாரண குடிமகன்கள் அவரை மரியாதையுடன் பார்க்கிறார்கள். இது கட்சி அனைத்தையும் தாண்டியுள்ளது.

ஆனால், இது அவருக்கு எதிரான கொலைகார திட்டங்கள் தீட்டப்படுவதை நிறுத்தவில்லை. அவருக்கு எதிராக கொலை மிரட்டல்கள், அவர் உயிர் மீதான வன்முறை தாக்குதல்களும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன. அவர் பலமுறை இத்தாக்குதல்களில் இருந்து உயிர் பிழைத்து இருக்கிறார்.

2006 டிசம்பர் 17 அன்று அவர் ஒரு கடற்கரை கிராமத்தில் இருந்து கூட்டம் முடித்து திரும்பி வந்து கொண்டிருக்கும் பொழுது, ஒரு இஸ்லாமியவாத கும்பலினால் தாக்கப்பட்டார். அவரை உயிருடன் எரித்து விடுவதாக அவர்கள் மிரட்டினர்.

2013 ஏப்ரல் 26 அன்று காலை நடை பயணம் சென்ற பொழுது தாக்கப்பட்டார். இது தொடர்பாக ஏற்படுத்தப்பட்ட கைது நடவடிக்கைகள் தமிழ்நாடு முழுவதும் நெட்வொர்க் வைத்திருக்கும் அல்-உம்மா குழுவின் முகமது சலீம், இவன் திருநெல்வேலி மாவட்டத்தில் மேலப்பாளையத்தில் இருந்து வருபவன், ஹம்சா என்பவன் நாகர்கோவிலைச் சேர்ந்தவன். அப்துல் சமது சென்னையைச் சேர்ந்தவன்.

2016 சட்டசபை தேர்தலிலும் நாகர்கோவிலிருந்து அவர் தேர்தலுக்கு நின்றார். முன்னர் அவர் தி.மு.க வேட்பாளர் சுரேஷ் ராஜனால் என்பவரால் 21 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். ஆனால், அப்பொழுது அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் 45 ஆயிரம் ஓட்டுகளை பெற்று இருந்தது.

எனவே இந்த எண்களை நாம் கணக்கிடும் பொழுது, தி.மு.க-விற்கு எதிராக விழுந்த ஓட்டுகள் அ.தி.மு.க-விற்கு ஆதரவாக இருந்த ஓட்டுக்களை விட அதிகம். எனவே தற்போது MR காந்தி சுலபமாக ஜெயிக்க வேண்டும். ஆனால், இந்த முறை யுத்தகளம் மிகவும் பரபரப்பாக உள்ளது.

இஸ்லாமியவாத அமைப்புகளால் குடியுரிமைச் சட்ட திருத்தத்திற்கு எதிரான இயக்கம் பரப்பப்பட்டு வருகிறது. கிறிஸ்தவ மிஷனரிகள் கிராமம் கிராமமாகச் சென்று அவரைப் பற்றிய பீதி கிளப்பி வருகிறார்கள். இந்த அமைப்புகள் அவரின் வெற்றி வாய்ப்பை தடுக்க வேண்டுமென் செயல்பட்டு வருகின்றன.

உள்ளூர் ஹிந்துக்களுக்கு எதிரான ஒரு கூட்டணி உருவாக வேண்டும் என்றும், இந்தியா வளர்ச்சி அடைவதை தடுக்க வேண்டும் என்றும் செயல்படுகிறார்கள். எனவே இத்தேர்தல் களம் சூடு பிடித்துக் கொண்டிருக்கிறது.

இந்த முறை MR காந்திக்கே மக்களின் ஆதரவு அலை வீசுகிறது. தற்போதைய தி.மு.க எம்.எல்.ஏ சுரேஷ் ராஜன் மீது பலரும் அதிருப்தியில் உள்ளனர். அவர் ஒரு அணுக முடியாத, திமிர் பிடித்த, பாகுபாடு பார்க்கும் நபர் என உள்ளூர் மக்களால் கூறப்படுகிறது. நாகர்கோவில் சட்டசபை தொகுதிக்கு MR காந்தி ஒரு நன்மை வழங்கும் சட்டமன்ற உறுப்பினராக செயல்படுவார் என்பதில் எவ்வித ஐயமுமில்லை.

மக்கள் என்ன சொல்கிறார்கள்? மே 2-ஆம் தேதி தெரிந்து விடும்.

Reference and Inputs from: Swarajya

Next Story
கதிர் தொகுப்பு
Trending News