Kathir News
Begin typing your search above and press return to search.

அமெரிக்கா வரை அளந்துவிடறாங்க! GER 52% திராவிட மாடல் உருட்டு - ஆதாரத்துடன் அம்பலமான புள்ளிவிவரம்!

அமெரிக்கா வரை அளந்துவிடறாங்க! GER 52% திராவிட மாடல் உருட்டு - ஆதாரத்துடன் அம்பலமான புள்ளிவிவரம்!

Yuvaraj RamalingamBy : Yuvaraj Ramalingam

  |  12 July 2022 5:56 AM GMT


தேசிய அளவில் உயர் கல்வி மாணவர் சேர்ப்பு சராசரி 50 சதவிகிதத்தை தாண்ட வேண்டும் என்று இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதை GER என்று அழைப்பார்கள். அதாவது Gross enrolment ratio. பள்ளி படிப்பு முடித்து கல்லூரி சேரும் நபர்களின் எண்ணிக்கை ஆகும் இது. இதன் தேசிய சராசரி 27.1%. ஆனால் தமிழ்நாட்டின் சராசரி 51.4% என தமிழக நிதி அமைச்சர் தியாகராஜன் கூறினார்.

தமிழ்நாடு இந்த சராசரியை 15 வருடங்களுக்கு முன்பே அடைந்துவிட்டது. இதைத்தான் இப்போது தேசிய கல்விக்கொள்கை இலக்காக நிர்ணயித்து உள்ளது. இதைத்தான் கல்வியாளர்கள் பலரும் விமர்சனம் செய்து வருகிறார்கள்.தமிழ்நாடு கல்வியில் உலக நாடுகளை பின்னுக்கு தள்ளி முன்னணியில் உள்ளது. ஜெர்மனி, அமெரிக்காவில் கூட இவ்வளவு மாணவர் சேர்க்கை இல்லை என்றெல்லாம் பேசினார்.

இதை பற்றிய தெளிவான புரிதல் பெற நாம் முதலில் தெரிந்து கொள்ள வேண்டியது GER Ratio என்றால் என்ன என்று.

No. Students Enrolled for Higher Studies

GER Ratio = -------------------------------------------------------- X100

Population between 18-23 Years

சுருக்கமாக சொல்லவேண்டும் என்றால் ஒரு மாநிலத்தில் 18-23 வயதுள்ள நபர்கள் எவ்வளவு? அவர்களில் எத்தனை பேர் உயர் படிப்புகளில் (Higher Studies) சேர்க்கிறார்கள் (Enrollment).

ஆக GER Ratio என்பது இரண்டு வகையாக உயரும்

மாணவர்கள் அதிகம் கல்லூரியில் சேர்வதாலோ (High Enrollment)

அல்லது 18-23 வயது மக்கள்தொகை குறைவதாலோ (Decrease in 18-23 Population)

தமிழகத்தில் GER உயர்ந்திருப்பது இரண்டாவது வகை காரணத்தால். அதாவது 18-23 வயது மக்கள்தொகை குறைவே இங்கு GER 52% ஆக உயர்ந்திருப்பதற்கு காரணம். நம் மாநில அமைச்சர்களை போலவோ அல்லது தமிழக மூத்த பத்ரிக்கையாளர்களை போலவோ அவர்கள் சொல்வது தான் ஆதாரம் என்று இல்லாமல் அதெப்படி என்பதை ஆதராங்களோடு பாப்போம்.

GER Ratio என்பது மத்திய அரசு வெளியிடும் AISHE Report யில் வெளிவரும் தகவல். நாம் ஒப்பீடுக்காக எடுத்திருப்பது 2012- 13 மற்றும் 2019-20 ஆண்டுகளுக்கான Report.

AISHE 2012-13

https://dhte.py.gov.in/sites/default/files/aishe-final-report-2012-13.pdf

AISHE 2019-20

https://www.education.gov.in/sites/upload_files/mhrd/files/statistics-new/aishe_eng.pdf

AISHE 2019-20 Report பக்கம் T-19 (Table 19. Gross Enrolment Ratio (GER) in Higher Education (18-23 Years) தமிழகத்தில் 52% GER (Exactly 51.4%)என்று நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

18-23 வயதுள்ள மக்கள் தொகை

2012-13

இந்தியா => 14,05,58,699

தமிழகம் => 76,48,115

2019-20

இந்தியா => 14,23,28,704

தமிழகம் => 68,52,843

18-23 வயது மக்கள் தொகை தமிழகத்தில் 10.4% குறைந்துள்ளது மாறாக இந்திய அளவில் 18-23 வயது மக்கள் தொகை 1.3% உயர்ந்துள்ளது





No. Students Enrolled for Higher Studies(மாணவர் சேர்க்கை)

2012-13

இந்தியா => 3,01,52,417

தமிழகம் => 32,14,167

2019-20

இந்தியா => 3,85,36,359

தமிழகம் => 35,20,311

Students Enrolled for Higher Studies(மாணவர் சேர்க்கை) தமிழகத்தில் 9.5% உயர்ந்துள்ளது மாறாக இந்திய அளவில் 27.8% உயர்ந்துள்ளது.





மாணவர்கள் கல்லூரிகளில் சேரும் சதவீதம் என்பது இந்தியாவை விட மூன்று மடங்கு குறைவு என்றாலும் தமிழகத்தின் GER எப்படி உயர்ந்தது? காரணம் 18-23 மக்கள் தொகை இந்தியா அளவில் உயர தமிழகத்திலோ அது 10% குறைந்துள்ளது!. இதுவே GER Ratio வை உயர்த்தி காட்டியுள்ளது.

ஆக தமிழகத்தின் GER Ratio உயர்வதென்பது திராவிட மாடல் கொண்டுவந்த திட்டங்களின் மூலமாக கல்லூரிகளில் சேர்பவர்களின் எண்ணிக்கை கூடியதால் அல்ல.மாறாக தமிழகத்தின் 18-23 வயதுள்ளவர்களின் மக்கள் தொகை குறைந்துவருவதால்!

நிலைமை இப்படி இருக்க அதை தங்களுக்கு சாதகமாக வளைத்து கூறுவதில் நமது திராவிட வல்லுநர்கள் கைதேர்ந்தவர்கள். சரி தமிழகத்தில் GER 52% (Exactly 51.4%) என்று கூறிய அதே AISHE 2019-20 Report பக்கம் T-19 (Table 19. Gross Enrolment Ratio (GER) in Higher Education (18-23 Years) வேறுபல செய்திகளையும் சொல்லியுள்ளது.


Point 1:

உத்தர பிரதேஷ் மாநிலத்தில் Scheduled Tribe ஆண்கள் GER-> 39.9

ஆனால் தமிழக Scheduled Tribe ஆண்கள் GER-> 37 .7. ஒடுக்கப்பட்ட மக்களில் ஒடுக்கப்பட்ட பழங்குடியின மக்களின் Education Uttar Pradesh யில் தமிழகத்தை விட சிறப்பாக உள்ளது!!

Point 2:

யாருக்கான வளர்ச்சி??

Difference between Total GER and Scheduled Caste GER. (ALL GER - SC GER)

அதாவது SC மக்கள் ஏனைய மக்களைவிட எவ்வளவு GER பின்தங்கி உளார்கள் என்ற அளவீட்டை பாருங்கள்!!



மிக பெரிய மாநிலங்களை எடுத்து கொள்ளுங்கள் Maharashtra Karnataka Gujarat, Madhya Pradesh, Uttar Pradesh, Rajasthan Andhra என அணைத்து மாநிலங்களை விட தமிழகத்தில் தான் இந்த வித்தியாசம் அதிகம் உள்ளது!. உங்கள் வளர்ச்சி அணைத்து மக்களுக்கும் சமமாக சென்று சேர்கிறதா? ஏன் அதில் தமிழகம் பின் தங்கி உள்ளது?

குஜராத் மாநிலத்தில் பொது GER ஐ விட Scheduled Caste அதிகமாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி பல Interpretation களை செய்யலாம்!! இதற்கெல்லாம் பதில் இருக்கிறதா? GER Ratio அதிகமாக இருந்தும் நமக்கு மிக பெரிய பிரச்சனையாக இருப்பது NAS Survey யில் நம் மாணவர்களின் தகுதி குறைவாக இருப்பதாக வந்திருக்கும் முடிவுகள். Data வை தங்களுக்கு சாதகமாக Interpret செய்து அதை விளம்பரப்படுத்துவதை விட்டு விட்டு, NAS Survey வில் வந்துள்ள குறைபாடுகளை சரி செய்யுமா இந்த திராவிட மாடல்??

Input From: Edexlive


Next Story
கதிர் தொகுப்பு
Trending News