Kathir News
Begin typing your search above and press return to search.

வந்துவிட்டது புதிய தகவல் தொழில்நுட்ப திருத்த விதிகள் - தங்களுக்கு சொந்தமில்லாத தகவல்களை பகிர்வோருக்கு சிக்கல்!

மத்திய அரசின் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் தகவல் தொழில்நுட்ப விதிகள், 2021 இல் மாற்றங்களை முன்மொழிந்த சில மாதங்களுக்குப் பிறகு,

வந்துவிட்டது புதிய தகவல் தொழில்நுட்ப திருத்த விதிகள் - தங்களுக்கு சொந்தமில்லாத தகவல்களை பகிர்வோருக்கு சிக்கல்!
X

Soma SundharamBy : Soma Sundharam

  |  29 Oct 2022 11:30 AM GMT

மத்திய அரசின் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் தகவல் தொழில்நுட்ப விதிகள், 2021 இல் மாற்றங்களை முன்மொழிந்த சில மாதங்களுக்குப் பிறகு, வெள்ளிக்கிழமை (நேற்று) தகவல் தொழில்நுட்ப (இடைநிலை வழிகாட்டுதல்கள் மற்றும் டிஜிட்டல் மீடியா நெறிமுறைகள் சட்டத் தொகுப்பு) திருத்த விதிகள், 2022ஐ வெளியிட்டது.

2018-இல் கொண்டுவந்த விதிகள்

2018 ஆம் ஆண்டு நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரின் போது, ​​சமூக ஊடக தளங்களை தவறாக பயன்படுத்துதல் மற்றும் போலியான செய்திகளை பரப்புதல் தொடர்பான பிரச்சினை ஏற்றுக்கொள்ளப்பட்டது. பின்னர் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் 2011 ஆண்டு கொண்டுவந்த விதிகளுக்கு பதிலாக வரைவுத் தகவல் தொழில்நுட்ப (இடைநிலை வழிகாட்டுதல்கள்) விதிகளை 2018 அந்தாண்டு தயாரித்தது. அதைத்தொடர்ந்து அமைச்சகம் வாட்ஸ்ஆப் நிறுவனத்திற்கு எதிராக, "போலிச் செய்திகளைப் பரப்புவதற்கு உடந்தையாக இந்நிறுவனம் இருக்கிறது" என்று நோட்டீஸ் அனுப்பியது.

பிராஜாவாலா வழக்கும் - 2021 புதிய விதிகளும்

பிரஜாவாலா வழக்கு தொடர்பாக, 11 டிசம்பர் 2018 அன்று, உச்ச நீதிமன்றம், " சமூக வலைத்தளங்களிலிருந்து குழந்தைகளின் ஆபாசப் படங்கள், ஆபாசப் வீடியோக்கள் ஆகியவற்றை அகற்றுவதற்குத் தேவையான வழிகாட்டுதல்களை மத்திய அரசு உருவாக்கி இரண்டு வாரங்களுக்குள் செயல்படுத்தலாம் என்று கூறியது. பின்னர் அதைத்தொடர்ந்து 2020இல் பாராளுமன்றத்தில் குழந்தைகளின் ஆபாசப் படத்தின் விளைவுகள் பற்றி அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. சில மாதங்களுக்கு பிறகு 2022ம் ஆண்டு மத்திய அரசு புதிய தகவல் தொழில்நுட்ப விதிகளை கொண்டுவந்தது. இந்த விதிகள் கருத்துச் சுதந்திரத்தை பறிக்கிறது என்று தனியார் சமூகவளைதள செய்தி நிறுவனங்களான The Wire, The News Minute, Live Law, The Quintல் பணியாற்றும் சில பத்திரிக்கையாளர்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

டிவிட்டர் மற்றும் வாட்ஸ்ஆப் நிறுவனங்கள் தொடர்ந்த வழக்கு

சமூக வலைதள, ஊடக நிறுவனங்கள் இவ்விதிகளை பின்பற்ற வேண்டிய கடைசி தினமான மே 25, 2021 அன்று மத்திய அரசு கொண்டுவந்த இவ்விதிகளை எதிர்த்து சமூக ஊடக நிறுவனமான வாட்ஸ்ஆப் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து. இதை அமைச்சகம் வாட்ஸ்ஆப்பின் செயல் விதிகளை மீறியது என்று காட்டமாக பதிலளித்து. மேலும் மற்றொரு சமூக ஊடக நிறுவனமான ட்விட்டர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து பின்னர் அதே ஆண்டு அக்டோபர் மாதம் இதே சட்டங்களை ஏற்றது குறிப்பிடத்தக்கது

2022 இல் புதிய விதிகள் சொல்வது என்ன?

மத்திய அரசின் தொழில்நுடப் அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பின்படி, ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட மூன்று பேர் கொண்ட குறைகள், மேல்முறையீட்டுக் குழுக்களை (GAC) மத்திய அரசு இந்த அறிவிப்பு வந்த மூன்று மாதங்களுக்குள் அமைக்க வேண்டும் என இதில் கூறப்பட்டுள்ளது.


ஆபாசம், சட்டவிரோத, மற்றும் தேசிவிரோத உள்ளடக்கங்களுக்கு முற்றுப்புள்ளி

அமைச்சகம் வெளியிட்ட புதிய ஐடி விதிகளின்படி சமூக வலைத்தளம், சமூக ஊடகங்களில் வெயிடப்படும் கருத்துக்கள் ஆபாசம், மற்றொருவரின் தனி உரிமையை சீண்டுதல், வெறுப்பூட்டும் பேச்சு, சட்டவிரோத நடவடிக்கைகளை ஊக்குவித்தல் அல்லது இந்தியாவின் ஒற்றுமை, ஒருமைப்பாடு, பாதுகாப்பு அல்லது இறையாண்மைக்கு அச்சுறுத்தல் இல்லை என்பதை உறுதிசெய்வது சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் பொறுப்பு என புதிய திருத்த விதிகள் கூறுகின்றன.

அடுத்தவர்களின் தகவல்களை பகிர்வோருக்கு சிக்கல்!!

திருத்தப்பட்ட தகவல் தொழில்நுட்ப விதிகளின் கீழ், இடைத்தரகர் என்று குறிப்பிடப்படும் சமூக வலைத்தள மற்றும் சமூக ஊடக நிறுவனங்கள், பயனர்கள் தங்களுக்குச் சொந்தமில்லாத எந்த தகவல்களை இடுகையிடவோ அல்லது பகிரவோ கூடாது என்பதை உறுதிப்படுத்த வேண்டும்.

72 மணி நேரத்திற்குள் புகாரை தீர்க்க வேண்டும்

புதிய விதிகள், ஒழுங்குமுறைகள் மற்றும் தனியுரிமைக் கொள்கைகள் குறித்து சமூக வலைத்தள, சமூக ஊடக நிறுவனங்கள் தங்கள் பயனர்களுக்கு வருடத்திற்கு ஒரு முறையாவது தெரிவிக்க வேண்டும். மேலும், விதிகளை மீறும் பதவிக்கு எதிரான புகார் வந்தால், நிறுவனங்கள் அதை 24 மணி நேரத்திற்குள் ஒப்புக் கொள்ள வேண்டும் மற்றும் அதை 15 நாட்களில் தீர்க்க வேண்டும். மேலும், புகாரில் இடுகையை அகற்றுவதற்கான கோரிக்கை இருந்தால், 72 மணி நேரத்திற்குள் அதைச் செய்ய வேண்டும் என புதிய விதிகளில் கூறப்பட்டுள்ளது.

திருப்தி அடையாதவர்கள்

தங்கள் புகார் மீதான தீர்ப்பில் திருப்தி அடையாத பயனர்கள் 30 நாட்களுக்குள் அரசால் அமைக்கப்பட்ட குறைகள் மேல்முறையீட்டுக் குழுவை அணுகலாம். மேலும் மேல்முறையீட்டை 30 காலண்டர் நாட்களில் அரசால் அமைக்கப்பட்டக் குழு தீர்க்கும்.

ட்விட்டர் நிறுவனம் இந்த புதிய விதிகளுக்கு இணங்குமா?

நேற்று அமெரிக்காவைச் சேர்ந்த தொழலதிபர் எலன் மஸ்க், ட்விட்டர் நிறுவனத்தை தான் வாங்கிவிட்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். ஏற்கெனவே குறிப்பிட்டதைப் போல கடந்த ஆண்டு அதாவது மத்திய அரசின் 3 விவசாய சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராடி காலத்தில், இப்போராட்டத்தை வைத்து இந்திய இறையாண்மைக்கு எதிராக ட்விட்டரில் பலர் இடுகைகளை பதிவு செய்துவந்தனர். இதனை நீக்கும்படி மத்திய அரசு ட்விட்டரை கேட்டுக்கொண்டது ஆனால் ட்விட்டர் நிறுவனம், இது பயனர்களின் உரிமை அதனால் அப்பதிவுகளை நீக்க மறுப்பு தெரிவித்தது. மேலும் அதேஆண்டு தகவல் தொழில்நுட்ப விதிகளை மத்திய அரசு கொண்டுவந்தது. இதனை ஏற்கமறுத்த ட்விட்டர் நிறுவனம், நீதிமன்றம் சென்று வாதாடியது. பிறகு அதை ஏற்றுக்கொண்டது. இப்போது புதியதாக வெளியிட்டுள்ள திருத்த விதிகளை எலன் மஸ்க் தலைமையிலான ட்விட்டர் நிறுவனம் ஏற்றுக்கொள்ளுமா? அல்லது மறுபடியும் அரசிற்கு எதிராக போர்க்கொடி உயர்த்துமா? என்கிற கேள்வி எழுந்துள்ளது.

Writer - Soma Sundaram

Next Story
கதிர் தொகுப்பு
Trending News