Kathir News
Begin typing your search above and press return to search.

கடல் அடி கனிம வளத்துக்கு இந்தியா குறி? பதறும் சீனா - இனி சந்திராயன் அடுத்து சமுத்ராயன்!

கடல் அடி கனிம வளத்துக்கு இந்தியா குறி? பதறும் சீனா - இனி சந்திராயன் அடுத்து சமுத்ராயன்!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  15 Sep 2023 6:19 AM GMT

நிலவில் சாதனை படைத்த இந்தியா அடுத்து ஆழ் கடல் ஆய்விலும் இறங்கி உள்ளது. இந்திய அரசால் தொடங்கப்பட்ட ஆழ்கடல் இயக்கத்தின் கீழ், ஆழ்கடல் ஆய்வுக்காக மனிதர்களால் இயக்கப்படும் நீர்மூழ்கிக் கப்பலை உருவாக்க முன்மொழியப்பட்டுள்ள இந்த திட்டத்திற்கு சமுத்ராயன் என பெயரிடப்பட்டுள்ளது. க­ட­லுக்­குள் மனி­தர்­களை அனுப்­பும் சமுத்­ரா­யன் திட்­டம் எதிர்­வ­ரும் 2026ம் ஆண்­டில் நிறை­வு­பெ­றும் என மத்­திய இணை அமைச்­சர் ஜிதேந்­திர சிங் தெரி­வித்­துள்­ளார். இதன் பின்னணி என்ன? இதன் மூலம் இந்தியாவுக்கு என்ன நன்மைகள் கிடைக்க போகிறது என்பதை பார்க்கலாம்.

இந்திய கடல் வளம்

இந்தியாவின் கடற்கரையின் மொத்த நீளம் 7516 கி.மீ ஆகும். இதில் 13 பெரிய துறைமுகங்களும், 187 நடுத்தர மற்றும் சிறிய துறைமுகங்களும் கொண்டு அமைந்துள்ளது. இத்துறைமுகங்களின் வழியாக 95 சதவீத வெளிநாட்டு வணிகம் நடைபெறுகிறது. வெறும் வணிகத்தோடு நின்று விடாமல் கடல் அடியில் உள்ள வளங்களை முறையாக பயன்படுத்த இந்தியா நினைக்கிறது.

சமுத்­ரா­யன் திட்­டம் மூலம் கடலின் அடியில் 6 ஆயிரம் மீட்டர் ஆழத்தில் உள்ள பாலிமெட்டாலிக் கனிம வளங்களைக் கண்டறியவும், அது குறித்து ஆராயவும் நீர் மூழ்கி கப்பல் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த பாலிமெட்டாலிக் கனிமத்தில் இரும்பு மற்றும் மாங்கனீஸ் ஆக்ûஸடுகள் அதிகமாகக் காணப்படுகிறது. கடலின் ஆழத்தில் காணப்படும் பல்லுயிர்களைப் பற்றி தெரிந்துகொள்வதிலும், ஆராய்வதிலும் இந்த நீர்மூழ்கிக் கப்பல் முக்கிய பங்கு வகிக்கிறது. அமெரிக்கா, பிரான்ஸ், ஜப்பான், ரஷியா உள்ளிட்ட நாடுகளில் மட்டுமே இந்த கப்பல் வசதி உள்ளது. இந்திய கடல் பகுதியில் மொத்தம் 380 மில்லியன் மெட்ரிக் டன் கனிம வளங்கள் இருப்பதாக ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது.

கடலில் இருந்து பெறப்பட்ட கனிமங்கள்

கடலில் உலோக படிவுகள் இருப்பது முதன்முறையாக 1965 ஆம் ஆண்டு வெளிச்சத்திற்கு வந்தன. இரண்டு கிலோமீட்டர் ஆழத்தில் அட்லாண்டிஸ் கடல் வடிவப் படுகையில் உலோகப் படிவுகள் காணப்படுகின்றன. 1000-3000மீ ஆழத்தில் குளிர்ந்த கடல்நீருடன் சூடான நீரூற்று திரவங்களின் கலவையால் கடலுக்கு அடியில் சல்பைடுகள் உருவாகின்றன. ஃபெரோமாங்கனீசு மேலோடு கோபால்ட், நிக்கல், பிளாட்டினம், டைட்டானியம், மாங்கனீசு மற்றும் இரும்பு படிவுகளும் கடலில் கிடைக்கிறது. கடலில் 400-4000 மீட்டர் ஆழத்தில் காணப்படுகின்றன. இவற்றை கண்டறிவது மூலம் பெரிய அளவில் பொருளாதார நன்மை ஒரு நாட்டுக்கு கிடைக்கும்.

சமுத்ராயன் திட்டம் (Samudrayaan)

இந்தியாவின் சமுத்ராயன் திட்டம் ஆழ்கடல் வளங்களை ஆய்வு செய்வதற்கும் பல்லுயிர் மதிப்பீடுகளை நடத்துவதற்கும் வடிவமைக்கப்பட்டுள்ள திட்டம் ஆகும். நீரில் மூழ்கக்கூடிய வாகனத்தில் 6000 மீட்டர் ஆழத்திற்கு மூன்று பணியாளர்களை அனுப்ப உள்ளது. தேசிய கடல் தொழில்நுட்ப நிறுவனம் (NIOT – National Institute Of Ocean Technology) நீர்மூழ்கியை வடிவமைத்து உருவாக்குகிறது. இந்த நீர்மூழ்கிக் கப்பல், சாதாரண செயல்பாட்டின் கீழ் 12 மணிநேரமும் மற்றும் மனித பாதுகாப்புக்காக அவசரகாலத்தில் 96 மணிநேரமும் தாங்கும் திறன் கொண்டது ஆகும்.

இந்திய நாட்டின் பொருளாதார வளர்ச்சி மற்றும் வாழ்வாதாரத்திற்காக கடல் வளங்களை நிலையான முறையில் பயன்படுத்துவதை நோக்கமாக இந்த திட்டம் கொண்டுள்ளது. இது ஆழ்கடல் ஆய்வுகளை மேற்கொள்ள புவி அறிவியல் அமைச்சகத்திற்கு (MOES – Ministry Of Earth Sciences) உதவும். சமுத்திரயான் திட்டத்தை உள்ளடக்கிய ஆழ்கடல் பணிக்கான செலவு ஐந்தாண்டு காலத்தில் ரூ.4,077 கோடிகள் ஆகும்.

நோக்கம்

சமுத்ராயன் திட்டம் மூலம் கடலுக்கு அடியில்,நிக்கல், கோபால்ட், மாங்கனீசு, பூமியின் அரியதாதுக்கள் போன்ற கனிம வளங்களை கண்டுபிடிக்கப்பட உள்ளது. அறிவியல் ஆராய்ச்சி தவிர, கடலுக்கு அடியில் உள்ள இயற்கை வளங்களை ஆய்வு செய்யவும், ஆழ் கடல் சுற்றுலா பணிகளைத் தொடங்கவும் மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் புளூ எக்கானமி எனப்படும் கடல் சார்ந்த பொருளாதாரத்திலும் இந்தியா அடுத்த கட்டத்தை நோக்கி பயணிக்கும்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News