வரலாற்றை மாற்றிய மோடி: பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரையும் சேர்த்து புதிய இந்திய வரைபடம் வெளியிட்ட அமீரகம்! - ஓர் அலசல்
By : Kathir Webdesk
சுதந்திரத்தின் போது இந்தியாவில் இருந்து தனி நாடாக பிரிந்து சென்ற பாகிஸ்தான், காஷ்மீரை அத்துமீறி கைப்பற்ற முனைந்த போது, காஷ்மீர் மன்னரான மகாராஜா ஹரி சிங், இந்தியாவுடன் மேற்கொண்ட ஒப்பந்தத்தின் மூலம் காஷ்மீர் மாநிலம் இந்தியாவின் பகுதியாக மாறியது.
அப்போது காஷ்மீரின் மேற்கு பகுதி கிளர்ச்சியாளர்கள் வசம் போனது. அதை சாதகமாக்கி கொண்ட பாகிஸ்தான் காஷ்மீரின் மேற்கு பகுதியை ஆக்கிரமித்து கொண்டது. அதுவே இன்றளவும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் எனப்படுகிறது.
சுதந்திரம் பெற்ற காலத்தில் இருந்தே இந்தியா அதன் மீது சொந்தம் கொண்டாடி வந்தாலும், ஜி20 மாநாட்டுக்கு பிறகு புது வெளிச்சம் கிடைத்துள்ளது. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் நிலப்பரப்பையும் சேர்த்து புதிய இந்திய வரைபடத்தை ஐக்கிய அரபு அமீரக துணை பிரதமர் சயீப் பின் ஜாயத் அல் நயான் தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டார். அதில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீருடன் முழு காஷ்மீரும் இந்தியாவின் பகுதியாக காட்டப்பட்டுள்ளது.
ஜி20 மாநாட்டில் மத்திய கிழக்கு நாடுகள் மற்றும் ஐரோப்பிய நாடுகளை இந்தியாவுடன் கடல் மற்றும் ரயில் போக்குவரத்தில் இணைக்கும் மிகப்பெரிய திட்டத்துக்கு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. அப்போது இந்திய பிரதமர் மோடி, சவுதி அதிபர் முகமது பின் ஜாயத் அல் நயான், அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ஆகிய 3 பேரும் ஒன்றாக பேச்சுவார்த்தை நடத்தினர்.
இந்தியாவுடன் சவுதி தற்போது உறவை பலப்படுத்தி உள்ளது. அமெரிக்காவும் இணைந்திருப்பதால் இந்த புதிய இந்திய வரைபடம் பாகிஸ்தானுக்கு சர்வதேச அளவில் பின்னடைவாக கருதப்படுகிறது.
கடந்த காலங்களில் காஷ்மீர் விஷயத்தில் பல இஸ்லாமிய நாடுகள் பாகிஸ்தானுக்கு ஆதரவாக இருந்தன. ஆனால், தற்போது நிலைமை மாறிவிட்டது. இந்தியாவுடன் உறவை பலப்படுத்திக் கொள்ள இஸ்லாமிய நாடுகளும் தயாராகிவிட்டன.
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் நிலை
ஆசாத் காஷ்மீரின் மக்கள்தொகை, 2017 மக்கள் தொகை கணக்கெடுப்பின் 40 லட்சம். அரசாங்கத்தின் இணையதளம் எழுத்தறிவு விகிதம் 74% என்று தெரிவிக்கிறது. ஆசாத் ஜம்மு காஷ்மீர் கிட்டத்தட்ட முழுக்க முழுக்க முஸ்லீம் மக்களைக் கொண்டுள்ளது. கிறிஸ்தவ சமூக அமைப்புகளால் பராமரிக்கப்படும் தரவுகளின்படி, இப்பகுதியில் சுமார் 4,500 கிறிஸ்தவர்கள் வசிக்கின்றனர். இருப்பினும்,குடியிருப்பு அந்தஸ்து மற்றும் சொத்து உரிமைகளைப் பெற கிறிஸ்தவ சமூகம் போராடி வருகிறது.
ஆசாத் காஷ்மீர் எனப்படும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் தற்காலிக அரசியலமைப்பு சட்டம், 1974 மூலம் நிர்வகிக்கிறது. ஒரு ஜனாதிபதி, பிரதமர் மற்றும் சபையைக் கொண்டுள்ளது. ஆனால் அரசியல் அமைப்புக்கு அதிகாரம் இல்லை. பாகிஸ்தான் அரசாங்கத்திற்கு உட்பட்டது.
வரலாற்று ரீதியாக ஆசாத் காஷ்மீரின் பொருளாதாரம் விவசாயமாக இருந்து வருகிறது. ஆசாத் காஷ்மீரின் பட்ஜெட் மற்றும் வரி விவகாரங்கள், பாகிஸ்தானின் மத்திய வருவாய் வாரியத்தால் கையாளப்படாமல், ஆசாத் ஜம்மு காஷ்மீர் கவுன்சிலால் கையாளப்படுகின்றன. ஆசாத் ஜம்மு மற்றும் காஷ்மீர் கவுன்சில் என்பது 14 உறுப்பினர்களைக் கொண்ட ஒரு உச்ச அமைப்பாகும், ஆசாத் ஜம்மு மற்றும் காஷ்மீர் அரசாங்கத்தின் 8 உறுப்பினர்களும், பாகிஸ்தான் அரசாங்கத்தின் 6 உறுப்பினர்களும் உள்ளனர்.
இங்கே அரசியலமைப்பின் படி, பாகிஸ்தானுக்கு விசுவாசமாக இருக்கும் அரசியல் கட்சிகள் மட்டுமே இருக்க அனுமதிக்கப்படுகின்றன. வெறும் கட்டுப்பாட்டு அளவில் மட்டுமே பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பாகிஸ்தான் வசம் உள்ளதால் அங்கு திட்டங்கள் செயல்படுத்த முடியாமல் கடுமையான பொருளாதார நெருக்கடி நிலவி வருகிறது.