அங்கே பாரு நிலாவுக்கே போய்ட்டாங்க...! இங்க சோத்துக்கு சிங்கி அடிக்கிறோம்...! புலம்பும் பாக்கிஸ்தான்...
By : Mohan Raj
தலைநிமிர்ந்த இந்தியா...! ஏங்கி பெருமூச்சு விடும் பாகிஸ்தான்...!
2014 ஆம் ஆண்டிற்கு முன்பு இருந்த இந்தியா வேறு, தற்போது இருக்கும் இந்தியா வேறு! என்பதை உறுதியாக சொல்லும் அளவிற்கு முன்னேற்றத்தை இந்தியா தற்போது அடைந்துள்ளது.
வளர்ச்சி பணிகளிலும், கட்டமைப்பு பணிகளிலும் மற்ற நாடுகளுடன் தோழமை பாராட்டும் பணிகளிலும் இந்தியா தற்போது சிறந்து விளங்குகிறது. பிரதமர் நரேந்திர மோடி ஒவ்வொரு நாட்டின் பெருமை மிகுந்த விழாக்களின் சிறப்பு விருந்தினராக அழைக்கப்படுகிறார். அங்கு சென்று அவர் இந்தியாவின் பெருமைகளை உலக நாடு எங்கும் பரப்பி வருகிறார். அது மட்டும் அல்லாமல் தற்போது இந்தியா அடைந்த சாதனைகளை பட்டியலிட்டுக்கொண்டே செல்லலாம்,
அதாவது உலக நாடுகள் அனைத்தையும் திரும்பி பார்க்க வைக்கின்ற சந்திரயான் மூன்று விண்கலம் நிலவின் தென் துருவத்தில் வெற்றிகரமாக இறங்கி இதுவரை எந்த நாடும் தென்துருவத்தை அடையாத ஒரு சாதனையை இந்தியா அடைந்தது. மேலும் ஜி 20 மாநாட்டின் தலைமைப் பொறுப்பை ஏற்று அதனை சிறப்பாக நடத்தி முடித்துள்ளது. மேலும் இந்தியா முழுவதும் ரயில் சேவையின் முன்னுதாரணமாக கருதுகின்ற வந்தே பாரத் ரயில் மக்கள் மத்தியில் அதிக வரவேற்புகளை பெற்று வருகிறது.
இந்த சூழ்நிலையில் தான் புதிய நாடாளுமன்றம் கட்டப்பட்டு முறைப்படி திறந்து வைக்கப்பட்டது. அந்த புதிய நாடாளுமன்றமும் தற்போது பயன்பாட்டிற்கு வந்து அது குறித்த வீடியோக்களும் சமூக வலைதளத்தில் வைரலாகியது. இது மட்டுமல்லாமல் சூரியனையே ஆய்வு செய்வதற்காக ஆதித்யா எல்- ஒன் என்ற விண்கலத்தை இந்தியாவின் செலுத்தியதும் உலக நாடுகள் மத்தியில் இந்தியா வளர்ந்து வருகிறது என்பதற்கு உதாரணங்களாக கூறப்படுகிறது. மேலும் பொருளாதாரத்தில் மூன்றாவது பெரிய வளர்ந்த நாடாக இந்தியா தற்போது கருதப்படுகிறது. இத்தனை பெருமைகளை தாங்கி நிற்கும் இந்தியா மீது எப்பொழுதும் தாக்குதலையும் போர் மனப்பான்மையிலே செயல்பட்டுக் கொண்டிருந்த பாகிஸ்தானிலிருந்து இந்தியாவை பெருமை பாராட்டி பேசும் சில சம்பவங்கள் தற்போது நடந்து வருகிறது.
அந்த வகையில் சந்திரன் மூன்று விண்கலம் வெற்றிகரமாக நிலவில் தரை இறங்கியதற்கு பாகிஸ்தானை சேர்ந்த ஒரு நடிகை தனது சமூக வலைதளத்தில் இந்தியாவின் பெருமையை பார்த்து வியந்து பதிவிட்டிருந்தார். ஏனென்றால் தற்போது பாகிஸ்தானின் நிலைமை என்பது மிகவும் பரிதாபமானதாகவும் அங்கு நிலவிய பொருளாதார நெருக்கடி மற்றும் அரசியல் காரணங்களால் இலங்கையில் ஏற்பட்டது போன்ற சூழ்நிலையை தற்போது பாகிஸ்தான் சந்தித்து வருகிறது. இந்த பொருளாதார நெருக்கடி காரணமாக பாகிஸ்தானில் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது.
இந்த நிலையில் தனது சிகிச்சைக்காக லண்டனுக்கு சென்ற பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப், பி எம் எல் என் கட்சித் தலைவர்களின் ஆலோசனை கூட்டத்தில் லண்டனில் இருந்தபடியே காணொளி காட்சி மூலமாக பங்கேற்றார். அந்த கூட்டத்தில் பங்கேற்ற நவாஸ் ஷெரீப், இந்தியா நிலாவிற்கு செல்கிறது, ஜி-20 மாநாட்டை நடத்துகிறது இத்தனை சாதனைகளை செய்து கொண்டிருக்கிறது இந்தியா. ஆனால் நமது பாகிஸ்தான் பிரதமரோ நிதிக்காக ஒவ்வொரு நாட்டிடமும் பிச்சை ஏந்தி வருகிறார்! இந்தியாவால் செய்ய முடியும் சாதனையை பாகிஸ்தானால் ஏன் செய்ய முடியவில்லை? இதற்கெல்லாம் யார் பொறுப்பு? என்று புலம்பி உள்ளார்.
தற்போது இந்திய அடைந்திருக்கும் வளர்ச்சி அபாரமானது ஆனால் இந்தியா தனது பொருளாதாரத்தை சீர்திருத்தம் செய்த பொழுது தான் நாமும் நம் பொருளாதாரத்தை சீர்திருத்தம் செய்தோம் ஆனால் தற்போது நம் மக்கள் அனைவரும் உணவிற்கே திண்டாடி வருகின்றனர் என்று பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் புலம்பியதோடு அந்நாட்டில் நிலவும் மக்களின் கருத்துக்களும் இதுவாக உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.