டன் கணக்கில் சிக்கிய கேரளாவின் குப்பை லாரி - கிளைமாக்ஸ் தான் ட்விஸ்டே..!
By : Mohan Raj
கேரளாவில் இருந்து தமிழகத்துக்கு வரும் ஆபத்து...!
கேரளாவில் இயற்கை சூழலை காப்பாற்ற அங்கு விதிமுறைகள் அதிகம், குறிப்பாக மணல் அள்ளுவது, மலையை வெட்டுவது, கற்கள் உடைப்பது என்பது போன்ற இயற்கையை சுரண்டி அங்கு எதுவும் பாழ்படுத்த முடியாது. இது இயற்கையை காப்பாற்றவேண்டும் என்பதற்காக சட்டமாகவே, விதிமுறையாகவே கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
அது மட்டுமல்லாமல் மண்ணுக்கு கேடு விளைவிக்கும் பிளாஸ்டிக் கழிவுகள், சுகாதார தீங்கு விளைவிக்கும் இறைச்சி கழிவுகள் மற்றும் முறையாக அப்புறப்படுத்தாமல் ஒதுக்கப்படும் மருத்துவக் கழிவுகள் என கழிவுகள் எல்லாம் டன் தமிழகத்தில் வந்து கொட்டப்படுகிறது என கேரள எல்லை மாவட்டத்தில் இருந்து பல புகார்கள் அப்போது செய்திகளாக வந்த வண்ணம் உள்ளன.
இந்த நிலையில் கேரளவில் இருந்து இது போன்ற கழிவுகளை ஏற்றி வந்த லாரியை தமிழக எல்லையான களியக்காவிளையில் இளைஞர்கள் மடக்கிப் பிடித்துள்ளனர். அப்பொழுது மடக்கிப்பிடித்து அதை வீடியோ எடுத்து இணையத்தில் பரவ விட்டுள்ளனர், அந்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகிறது.
மேலும் அந்த கழிவுகளை ஏற்றி வந்த லாரியை மடக்கி பிடித்த இளைஞர்கள் மற்றொரு விடீயோவையும் வெளியிட்டுள்ளனர். அதில் கழிவுகள் ஏற்றிவந்த லாரி டிரைவரை காவல்துறை வசம் பிடித்து ஒப்படைத்ததாகவும், அப்படி ஒப்படைத்ததற்கு பின்னர் அங்கிருந்து திமுக பிரமுகர் ஒருவர் அந்த ஓட்டுநரை அழைத்துச் சென்றதாகவும் வேறு சிலர் காட்சிகளை வெளியிட்டுள்ளனர்.
அந்த திமுக பிரமுகர் செல்லும் கார் கூட வீடியோ எடுக்கப்பட்டு இணையத்தில் உலா வருகிறது.
இப்படி கேரளத்தின் கழிவுகள் தமிழகத்தில் கொட்டப்படுகிறது தமிழகத்தின் வளம் பாழ்படுத்தப்படுகிறது என மாநில எல்லைகளின் வசிக்கும் மக்கள் குறிப்பாக இளைஞர்கள் கொந்தளிப்பில் இருக்கும் பொழுது இது குறித்து முறையான நடவடிக்கைகளோ மாநில அரசின் அறிவிப்பு வரவில்லை என்பதும் பொதுமக்களின் ஆதங்கமாகவே இருந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.