இந்தியாவின் அறிவியல் வளர்ச்சிக்கு காரணம் நேருவா? காங்கிரஸ் கட்டமைத்த போலி பிம்பம் உடைந்தது - ஓர் பார்வை!
By : Kathir Webdesk
சந்திராயன் வெற்றி குறித்து இஸ்ரோவை புகழாமல் நேருவுக்கு புகழாரம் சூட்டிய எதிர்கட்சி எம்பிக்களுக்கு பெங்களூரு பாஜக எம்பி தேஜஸ்வி சூர்யா பதிலடி கொடுத்தார். இந்தியாவின் அறிவியல் வளர்ச்சிக்கு நேரு காரணமே இல்லை என்பதை தெளிவாக வெளிச்சம் போட்டு காட்டினார். இந்தியாவின் அறிவியல் அமைப்புகள் சுதந்திரத்துக்கு முன் உருவாக்கப்பட்டது. 1942ல் நாடு சுதந்திரம் அடையவில்லை. அப்போது ஆற்காடு ராமசாமி முதலியார் CSIR அமைப்பை சாந்தி ஸ்வரூப் பட்நாகர் உதவியுடன் உருவாக்கினார். நாட்டின் முக்கிய ஆராய்ச்சி அமைப்புகளில் CSIR ஒன்றாகும் என தெரிவித்தார். அவர் சொன்ன க்ஸிற் அமைப்பு பற்றி விரிவாக பார்ப்போம்.
வரலாறு
1930களில் இந்தியாவில் ஆராய்ச்சி நிறுவனங்களை நிறுவ வேண்டிய அவசியம் ஏற்பட்டது. சி.வி. ராமன் , லெப்டினன்ட் கர்னல் சேமோர் செவெல் மற்றும் ஜே.சி. கோஷ் போன்ற புகழ்பெற்ற குடிமக்கள் அறிவியல் ஆராய்ச்சிக்கான ஆலோசனைக் குழுவை உருவாக்க முன்மொழிந்தனர்.
ஆற்காடு ராமசாமி முதலியார் இந்தியாவில் சிஎஸ்ஐஆர் உருவாக்கத்தில் மிக முக்கியமானவராக விளங்கினார். வைஸ்ராயின் நிர்வாகக் குழுவின் உறுப்பினராகவும், வணிகவியல் உறுப்பினராகவும் இருந்தார். அவரது விடாமுயற்சியால்தான் அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி வாரியம் 1 ஏப்ரல் 1940ல் உருவாக்கப்பட்டது. முதலியார் வாரியத் தலைவர் ஆனார். இந்த நிலையில்தான் பட்நாகர் இயக்குநராக, வாரியத்தை இயக்குவதற்கு நியமிக்கப்பட்டார். அப்போது ஆண்டு பட்ஜெட்டாக ₹5,00,000 ஒதுக்கப்பட்டது. 1940ம் ஆண்டின் இறுதியில், சுமார் 80 ஆராய்ச்சியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டனர். அவர்களில் கால் பகுதியினர் நேரடியாக வேலை செய்தனர்.
பின்னர் முதலியார் மற்றும் பட்நாகர் தலைமையில் ஒரு தன்னாட்சி அமைப்பாக அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சிலின் (CSIR) அரசியலமைப்பு தயாரிக்கப்பட்டது. இவ்வாறு, CSIR ஆனது 26 செப்டம்பர் 1942ல் செயல்பாட்டுக்கு வந்தது. 1943ல் CSIR தேசிய இரசாயன ஆய்வகம், தேசிய இயற்பியல் ஆய்வகம், எரிபொருள் ஆராய்ச்சி நிலையம், கண்ணாடி மற்றும் மண்பாண்ட ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் தேசிய உலோகவியல் ஆய்வகம் ஆகிய ஐந்து தேசிய ஆய்வகங்களை நிறுவுவதற்கான முன்மொழிவுக்கு ஒப்புதல் அளித்தது. இந்த ஐந்து நிறுவனங்களும் 1950ல் முடிக்கப்பட்டன.
இப்போதைய வளர்ச்சி
CSIRஇப்போது நாடு முழுவதும் 39 ஆய்வகங்களையும் மற்றும் 50 களப்பணி நிலையங்களையும் கொண்டுள்ளது. இதில் 17000 மேற்பட்ட பணியாளர்கள் பணிபுரிகின்றனர். இதன் ஆய்வு மற்றும் வளர்ச்சிப் பணிகளின் துறைகளாக விண்வெளிப் பொறியியல் (Aerospace Engineering), கட்டப்பொறியியல் (Structural Engineering), கடல் அறிவியல், மூலக்கூறு உயிரியல், மாழையியல், வேதி, சுரங்கம், உணவு, பெட்ரோலியம், தோல் மற்றும் சூழல் ஆகியனவற்றில் ஆளுகைச் செலுத்தி வருகின்றன. அறிவுசார் சொத்துரிமையைப் பொறுத்தவரை, CSIR சர்வதேச அளவில் 2971 காப்புரிமைகளையும், இந்தியாவில் 1592 காப்புரிமைகளையும் கொண்டுள்ளது. CSIR தொடங்கப்பட்டதில் இருந்து உலகளவில் 14000க்கும் மேற்பட்ட காப்புரிமைகள் வழங்கப்பட்டுள்ளன.
CSIR சாதனைகள்
1950 ஆம் ஆண்டில் இந்தியாவின் முதல் செயற்கை மருந்தான மெத்தகுலோனை உருவாக்கியது
1967 இல் ஸ்வராஜ் என்ற முதல் இந்திய டிராக்டரை முற்றிலும் உள்நாட்டு அறிவை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கினர்.
அந்தமானிய பழங்குடியினரின் மரபணு வேறுபாட்டை முதலில் பகுப்பாய்வு செய்து 60,000 ஆண்டுகளுக்கு முன்பு ஆப்பிரிக்காவில் இருந்து அவர்களின் தோற்றத்தை நிறுவியது.
மனிதர்களில் புற்றுநோய்க்கான மருந்து பரிசோதனைக்காக முதல் டிரான்ஸ்ஜெனிக் டிரோசோபிலா மாதிரியை உருவாக்கியது
மிக நவீன மூலக்கூறு வடிகட்டுதல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி டிக்பாயில் உள்ள இந்தியாவின் நூறு ஆண்டுகள் பழமையான சுத்திகரிப்பு நிலையம் புதுப்பிக்கப்பட்டது
2011 ஆம் ஆண்டில், நேஷனல் ஏரோஸ்பேஸ் லேபரேட்டரிஸ் மற்றும் மஹிந்திரா ஏரோஸ்பேஸ் ஆகியவற்றுடன் இணைந்து தயாரிக்கப்பட்ட இந்தியாவின் முதல் உள்நாட்டு சிவிலியன் விமானமான NAL NM5 வெற்றிகரமாக சோதிக்கப்பட்டது
2020 ஆம் ஆண்டில், கோவிட்-19 நோயாளிகளின் இறப்பு விகிதத்தைக் குறைக்க செப்சிவாக்கின் செயல்திறனை மதிப்பிடுவதற்கான மருத்துவப் பரிசோதனைகள் தொடங்கப்பட்டன