Kathir News
Begin typing your search above and press return to search.

மலை கோயில்களுக்கு கேபிள் கார் திட்டம்: திமுக தேர்தல் வாக்குறுதியில் சொன்ன கனவுகள் - ஓர் அலசல்!

மலை கோயில்களுக்கு கேபிள் கார் திட்டம்: திமுக தேர்தல் வாக்குறுதியில் சொன்ன கனவுகள் - ஓர் அலசல்!
X

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  28 Sep 2023 1:20 AM GMT

தமிழகத்தில் முக்கிய மலைக்கோயில்களான திருத்தணி, சோளிங்கர், திருநீர்மலை, திருச்சிமலைக்கோட்டை, திருச்செங்கோடு, போன்ற கோயில்களில் கேபிள்கார் வசதிகள் அமைக்கப்படும் 2021 திமுக தேர்தல் வாக்குறுதியில் சொல்லப்பட்டிருந்தது. ஆனால் இதுவரை ஒரு மலை கோயிலில் கூட அதற்கான அடிக்கல் கூட நாட்டப்படவில்லை.

தமிழகத்தின் முதல் ரோப் கார் சேவை

முதன் முதலில் பழனி கோவிலில் பக்தர்களுக்காக ரோப்கார் வசதி 2004ல் கொண்டு வரப்பட்டது. அப்போது ஜெயலலிதா ஆட்சியில் இருந்தார். இப்போது மொத்த பயண நேரம் வெறும் 3 நிமிடங்கள் மட்டுமே. மலை ஏறும் போது 15 பேரும், கீழே இறங்கும் போது 13 பேரும் மட்டுமே பயணிக்க முடியும். தற்போதுள்ள ரோப் காரில் ஒரு மணி நேரத்தில் 400 பக்தர்கள் மட்டுமே செல்ல முடியும். 73.83 கோடி செலவில் இரண்டாவது ரோப் காரை உருவாக்க தமிழக அரசு அனுமதி வழங்கியதையடுத்து, சென்னையைச் சேர்ந்த தனியார் நிறுவனம் பிரான்சைச் சேர்ந்த நிறுவனத்துடன் இணைந்து இரண்டாவது ரோப் காரை உருவாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ள மலை கோயில்கள்

தமிழ்நாட்டில் மலைக் கோயில்கள் தோன்றிய விதம், காலம் என்பவை பற்றி அறுதியிட்டு கூறமுடியாது போனாலும், மிகப் பழைய காலம் முதலே மலை மீது கோயில்கள் இருந்தது குறித்த சான்றுகள் உண்டு. தமிழர் பண்பாட்டில் மலையும் மலை சார்ந்த பகுதியுமான குறிஞ்சித் திணைக்கு உரிய கடவுளாக முருகன் கொள்ளப்படுவதனால், தமிழ்நாட்டில் முருகனுக்கு உரிய கோயில்கள் பல மலைக் கோயில்களாக இருப்பதைக் காணலாம். எனினும், முருகனைத் தவிரப் பிற இந்துக் கடவுளருக்கும் மலைமீது கோயில்கள் உள்ளன.

சில முக்கிய மலை கோயில்கள்

திருத்தணி முருகன் கோயில்

பழனி முருகன் கோவில்

திருப்பரங்குன்றம்

பழமுதிர்சோலை

சுவாமிமலை

குன்றக்குடி முருகன் கோவில்

விராலிமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில்

திருச்சி உச்சிப்பிள்ளையார் கோயில்

வெள்ளியங்கிரி மலை ஆண்டவர் கோயில்

சுந்தரமகாலிங்கம் மலைக்கோயில்

திருவெறும்பூர் எறும்பீசுவரர் கோயில்

திருஈங்கோய்மலை மரகதாசலேசுவரர் கோயில்

உய்யக்கொண்டான் மலை உஜ்ஜீவநாதர் கோயில்

இப்படி எண்ணற்ற மலை கோயில்கள் இருந்தும். அங்கு மக்கள் முறையாக சென்று வருவதற்கான அடிப்படை கட்டமைப்புகள் இன்னும் பல கோயில்களில் இந்து சமய அறநிலையத்துறையால் ஏற்படுத்தி தரப்படவில்லை.

எல்லா கோயில் குடமுழுக்கு என்னாச்சு?

தமிழகம் முழுவதும் உரிய காலம் கடந்தும் குடமுழுக்கு விழாக்கள் நடத்தப்படாத கிராமக் கோயில்கள் உள்ளிட்ட அனைத்துக் கோயில்களிலும் குடமுழுக்கு விழாக்கள் நடத்தப்படும். இதற்காகக் கழக அரசு 1000 கோடி ரூபாயினை ஒதுக்கீடு செய்யும் தேர்தல் வாக்குறுதியில் சொல்லபட்டு இருந்தது. ஆனால் கோயில்களை புனரமைக்க தமிழக பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்ட நிதி சொற்ப அளவே ஆகும்.

ஆன்மீக பயணம் செல்ல நிதியுதவி

தமிழகத்தில் உள்ள இந்து சமய மக்களின் வழிபாட்டு உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் வகையில் அவர்கள் இராமேஸ்வரம், காசி, கேதார்நாத், பத்ரிநாத், திருப்பதி, பூரி ஜகன்னாதர் ஆலயம் முதலிய திருக்கோயில்கள் ஏதேனும் ஒன்றுக்கு ஆன்மிகச் சுற்றுலா செல்வதற்கும்; இத்திட்டத்தின்கீழ் ஆண்டுக்கு ஒருமுறை பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டு, அவர்களின் பயணத்திற்காக அதிகபட்சம் 25 ஆயிரம் ரூபாய் வரை ஒரு லட்சம் பேருக்கு நிதியுதவிகள் வழங்கப்படும். இந்தத் திட்டம் தமிழ்நாடு அரசு சுற்றுலா துறை மூலமாகச்செயல்படுத்தப்படும் என கூறப்பட்டிருந்தது. ஆனால் ஹஜ், ஜெருசலேம் புனித பயணங்களுக்கு காட்டப்படும் ஈடுபாடு, இந்து ஆன்மீக பயணங்களுக்கு கொடுக்கப்படவில்லை.


Next Story
கதிர் தொகுப்பு
Trending News