Kathir News
Begin typing your search above and press return to search.

"இந்தி தெரியாது போடா" என்ற தி.மு.கவே இந்தியில் எழுத ஆட்களை தேடுது - கிழியும் முகத்திரை - பின்னணி பார்வை!

இந்தி தெரியாது போடா என்ற தி.மு.கவே இந்தியில் எழுத ஆட்களை தேடுது - கிழியும் முகத்திரை - பின்னணி பார்வை!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  1 Oct 2023 12:01 PM GMT

இந்தி மொழியை எதிர்ப்பேன்; இந்தியை தமிழ்நாட்டில் நுழைய விட மாட்டோம் என சொல்லிக்கொள்ளும் திமுக இப்போது இந்தி தெரிந்த ஆட்களை தேடிக்கொண்டிருக்கிறது. அரசியலில் இதெல்லாம் சாதாரணம் தானே என ஒரு சிலர் சொல்லலாம். ஆனால் திமுகவின் இந்தி எதிர்ப்பு வரலாற்றை அலசினால், மொழியை வைத்து அவர்கள் செய்த அரசியல் பின்னணியை அறியலாம்.

இந்தி பொது மொழியாக தேவைப்பட்ட காரணம்

பிரிட்டிஷ் ஆட்சியின் போது , ​​ஆங்கிலம் அதிகாரப்பூர்வ மொழியாக இருந்தது. ஆனால் இந்தியா முழுக்க பலதரப்பட்ட மொழிகள் பேசப்பட்டன. சுதந்திர இயக்கம் வேகம் பெற்றபோது, ​​ஆங்கிலேய அரசுக்கு எதிராக மொழிவாரியான குழுக்களை ஒன்றிணைக்க இந்தியை பொதுவான மொழியாக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. 1918 ஆம் ஆண்டிலேயே, மகாத்மா காந்தி தக்ஷின் பாரத் ஹிந்தி பிரச்சார சபையை தொடங்கினார். இது தென்னிந்தியாவில் ஹிந்தியைப் பரப்புவதற்கான நிறுவனம் ஆகும். 1925 ஆம் ஆண்டில், இந்திய தேசிய காங்கிரஸ் தனது அதிகாரப்பூர்வ மொழியை ஆங்கிலத்திலிருந்து இந்திக்கு மாற்றியது. காந்தி மற்றும் ஜவஹர்லால் நேரு இருவரும் இந்தி ஆதரவாளர்களாக இருந்தனர். காங்கிரஸ் இந்தி பேசாத இந்தியாவின் மாகாணங்களில் இந்தி கற்பதை பிரச்சாரம் செய்ய விரும்பியது.

முதல் இந்தி எதிர்ப்புப் போராட்டம்

ராஜாஜி தலைமையிலான இந்திய தேசிய காங்கிரஸ் அரசாங்கத்தால் , மதராஸ் பிரசிடென்சி பள்ளிகளில் இந்தி கட்டாயக் கற்பித்தலை அறிமுகப்படுத்தியதை எதிர்த்து, 1937ல் முதல் இந்தி திணிப்பு எதிர்ப்புப் போராட்டம் தொடங்கப்பட்டது . மூன்று வருடங்கள் போராட்டம் நீடித்தது. மாநாடுகள், ஊர்வலங்கள், மறியல் நடந்தது. இரண்டு போராட்டக்காரர்கள் மரணம் அடைந்தனர். பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட 1198 பேர் கைது செய்யப்பட்டனர். 1939 ஆம் ஆண்டு காங்கிரஸ் அரசு ராஜினாமா செய்த பிறகு, 1940 பிப்ரவரியில், மதராஸின்கவர்னர் லார்ட் எர்ஸ்கின் அவர்களால் கட்டாய இந்தி கல்வி திரும்பப் பெறப்பட்டது.

திமுகவின் இந்தி எதிர்ப்பு கொள்கை

1949ல் திராவிடர் கழகத்தில் இருந்து பிரிந்த திராவிட முன்னேற்றக் கழகம் (திமுக) அதன் தாய் அமைப்பின் இந்தி எதிர்ப்புக் கொள்கைகளை பின்பற்றியது. திமுகவின் நிறுவனர் அண்ணாதுரை இதற்கு முன்பு 1940களில் இந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டங்களில் பங்கேற்றார். 1953 ஜூலையில் கல்லக்குடி என்ற ஊரின் பெயரை டால்மியாபுரம் என மாற்றியதை எதிர்த்து திமுக கல்லக்குடியில் போராட்டம் நடத்தியது. அந்த ஊரின் பெயர் ( ராமகிருஷ்ணா டால்மியாவின் பெயர் ) தென்னிந்தியாவை வடநாட்டால் சுரண்டப்படுவதைக் குறிக்கிறது என்று அவர்கள் கூறினர். 15 ஜூலை 1953ல், கருணாநிதி மற்றும் தி.மு.க.வினர் டால்மியாபுரம் ரயில் நிலையத்தின் பெயர் பலகையில் இருந்த ஹிந்தி பெயரை அழித்துவிட்டு தண்டவாளத்தில் படுத்துக் கொண்டனர். போராட்டத்தை தொடர்ந்து போலீசாருடன் ஏற்பட்ட மோதலில் திமுகவினர் இருவர் உயிரிழந்தனர், கருணாநிதி உட்பட பலர் கைது செய்யப்பட்டனர்.

திராவிட இயக்கத்தின் பிற்காலத் தலைவர்களான சி.என்.அண்ணாதுரை, மு. கருணாநிதி போன்ற பலரின் அரசியல் வாழ்க்கை இந்தப் போராட்டங்களில் பங்கேற்றதன் மூலம் தொடங்கியது. இந்தப் போராட்டங்களால் மாநிலத்தில் ஹிந்தியைக் கட்டாயமாகக் கற்பிப்பது நிறுத்தப்பட்டது. 1960களின் கிளர்ச்சிகள் 1967 தேர்தல்களில் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தோல்வியில் முக்கிய பங்கு வகித்தன. அப்போது இருந்து தமிழக அரசியலில் திராவிடக் கட்சிகளின் ஆதிக்கம் தொடர்கிறது.

இப்போது இந்தி தெரிந்த ஆட்கள் வேண்டுமாம்

இப்படி இந்திக்கு எதிராக மொழி அரசியல் செய்து ஆட்சிக்கு வந்த திமுக, இப்போது தேசிய அரசியலை நோக்கி ஆதிக்கம் செலுத்த வேண்டும் என நினைக்கிறது. இந்தியை எதிர்ப்பை கொள்கையாக கொண்ட திமுக இப்போது இந்தி மொழியில் கட்டுரை எழுத ஆட்களை தேடிக்கொண்டிருக்கிறது. திமுகவின் அதிகாரப்பூர்வ சமூக வலைதள பக்கங்களில், உடன்பிறப்புகளே விரைந்திடுங்கள் என்ற தலைப்பில், தமிழ், ஆங்கிலம், ஹிந்தி மொழிகளில் எழுத எழுத்தாளர்கள் தேவை என விளம்பரம் செய்துள்ளது. இந்தி எதிர்ப்பு போராட்டம் நடத்தியவர்கள், இந்தி தெரியாது போடா என்ற வாசகத்துடன் டீ ஷர்ட் அணிந்தவர்கள், இப்போது இந்தியில் எழுத ஆட்களை தேடுவது எதற்காக என்று பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.


Next Story
கதிர் தொகுப்பு
Trending News