Kathir News
Begin typing your search above and press return to search.

கிடைக்கும் கேப்பில் எல்லாம் ஆப்பு வைக்குறாரே...? பிரதமர் மோடியால் கதறும் பிரிவினைவாதிகள்...!

கிடைக்கும் கேப்பில் எல்லாம் ஆப்பு வைக்குறாரே...? பிரதமர் மோடியால் கதறும் பிரிவினைவாதிகள்...!
X

Mohan RajBy : Mohan Raj

  |  10 Oct 2023 5:18 PM GMT

இஸ்ரேலுக்கு கை கொடுத்து உள்நாட்டில் பிரிவினைவாதிகளுக்கு பிரதமர் மோடி கொடுத்த அடி...!

எல்லா போர்க்காலங்களில் ஒரே ஒரு நாடு தான் நடுவில் மாட்டிக்கொண்டு திண்டாடிக் கொண்டிருக்கும் அந்த வகையில் தற்போது காஸா முனை என்பது இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்திற்கும் இடையே பல ஆண்டுகளாக நிலவி வரும் போர் பதற்ற நிலைக்கு காரணமாக அமைந்துள்ளது.

இரண்டு நாட்டின் எல்லை பகுதியில் அமைந்திருக்கும் காஸா பகுதி யாருக்கு சொந்தம் என்பது தான் இந்த போர் பதற்ற நிலைக்கு காரணமாக கூறப்படுகிறது. மேலும் இந்த பகுதியை பாலஸ்தீனத்தின் ஹமாஸ் அமைப்பினர் தங்களுக்கு சொந்தமானதாக கருதி தங்களது கட்டுப்பாட்டில் வைத்து வருகின்றனர். ஆனால் இந்த ஹமாஸ் அமைப்பினரை இஸ்ரேல் மக்கள் தீவிரவாதிகள் என கருதுகின்றனர் கட்டுப்பாட்டில் இருக்கும் மேற்கு கரையின் சில பகுதிகளை இந்த அமைப்பை சேர்ந்த முகமது அப்பாஸ் தலைமையில் ஆட்சி நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது. அவ்வப்போது பாலஸ்தீனத்தின் ஆயுதக் குழுக்களுக்கும் இஸ்ரேலின் பாதுகாப்பு படையினருக்கும் இடையே மோதல்கள் நடந்து வந்துள்ளது இந்த நிலையில் தற்போது இந்த மோதல் தீவிரமடைந்து இரண்டு நாட்டிற்கும் இடையே போர் நடைபெற்று வருகிறது.

அதாவது திடீரென்று பாலஸ்தீனத்தின் எல்லையாக கருதப்படுகின்ற காஸா பகுதியிலிருந்து இஸ்ரேல் நாட்டுக்குள் ஏவுகணைகள் விடப்பட்டதாகவும் அதற்கு இஸ்ரேல் ஸ்டேட் ஆப் வார் என்று அறிவிப்பை விடுத்ததாகவும் கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி இஸ்ரேல் இந்த அறிவிப்பை வெளியிட்டதுமே இரு நாடுகளுக்கும் இடையே உள்ள போர் தீவிரமடைந்து முன்பில்லாத அளவிற்கு அதிக உயிர் சேதத்தையும் பெருமளவில் இழப்பும் ஏற்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

மேலும் இஸ்ரேல் நாட்டிற்குள் ஹமா ஸ் தீவிரவாதிகள் சட்டவிரோதமாக நுழைந்து துப்பாக்கி சூடு நடத்துவதாகவும் அதனால் இஸ்ரேல் மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று அந்த நாட்ட அரசு தரப்பில் அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்தப் போர் தொடர்பான வீடியோக்களே தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. இந்த தகவல் உலக நாடுகள் அனைத்திற்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியதோடு மட்டுமல்லாமல் தற்போது தானே ரஷ்யா உக்கிரன் போர் விவகாரம் உச்சம் பெற்று இருந்தது.

இந்த நிலையில் இஸ்ரேல் பாலஸ்தீனம் போர் பதற்ற நிலையா என்ற தகவலை ஜீரணிக்க முடியாமல் திகைத்து நின்ற உலக நாடுகள் மத்தியில் இந்தியா தனது முதல் கரத்தை இஸ்ரேல் நாட்டிற்கு அளித்துள்ளது. இந்திய நாட்டின் பிரதமர் நரேந்திர மோடி இஸ்ரேல் மீது பயங்கரவாத தாக்குதல் நடந்திருப்பது அதிர்ச்சி தருகிறது தாக்குதலில் உயிரிழந்த ஊரின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்துக் கொள்வதோடு இந்த கடினமான சூழலில் இஸ்ரேலுக்கு துணையாக இந்தியா நிற்கும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன் என அறிவித்துள்ளார்.

இப்படி ஒரு இஸ்லாமிய நாடான பாலஸ்தீனமும் கிறிஸ்தவ நாடான இஸ்ரேலுக்கும் இடையில் போர் நடைபெற்று வரும் பட்சத்தில் பயங்கரவாதத்தை ஒடுக்குவதற்காகவும் பாதிக்கப்பட்டுள்ள இஸ்ரேலை காப்பாற்ற வேண்டும் என்பதற்காகவும் பிரதமர் மோடி முதல் ஆளாக கை கொடுப்பதாக அறிவித்தது உலக நாடுகள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இது மட்டுமல்லாமல் இஸ்ரேல் விவகாரத்தில் பிரதமர் மோடி கை கொடுத்ததன் மூலம் உலக நாடுகள் பெரும்பாலானோர் இஸ்ரேல் நாட்டு பக்கம் திரும்பி உள்ளனர். தற்பொழுது இந்தியாவின் ஆதரவு இஸ்ரேலுக்கு என்ற பிரதமர் மோடி கூறிய காரணத்தினால் இஸ்ரேலுக்கு அதிக அளவு ஆதரவுகள் குவிந்து வருவது குறிப்பிடத்தக்கது.

இதனால் பாலஸ்தீன நாடு பிரதமர் மோடி மீது கோபமாக இருப்பதாகவும் ஆனாலும் எதுவும் செய்ய முடியவில்லை பிரதமர் இஸ்ரேல் பக்கம் இருக்கிறார் என்ற அதிருப்தியில் இருந்து வருவதாகவும் உலக நாட்டின் செய்திகள் தெரிவிக்கின்றன., இது மட்டுமில்லாமல் வழக்கம்போல் பிரதமர் மோடி எது செய்தாலும் விமர்சிக்கும் சிலர் இந்த விவகாரத்திலும் பிரதமர் இஸ்ரேலுக்கு ஆதரவு கொடுத்துவிட்டாரா, நாம் பாலஸ்தீனத்துக்கு ஆதரவு கொடுப்போம் என இணையங்களில் பதிவிட்டு வருகின்றனர். இஸ்ரேலுக்கு ஆதரவு கொடுத்து உள்நாட்டின் பிரிவினைவாதிகளை பிரதமர் மோடி அடையாளம் காட்டிவிட்டார் என விமர்சனங்கள் எழுந்துள்ளது...

Next Story
கதிர் தொகுப்பு
Trending News